விபத்து நடந்ததுபோல் நாடகமாடி வழிப்பறி செய்துவிட்டு தப்பிய இருவர் விபத்தில் பலி! நாமக்கல் அருகே ஷாக்!
நாமக்கல்: நாமக்கல் அருகே விபத்தில் சிக்கியது போல் நாடகமாடி தொழிலாளியிடம் பணம், செல்போனை பறித்துக்கொண்டு டூ வீலரில் தப்பிய 2 பேர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் கோட்டை தெருவை சேர்ந்தவர் நவீன் (31). இவர், சென்னையை சேர்ந்த நண்பரான மாரி (25) என்பவருடன் நேற்று டூ வீலரில் வெளியே சென்றார். அப்போது நாமக்கல் மோகனூர் சாலை கணவாய்பட்டி பகுதியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அருகே நவீன் மற்றும் மாரி இருவரும் டூவீலரில் இருந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது போல் நடித்தனர்.

அந்த வழியாக வந்த தொழிலாளி பொன்னார் (31) என்பவர் இதைப் பார்த்து இருவருக்கும் உதவச் சென்றுள்ளார். அப்போது 2 பேரும் பொன்னாரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், பணத்தை பறித்துக் கொண்டு வண்டியில் வேகமாக தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், சிறிது தூரத்தில் அவர்கள் சென்ற பைக் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியதில் அவர்கள் இருவரும் கீழே விழுந்தனர். இதில் மாரி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த நவீன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தன்னிடம் பணம், செல்போனை பறித்துச் சென்ற இருவர் கண் முன்னே விபத்தில் சிக்கி பலியானதை பார்த்துள்ளார் பொன்னார். இந்தச் சம்பவம் குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications