எடப்பாடி மாதிரி என் வீட்டில் கூட என்னை தேட மாட்டாங்க தெரியுமா.. கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னை தேடும் அளவுக்கு என் வீட்டில் கூட என்னை தேடவில்லை என சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் கிண்டல் செய்துள்ளார்.

Recommended Video

    எடப்பாடி மாதிரி என் வீட்டில் கூட என்னை தேட மாட்டாங்க தெரியுமா.. கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்

    வரும் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டிகள் கடுமையாக உள்ளதால் பிரச்சாரங்களும் அனல் பறக்கின்றன. நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

    அதிமுக ஆட்சியில்

    அதிமுக ஆட்சியில்

    அப்போது அவர் கூறுகையில் அதிமுக ஆட்சியிலிருந்து செல்லும் போது தமிழகத்திற்கு 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துவிட்டு அரசு கஜானாவை காலி செய்துவிட்டது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.

    அதிமுக ஆட்சி

    அதிமுக ஆட்சி

    அதிமுக ஆட்சியின் போது ஒரு கோடி பேருக்கு மட்டும்தான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற 9 மாதக் காலத்தில் 10 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. கோவையில் கொரோனா வார்டுக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதனால் அவரை அனைவரும் பாராட்டினர்.

    பொய்யான வாக்குறுதி

    பொய்யான வாக்குறுதி

    நான் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து விட்டு காணாமல் போய்விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். அத்துடன் என்னை தேடியும் வருகிறார். அவர் தேடும் அளவுக்கு என்னை என் வீட்டில் கூட தேடவில்லை. ராகுல் காந்தி, பிரதமர் மோடியை பார்த்து சவால் விட்டுள்ளார்.

     உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்

    தமிழகத்தில் திமுக ஆட்சி இருக்கும் வரை பாஜகவால் கால் ஊன்ற முடியாது. தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தின் போது திமுகவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என உதயநிதி தெரிவித்தார். நாகர்கோவில் மாநகராட்சியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் 52 வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+