கூட்டுறவு வங்கி மூலம் ரூ.3739 கோடி கடன் டார்கெட்.. பயிர்க் கடனில் ஹேப்பி நியூஸ்.. நாமக்கல்லில் சபாஷ்
நாமக்கல்: கூட்டுறவு வார விழாவை ஒட்டி நடத்தப்படும் சிறப்பு முகாமில், சிறு வணிகப் பிரிவில், அதிகம் பேருக்கு கடன் வழங்க வேண்டும் என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகளுக்கு, கூட்டுறவு துறை அறிவுறுத்தி உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், கூட்டுறவு வங்கி மூலம், பயிர் கடன், விவசாயம் சார்ந்த கடன் உள்பட 3,739 கோடி ரூபாய் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த ஹேப்பி நியூஸ் ஒன்று நாமக்கல்லில் இருந்து வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், 4,473 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. சாகுபடி நேரத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி, ஏராளமான விவசாயிகள் பயிர் கடன் பெற்று வருகின்றனர்.

கூட்டுறவு கடன் சங்கங்கள்
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் 4473 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன.. விவசாயம் மற்றும் விவசாயம் சாராத கடன்கள் வழங்குவதுதான் மேற்கண்ட சங்கங்களின் நோக்கமாக இருந்து வருகிறது.
இந்த சங்கங்களில், லட்சக்கணக்கான விவசாயிகள் உறுப்பினர்களான உள்ள நிலையில், விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிலும் கடந்த ஆண்டு 46,000 கோடி ரூபாய் அளவிற்கு, பலவகை கடன்கள் வழங்கப்பட்டு உள்ளதை மறுக்க முடியாது.
பயிர்க்கடன்
ஆனாலும், குறிப்பிட்ட காலத்திற்குள், விண்ணப்பிக்கும் கடனை விவசாயிகளால் உடனடியாக பெற முடிவதில்லை என்ற புகார்கள் கிளம்பின. எனவேதான், பயிர் கடனுக்கு விண்ணப்பித்த அன்றே, விவசாயிகளின் வங்கி கணக்கில் கடன் தொகையை செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், கூட்டுறவு துறை முடிவு செய்தது.
அதன்படியே, தர்மபுரி மாவட்டத்திலுள்ள 131 தொடக்க கூட்டுறவு சங்கங்களில், முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் துவக்கி வைத்திருந்தார்.. இதன்மூலம் வங்கிக்கு செல்லாமலே, விவசாயிகள், ஆன்லைனிலேயே விண்ணப்பித்து 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும் .
இந்நிலையில், கூட்டுறவு வங்கி மூலம், பயிர் கடன், விவசாயம் சார்ந்த கடன் உள்பட, 3,739 கோடி ரூபாய் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1,911 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, 51 சதவீதம் இலக்கை அடைந்துள்ளதாக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து குட்நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது.
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில், 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2025 ஆரம்ப விழா நடைபெற்றது.
பயிர்க்கடன் குறித்து குட்நியூஸ்
இந்த விழாவின் முடிவில் செய்தியாளர்களிடம் ராஜேஷ்குமார் சொல்லும்போது, "அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 2025', முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு, வருகிற 20ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
சமூக பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கூட்டுறவு இயக்கம், இங்கிலாந்தில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டாலும், இன்று உலகம் முழுவதிலும் பரவி உள்ள ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு, பொருளாதார முன்னேற்றத்திற்காக அடித்தளம் அமைத்து வருகிறது.
இலக்கை எட்டிய பயிர்க் கடன்
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, கூட்டுறவு வங்கிகள் மூலம் இந்த வருடம் விவசாயம், பயிர்க் கடன், விவசாயம் சார்ந்த கடன் பிற கடன்கள் உள்பட, 3739 கோடி ரூபாய் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், இதுவரையிலும் 1,911 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.. இதன்மூலம் 51 சதவீத இலக்கை எட்டி விட்டோம்.. ,இதில் பயிர் கடன் மட்டும் ரூ.650 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.. இந்த வருட முடிவிற்குள் முழு இலக்கையும் நாங்கள் எட்டி விடுவோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
முன்னதாக இந்த விழாவில் பங்கேற்ற கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமையேற்று உறுதிமொழி வாசித்ததை கூட்டுறவு பணியாளர்கள், கூட்டுறவாளர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி., கொடி ஏற்றி வைத்து, கூட்டுறவு வாரவிழாவை துவக்கி வைத்திருந்தார்.
மேலும், கூட்டுறவு சங்கங்களின் நாமக்கல் மண்டல இணைப்பதிவாளர் அருளரசு, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் சந்தானம், வங்கி இயக்குனர்கள் நவலடி, ராஜேந்திரன், கூட்டுறவாளர்கள் உள்பட ஏராளமானோர் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பித்திருந்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications