தாயுடன் டிரைவருக்கு கள்ளக்காதல்.. எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.. கல்லை தூக்கி.. கலங்கிய நாமக்கல்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த ராமநாதபுரம் புதூரை சேர்ந்த டிரைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்துள்ளன.
சேந்தமங்கலம் ராமநாதபுரம் புதூரை சேர்ந்த 45 வயது டிரைவர் சுரேஷ் என்பவர் இரு தினங்களுக்கு முன் அவரது வீட்டின் முன்னர் பிணமாக மீட்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, மார்ச் 29ம் தேதியன்று காலை சுரேஷ் வேலைக்கு சென்றிருக்கிறார். இவருக்கு திருமணமாகி 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
ஆனால் இவருடைய மனைவி 12 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். எனவே சுரேஷ் தனியாகவே தனது மகளை வளர்த்து வந்திருக்கிறார். தனிமையில் இருந்த சுரேஷுக்கு பொட்டிரெட்டி பட்டியை சேர்ந்த கஸ்தூரி எனும் பெண்ணுடன் நடப்பு ஏற்பட்டிருக்கிறது. கஸ்தூரிக்கு 19 வயதில் ஒரு மகன் இருக்கிறார். தற்போது இவர் என்ஜினியரிங் கல்லூரி படித்து வருகிறார். இவருடைய தந்தை, அதாவது கஸ்தூரியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார்.

நட்பு டூ காதல்
இந்நிலையில் கஸ்தூரிக்கும் சுரேஷுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. தொடக்கத்தில் தனிமையில் ஊருக்கு வெளியே சந்தித்து வந்த இருவரும் பின்னர் கஸ்தூரியின் வீட்டிற்குள்ளேயே சந்தித்துக்கொள்ள தொடங்கினர். இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் தெரிய தொடங்கியிருக்கிறது. ஆனாலும் பெரியதாக எந்த பிரச்னையும் வரவில்லை. இந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சுரேஷ் ஓவராக அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டிருக்கிறார். அதாவது நினைத்த நேரத்திற்கு வீட்டிற்கு வருவது, வீட்டிற்குள் கஸ்தூரியின் மகன் இருந்தாலும் அது குறித்து கவலை கொள்ளாமல் இருப்பது என சுரேஷ் ஆட்டம் போட்டியிருக்கிறார்.

குடிபோதை
இதில் குடிபோதை வேறு. இதை கவனித்து வந்த கஸ்தூரியின் மகன் இந்த உறவை முறித்துக்கொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால் மகன் சொன்னதை கஸ்தூரியும், சுரேசும் கண்டுக்கொள்ளவில்லை. கடந்த ஒரு வாரமாக சுரேஷ் குடித்துவிட்டு கஸ்தூரியின் வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரியின் மகன் சுரேஷை தாக்க முற்பட்டிருக்கிறார். ஆனால் கஸ்தூரி இடையில் தடுத்ததால் சுரேஷ் அன்று உயிர் பிழைத்திருக்கிறார். இதனையடுத்து கஸ்தூரி தனது மகனை சமாதானம் பேசி அனுப்பி வைத்திருக்கிறார். அன்று சண்டை இப்படியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால் இரு தினங்களுக்கு முன்னர் அதாவது மார்ச் 28ம் தேதியன்று இரவு மீண்டும் சுரேஷ் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்திருக்கிறார்.

தாக்குதல்
இதனை கண்டு ஆத்திரம் தாங்காமல் சுரேஷை கஸ்தூரியின் மகன் கடுமையாக தாக்கியிருக்கிறார். பின்னர் ஒரு கல்லை கொண்டு தலையில் ஓங்கி அடித்ததில் சுரேஷ் அதே இடத்தில் சுருண்டு விழுந்திருக்கிறார். பின்னர் ஒரு லோடு ஆட்டோவை பிடித்து சுரேஷின் பைக்கையும், சுரேஷையும் அவரது வீட்டின் முன்பு கொண்டு சென்று போட்டியிருக்கிறார். சுரேஷ் போதையில் இருப்பதாக கூறியதால் ஆட்டோ டிரைவரும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. இதனையடுத்துதான் காலை சுரேஷின் மகள் வீடு திறந்து பார்த்போது சுரேஷ் சடலமாக கிடந்தது தெரிய வந்துள்ளது.

கொலை
பின்னர் அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரித்ததில் இவ்வளவு விஷயங்கள் வெளியில் தெரிய வந்துள்ளன. சம்பவத்தையடுத்து கஸ்தூரியின் மகன் தலைமறைவாகியுள்ளார். ஆனால் காவல்துறையினர் சுரேஷை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications