நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் 2 வயது குழந்தை உள்பட 3 பேர் மரணம்
நாகர்கோவில்: நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பேர் மரணமடைந்துள்ளனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நோய்க்கு மதுரையை சேர்ந்த ஒருவர் பலியாகிவிட்டார். இந்த நிலையில் நாகர்கோவிலில் கொரோனா வார்டில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 3 பேர் ஏற்கெனவே பலியாகிவிட்டனர்.
இதையடுத்து இன்று ஒரே நாளில் அதே மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட 2 வயது ஆண் குழந்தை உள்பட 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துவிட்டனர். 3 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஏற்கனவே இதே வார்டில் 3 பேர் மரணமடைந்த நிலையில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்த 6 பேரது ரத்த பரிசோதனை முடிவுகள் வந்தால் மட்டுமே அவர்கள் கொரோனாவால் உயிரிழந்தனரா என தெரியவரும். 24 மணி நேரத்தில் ரத்த மாதிரிகளின் முடிவுகள் வந்தால்தான் தெரியும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications