வேலைக்காரருடன் தகாத உறவு.. சாம்பார் ஊற்றியே கணவனின் கல்லீரலை "காலி" செய்த ஒத்த ரோசா.. விக்கித்த நாகை
சாம்பாரில் விஷம் வைத்து கணவனை கொன்ற மனைவி கைதானார்
நாகை: சாம்பார் வைத்தே கணவனை காலி செய்ய திட்டம் தீட்டிய நிலையில், சம்பந்தப்பட்ட கிரிமினல் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்..!
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ளது சடையன்காடு என்ற பகுதி.. இங்கு வசித்து வந்தவர் தேவேந்திரன்.. 47 வயதாகிறது..
கீழையூர் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.. இவரது மனைவி பெயர் சூர்யா.. 26 வயதாகிறது.. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தேவேந்திரனுக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது..

சிகிச்சை
இதனால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துள்ளார்.. அப்போதுதான், மஞ்சள் காமாலை நோயினால் அவர் பாதிக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது.. எனவே, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்... அதற்கு பிறகு உடல்நலம் தேறி கடந்த மாதம் 15-ம் தேதி வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் கடந்த 4-ம் தேதி மறுபடியும் தேவேந்திரனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.. அதனால், திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..

இறுதிச்சடங்கு
எவ்வளவோ சிகிச்சை தந்தும் தேவேந்திரனை காப்பாற்ற முடியவில்லை.. கடந்த 6-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.. இதனையடுத்து தேவேந்திரனின் உடல் அன்றே அவரது ஊருக்கு கொண்டு வரப்பட்டது.. அவசர அவசரமாக இறுதிசடங்கும் நடந்து முடிந்தது. இதற்கு பிறகு தேவேந்திரன் இறந்த அடுத்த நாளே, மனைவி சூர்யா கணவன் இறந்த துக்கம் எதுவுமே இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்துள்ளார்.. அத்துடன் எந்நேரமும் போனில் ஜாலியாக பேசி வந்திருக்கிறார்..

கள்ளக்காதல்
இதை பார்த்து, தேவேந்திரனின் உறவினர் சதீஷ்கண்ணா என்பவர் சந்தேகம் அடைந்தார்.. அதனால், சூர்யாவின் செல்போனை திடீரென ஆய்வு செய்தார்.. அப்போதுதான் சூர்யாவின் கள்ளக்காதல் பற்றிய விஷயம் தெரியவந்தது.. அந்த கள்ளக்காதலன் பெயர் சந்திரசேகரன்.. 32 வயதாகிறது.. இதே வீட்டில் 15 வருஷமாக வேலை பார்த்து வந்தவர்தான் அந்த சந்திரசேகரன்.. இந்த கள்ளக்காதல் விவகாரம் உறுதியானதால், தேவேந்திரனின் மரணத்தின்மீது சதீஷ்கண்ணாவுக்கு மேலும் சந்தேகம் அதிகரித்தது..

சாம்பார்
அதனால், வேட்டைக்காரனிருப்பு போலீசில் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் தீவிரமாக விசாரணையை ஆரம்பித்தனர். சூர்யாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, மொத்த உண்மையையும் சொல்லி விட்டார்.. போலீசிலும் வாக்குமூலம் தந்துள்ளார்.. சூர்யா மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவராம்.. இந்த வறுமையை பயன்படுத்தி தேவேந்திரனின் வீட்டார் கட்டாய கல்யாணம் செய்து வைத்துள்ளனர்...

ஸ்லோ பாய்சன்
ஆனாலும் திருமணத்தில் விருப்பமில்லாமல் சம்மதித்து, விருப்பமில்லாத வாழ்க்கையை சூர்யா வாழ்ந்து வந்துள்ளார்.. அப்போதுதான், வீட்டில் வேலைக்கு சேர்ந்த சந்திரசேகரனுக்கும் சூர்யாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.. இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் தேவேந்திரனுக்கு தெரியவரவும், சூர்யாவை கண்டித்துள்ளார்.. இதனால் எரிச்சலடைந்த கள்ள ஜோடி, தேவேந்திரனை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.. உடனே கொன்றுவிட்டால் போலீசில் சிக்கி கொள்வோம் என்பதால், கொஞ்சம் கொஞ்சமாக விஷம் வைத்து கொள்ள முடிவு செய்தனர்..

சாம்பார்
அதன்படியே தேவேந்திரன் சாப்பிடும்போது, சாம்பாரில் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை கலந்து தந்துள்ளார் சூர்யா.. ஸ்லோ பாய்சன் உடம்பில் சேர்ந்து, கடைசியில் கல்லீரலை பாதித்துவிட்டது.. மஞ்சள் காமாலை, கல்லீரல் பிரச்சனை வரை கொண்டு சென்றுவிட்டது.. அதனாலேயே தேவேந்திரன் உயிரிழந்த நிலையில், யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அவசரமாக உடலை எரித்துள்ளனர்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து, போலீசார் இந்த கள்ளக்காதல் ஜோடியை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications