''ராஜேஷ்குமார் எம்.பி. மட்டும் இல்லையென்றால்..'' திமுக தொண்டர் அணி நிர்வாகியின் உருக்கமான கடிதம்!
நாமக்கல்: ராஜேஷ்குமார் எம்.பி. மட்டும் உதவிசெய்யவில்லை என்றால் தனது மகன் உயிரோடு இருந்திருக்கவே வாய்பில்லை எனக் கூறி திமுக தொண்டர் அணி நிர்வாகி நக்கீரன் உருக்கமுடன் ஓபன் லெட்டர் எழுதியிருக்கிறார்.
வெறுமனே மருத்துவமனை டீனுக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் பரிந்துரை செய்ததோடு மட்டுமல்லாமல் சிகிச்சை முடியும் வரை தொலைபேசியில் அக்கறையோடு அழைத்து பேசியதாக நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தொண்டர் அணி நிர்வாகி நக்கீரன் எழுதிய ஓபன் லெட்டர் வருமாறு;
''எனது மகன் வீரபாண்டியன் வயது (44) கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக மூளை நரம்பியல் பிரச்சனையால் பெரிதும் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வந்தான். எனது மகன் பெயிண்டர் தொழில் பெரிதான வருமானம் இல்லை.
இந்த உடல் சார்ந்த பிரச்சனையால் பெரிதும் பாதிக்கப்பட்டான்.மூளை நரம்பியல் சம்பந்தபட்ட பிரச்சனைக்காக சேலம் காவேரி மருத்துவமனை,சேலம் தரண் மருத்துவமனை சென்றோம். அங்கு மருத்துவர்கள் நரம்பியல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இதற்கு ரூ.6 லட்சம் செலவாகும் என கூறினார்கள்.
மிகவும் சிரமமான ஆப்ரேஷன் என கூறினார்கள். இவ்வளவு பணம் செலவு செய்ய முடியாது என்பதால் நாமக்கல் அரசு மருத்துவமனை மற்றும் சேலம் அரசு மருத்துவமனை சென்றோம். இங்கும் இது மிக கடினம் என கூறி உயிருக்கு ஆபத்தாக முடியும் என கூறிவிட்டனர்.
பின்பு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 1 மாத காலம் சிகிச்சை பெற்று வந்தோம். அங்கும் எந்த பயனும் அளிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் மாநிலங்களவை உறுப்பினர், மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் அவர்களை சந்தித்து எனது மகனின் உடல்நிலையை பற்றி கூறினேன்.

உடனே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்ரமணியன் அவர்களை தொடர்பு கொண்டு பேசி, உடனே சென்னை ஒமந்தூரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க செய்து ரூ.5 லட்சத்திற்கான மருத்துவத்தை காப்பீட்டில் பெற்று இன்று அறுவை சிகிச்சை முடிந்து என் மகன் உயிரோடும், நலமோடும் இருக்கிறான்.
இதற்கு முழு முதற் காரணமாகவும், இச்சிகிச்சைக்காக ஒமந்துரர் மருத்துவமனைக்கு பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெரிதும் உதவியும், இது போன்ற உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கு உதவும் அன்பு இளவல் கேஆர்என். ராஜேஸ்குமார் அவர்களுக்கு எங்களது குடும்பத்தின் சார்பாக கோடான கோடி நன்றிகள்.''












Click it and Unblock the Notifications