அதிமுகவை காப்பாத்தணும்னா திமுகவுக்கு ஓட்டு போடுங்க.. விநோத கோரிக்கையோடு கொமதேக ஈஸ்வரன் பிரச்சாரம்!
நாமக்கல்: அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அதிமுக தொண்டர்கள் இந்தத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கொமதேக தலைவர் ஈஸ்வரன் வித்தியாசமான கோரிக்கையை வைத்து வாக்கு சேகரித்து வருகிறார்.
லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. லோக்சபா தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தீவிரமாக தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு கொமதேக சார்பில் வேட்பாளராக மாதேஷ்வரன் நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், கொமதேக தலைவர் ஈஸ்வரன், திமுக கூட்டணிக்கு ஆதரவாக கொங்கு வட்டார பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்தவகையில் ஈரோட்டில் திமுக வேட்பாளர் பிரகாஷுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன். அப்போது பேசிய அவர், "அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அதிமுக தொண்டர்கள் அனைவரும், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர் பேசுகையில், "கூட்டணியில் இருந்து வெளியே வருவதுபோல் எடப்பாடி பழனிசாமி வெளியே வந்து தேர்தலுக்குப் பின் மீண்டும் பாஜகவை ஆதரிப்பார். ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணிக் கட்சிகளை பாஜக அழித்துவரும் நிலையில் வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆனால் அதிமுக என்ற கூட்டணிக் கட்சியை பாஜக அழித்துவிடும். அதன் பின்னர் அதிமுக என்ற கட்சியே இருக்காது.
எனவே அதிமுக காப்பாற்றப்பட வேண்டும் என்றால் முதலில் பாஜக தோல்வி அடைய வேண்டும். பாஜக தோல்வி அடைய வேண்டுமென்றால் அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்" என்று பேசியுள்ளார். அதிமுகவினர் அனைவரும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கொங்கு ஈஸ்வரன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications