வங்கி ஊழியரின் மனைவி உள்பட 3 பேர் சடலமாக மீட்பு.. கணவர் எங்கே? கடிதத்தில் இருந்த பகீர் தகவல்
நாமக்கல்: நாமக்கல்லில் தனியார் வங்கி ஊழியரின் வீட்டில் அவரது மனைவி, மகள், மகன் ஆகியோர் தூக்கில் பிணமாக கிடந்தனர். தனியார் வங்கி ஊழியர் மாயமாகி உள்ள நிலையில் கொலையா? தற்கொலையா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மாயமான வங்கி ஊழியர் எழுதி வைத்த கடிதம் கிடைத்துள்ளது. அதில் இருக்கும் தகவல் திடுக்கிட வைக்கிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த குருசாமி பாளையத்தை சேர்ந்தவர் பிரேம் ராஜ். இவர் தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். பணி நிமித்தமாக நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள பதி நகரில் குடியேறினார் பிரேம் ராஜ்.

பிரேம் ராஜ் திருமணமானவர். இவரது மனைவி பெயர் மோகனப்பிரியா. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகளுக்கு ஒன்றரை வயது ஆகிறது. பெயர் ஸ்ரீபிரிநிதி. மகன் பெயர் ஸ்ரீபிரித்ராஜ். பிறந்து 6 மாதங்கள் மட்டுமே ஆகிறது.
திருமணம் ஆன புதிதில் இந்த ஜோடி மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். இந்நிலையில் தான் இன்று திடீரென்று வீட்டில் 3 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். பிரேம்ராஜின் மனைவி மோகனப்பிரியா, மகள் ஸ்ரீபிரிநிதி, மகன் ஸ்ரீபிரித்ராஜ் ஆகியோர் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர். இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் வந்து அவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது வங்கி ஊழியரான கணவர் பிரேம் ராஜ் மாயமாகி இருந்தார். அவரது நிலை என்ன? என்பது தெரியவில்லை. இதனால் அவர்கள் 3 பேரின் சாவிலும் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வீட்டை அதிரடியாக சோதனையிட்டனர். அப்போது கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதில் திடுக்கிட வைக்கும் தகவல் இருந்தது.
அந்த கடிதத்தில், ‛‛பிரேம்ராஜ் ஆகிய நான் ஆன்லைன் மோசடி மூலமாக கடந்த பத்து நாளில் ரூ.50 லட்சம் ஏமாந்துவிட்டேன். இதை யாரிடமும் சொல்ல எனக்கு தைரியம் இல்லை. எனவே நான்கு பேரும் சேர்ந்து தற்கொலை செய்ய முடிவு எடுத்துவிட்டோம். எங்களை மன்னித்து விடுங்கள்'' என்று கூறப்பட்டு இருந்தது. இந்த கடிதம் என்பது பிரேம்ராஜ் சார்பில் எழுதப்பட்டுள்ளது போன்று உள்ளது.
அந்த கடிதத்தில் பிரேம் ராஜின் அம்மா, அவரது மனைவி மோகனப்பிரியாவின் தந்தையின் செல்போன்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அவர் மாயமாகி உள்ளார். வீட்டில் அவரது மனைவி, மகள், மகன் ஆகியோரின் உடல்கள் மட்டுமே உள்ளன. இதனால் இந்த வழக்கில் குழப்பம் நிலவி வருகிறது. பிரேம் ராஜ் எங்கே? கடன் பிரச்சனையில் அவர் தனது மனைவி, மகள், மகனை கொன்று உடலை தூக்கில் தொங்கவிட்டு தப்பி சென்றாரா? இல்லாவிட்டால் அவரும் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications