என் சாவுக்கு பாஜக நிர்வாகி ரமேஷ் காரணம்.. ஓட்டலில் தூக்கில் தொங்கிய உரிமையாளர்.. பாய்ந்த வழக்கு
பாஜக நிர்வாகி ரமேஷ் என்பவர் மீது நாகர்கோவிலில் பரோட்டா கடை உரிமையாளரை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பாய்ந்துள்ளது.
நாகர்கோவில்: பாஜக நிர்வாகி ரமேஷ் என்பவர் மீது நாகர்கோவிலில் பரோட்டா கடை உரிமையாளரை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பாய்ந்துள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த பரோட்டா கடை உரிமையாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதற்கு காரணமாக இருந்ததாக பாஜக நிர்வாகி ரமேஷ் உள்பட ஐந்து பேர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
நாகர்கோவிலை சேர்ந்த பரோட்டா கடை உரிமையாளர் ராதாகிருஷ்ணன் தனது சாவுக்கு பாஜக நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் தான் காரணம் என ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி வைத்திருந்ததால் இந்த வழக்கு பாய்ந்துள்ளது. என்ன நடந்து என்பதை இப்போது பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருளப்பபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த 35 வயதாகும் ராதாகிருஷ்ணன் குத்தாலம் மெயின் ரோட்டில் பரோட்டா கடை ஒன்று நடத்தி வந்திருக்கிறார்.

போலீசுக்கு தகவல்
இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு அந்த ஓட்டலில் திடீரென ராதாகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நேரில் வந்து ராதாகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

திருமணம்
அதன்பின்னர் விசாரணை நடத்தினார்கள் விசாரணையை தொடர்ந்து ராதாகிருஷ்ணனின் தாயார் நாடாச்சிசங்கம் சுசீந்திரம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், "எனக்கு 5 மகள்கள் மற்றும் மகன் (ராதாகிருஷ்ணன்) உள்ளனர். இதில் ராதாகிருஷ்ணன் தனது 5 சகோதரிகளையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு தான் திருமணம் செய்யாமல் இருந்து வந்தார்.

சுசீந்திரம்
எனது மகன் கடனை அடைக்க குடும்ப சொத்தை விற்றார். அப்போது எனது கணவரின் உறவினர்கள் அதனை விற்க விடாமல் நீதிமன்றத்தை அணுகினர். சொத்தை விற்று பணம் கொடுப்பதாக கூறியும் அவர்கள் உடன்படவில்லை. எனது மகனை அவர்கள் தொடர்ந்து மிரட்டியுள்ளனர். இதனால் எனது மகன் தற்கொலை செய்து கொண்டான் " இவ்வாறு ராதாகிருஷ்ணனின் தாயார் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அத்துடன் ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக எழுதிய கடிதத்தை அவரது தாயார் சுசீந்திரம் காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.

பாய்ந்த வழக்கு
இதையடுத்து புகாரின் அடிப்படையில், சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர், அந்த கடிதத்தில், எனது சாவுக்கு காரணமானவர்கள் வழக்கறிஞர்கள் ரமேஷ், பிரபு, பாலாஜி, பாஸ்கர், கண்ணன், ஆகிய 5 பேரின் பெயரை ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையல் அந்த 5 பேர் மீது சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ரமேஷ் பாரதிய ஜனதா கட்சியின் ராஜகாமங்கலம் கிழக்கு ஒன்றிய பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!











Click it and Unblock the Notifications