இனி தப்பிக்க முடியாது.. நாகர்கோவில் காசி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.. ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட காசி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட நாகர்கோவிலை சேர்ந்த காசி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    கோழி பண்ணையில் சிக்கிய காசியின் லேப்டாப்... பரபரப்பு தகவல்கள்

    பொள்ளாச்சி பாலியல் கொடூரங்களுக்கு இணையாக கன்னியாகுமரியில் நடந்த பாலியல் கொடூரங்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த தங்கபாண்டியனின் மகன் காசி என்ற சுஜிதான் இந்த குற்றங்களை செய்தவர். 26 வயது நிரம்பிய இவர் கடந்த சில வருடங்களாக பல பெண்களை காதலித்து ஏமாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரை காதலித்து இவர் ஏமாற்றி இருக்கிறார். பேஸ்புக் மூலமாக அந்த பெண்ணுடன் நட்பான இவர் காதலித்து, அவரிடம் லட்ச லட்சமாக பணம் பறித்து ஏமாற்றி இருக்கிறார்.

    பலரை ஏமாற்றினார்

    பலரை ஏமாற்றினார்

    அதோடு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்களை இணையத்தில் பதிவிட போவதாக கூறி பணம், நகை என்று தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காசிக்கு எதிராக வழக்கு பதியப்பட்டு காசி கைது செய்யப்பட்டார். அதேபோல் நாகர்கோவிலில் இன்னொரு பெண்ணும் காசிக்கு எதிராக புகார் அளித்தார்.

    பெரிய அதிர்ச்சி

    பெரிய அதிர்ச்சி

    இந்த நிலையில் கைது செய்யப்பட காசியிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் காசியின் போனில் நிறைய பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை மருத்துவர் போலவே பல பெண்களை இவர் தமிழகம் முழுக்க காசி ஏமாற்றி இருக்கிறார். சில பிரபலங்களின் மகள்களை கூட ஏமாற்றி பணம் பறித்து வந்தது அம்பலம் ஆகியுள்ளது.

    வீடு கட்டினார்

    வீடு கட்டினார்

    இப்படி மோசடி செய்து சேர்த்த பணம் மூலம் காசி நாகர்கோவிலில் 4 மாடி வீடு ஒன்றை கட்டி உள்ளார். பொள்ளாச்சி பாலியல் குற்றத்திற்கு இணையாக பெண்களை மயக்கி இவர் ஏமாற்றி உள்ளார். சமூக வலைத்தளங்களில் பெண்களை பிடித்து அவர்களுடன் பழகி, பின் காதலித்து ஏமாற்றி உள்ளார். அந்த பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட போவதாக கூறி இத்தனை வருடம் இவர் பணம் பறித்து வந்துள்ளார்.

    குண்டர் சட்டம்

    குண்டர் சட்டம்

    இந்த குற்றங்கள் வெளியே வந்துள்ள நிலையில் காசியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நெல்லை நாங்குநேரி சிறையில் உள்ள காசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் காசியால் பெயிலில் வர முடியாது குமரி காவல்துறையினரின் பரிந்துரையை ஏற்று குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேர் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்றும் கூறுகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+