"அசிங்கம்".. இருட்டில், நடுரோட்டில் "சுடிதார் பெண்".. கிட்ட நெருங்கிய போலீஸ்.. கடைசியில் பார்த்தால்?
நாமக்கல்: நைட் நேரத்தில், நடுரோட்டில், சுடிதார் அணிந்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.. இந்த பெண்ணை அடக்குவதற்காக, நம் போலீசாரே படாதபாடு பட்டுவிட்டனர்.. என்ன நடந்தது?
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் அங்குலட்சுமி.. 35 வயதாகிறது.. இவருக்கு திருமணமாகிவிட்டது.. ஆனால், கணவர் இறந்துவிட்டார்.. இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்கள்..

மக்காச்சோளம்: அவ்வப்போது கிடைக்கும் சின்ன சின்ன வேலைகளை செய்து அன்றாட வாழ்க்கையை அவர் நடத்தி வந்துள்ளார். இருந்தாலும், வாழ்வாதாரத்துக்கு வேறு ஏதாவது ஒரு தொழிலை செய்யலாமா? என்று யோசித்து வந்தார்.. அதன்படி, தள்ளு வண்டியில் சோளக்கருது, (சோளம்) விற்கும் தொழிலை துவங்கியுள்ளார்..
இதனிடையே, கணவன் இறந்ததுமே, அங்குலட்சுமிக்கு வேறொரு இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது... அந்த இளைஞருடன் சேர்ந்து ஆட்டம் போட்டு வந்துள்ளார்.. 2 பேரும் சேர்ந்துதான் தண்ணி அடிப்பாங்களாம்.. கஞ்சா பழக்கமும் சேர்ந்து கொண்டுள்ளது.. இந்நிலையில், நேற்றிரவு வழக்கம்போல் கடை வியாபாரத்தை முடித்து, 8 மணி அளவில், தான் வசிக்கும் குமாரபாளையத்திலிருந்து, ஈரோடு மரப்பாலம் பகுதிக்கு வந்தார் அங்குலட்சுமி..
கஞ்சா பழக்கம்: அப்போது தன்னிடம் இருந்த மொத்த பணத்திலும் மது அருந்திவிட்டு, கஞ்சாவையும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.. மது + கஞ்சா இரண்டையும் அடுத்தடுத்து போட்டுக் கொண்டதால், மண்டைக்கு போதை ஏறிவிட்டது.. இதனால், மரப்பாலம் பகுதியில் இருந்து கிளம்பி, ஈரோடு மாநகரின் பிரதான மையப்பகுதியான பன்னீர்செல்வம் பூங்கா ஜங்ஷனுக்கு வந்தார்.. வழியெல்லாம் தள்ளாடிக் கொண்டே வந்தார்..
இந்த ஜங்ஷனில் நின்றுகொண்டு, வழியில் போகும் அனைவரிடமும் வம்பிழுத்துள்ளார்.. தேவையில்லாமல் பிரச்சனை செய்து, அவர்களிடம் தகராறு செய்திருக்கிறார்.. நடுரோட்டிலேயே இவர் செய்த ரகளையை பார்த்து பொதுமக்கள் அதிர்ந்து நின்றார்கள்.. பிறகு, எதிரே வந்த அரசு பஸ்கள் முன்னாடி நின்றுகொண்டார்.. இந்த அட்டகாசத்தை பார்த்து, பஸ் டிரைவர்களால், வண்டியை எடுக்க முடியவில்லை.. அங்கேயே நிறுத்திவிட்டனர்.. பஸ்களை வழிமறித்து, அந்த பஸ்கள் முன்பு, கொஞ்ச நேரம் டான்ஸ் ஆடினார்..
அங்குலட்சுமி: அப்போது அங்கிருந்தவர்கள் அங்குலட்சுமியிடம் சென்று அவரை கட்டுப்படுத்த முயன்றனர்.. ஆனால், கிட்ட நெருங்கி வந்தவர்களை எல்லாம், பாய்ந்து பாய்ந்து தாக்கினார்.. அப்போதுதான், உச்சக்கட்ட போதையில் அவர் இருப்பது அனைவருக்கும் தெரியவந்தது.. அதனால், அவருக்கு உதவி செய்ய வந்தவர்களும், உடனே விலகி தூரமாக சென்றுவிட்டனர்.. பிறகு, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்தனர்.. அங்குலட்சுமியை சமாதானப்படுத்த முயன்றனர்.
ஆனால் அவரை யாராலும் அடக்கவே முடியவில்லை.. வருவோர் போவோரை எல்லாம் அடிக்க பாய்ந்து வந்தார்.. ஒரு பஸ் அவரை கடக்க முயன்றது..
செம கோபம்: இதை பார்த்ததும் டென்ஷன் ஆகிவிட்டார் அங்குலட்சுமி.. அந்த பஸ்ஸை வழிமறித்து, கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்தார்.. இப்படியே 45 நிமிடம் பரபரப்பாக ஓடியது.. ஒருவழியாக, போலீசார், அங்குலட்சுமியின் கைகளை இழுத்து பிடித்து, பின்புறமாக அங்குலட்சுமியின் துப்பட்டாவால் கட்டிவிட்டனர்.. பிறகு, ஒரு ஆட்டோவில் ஏற்றி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
இதற்கு பிறகு, அரசு மருத்துவமனையில் அட்டகாசத்தை ஆரம்பித்தார் அங்குலட்சுமி.. ஆஸ்பத்திரியை பார்த்துமே உள்ளே வரமாட்டேன் என்று அடாவடி செய்தார்.. ஆனால், மருத்துவமனை ஊழியர்களும், போலீசாரும் சேர்ந்து அவரை குண்டுகட்டாக தூக்கிச் செல்ல முயன்றனர்.. அப்போதுகூட, "வரமாட்டேன்" என்று தரையிலேயே உருண்டு புரண்டு அடம் பிடித்தார்... இதற்கு பிறகு மிகுந்த சிரமப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் கொண்டு போய் அனுமதித்தனர்..
வரமாட்டேன்: படுக்கையில் படுக்க வைத்தபோதும்கூட, அலப்பறையை ஆரம்பித்தார்.. அதனால், அவரது கை கால்களை கட்டிலோடு சேர்த்து கட்டிப்போட்டனர்.. அப்படியிருந்தும்கூட, அவர் வாய் அடங்கவேயில்லை.. சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் கூச்சலிட்டுக் கொண்டே இருந்தார்.. இதனால் வேறுவழியில்லாமல், வலுக்கட்டாயமாக அவருக்கு மயக்க ஊசியை டாக்டர்கள் செலுத்தினார்கள்.. சிகிச்சையையும் தொடர்ந்து தந்தார்கள்.
அங்குலட்சுமி: இதற்கு பிறகு, அவரது குடும்பத்தினருக்கு போனை போட்டு, விஷயத்தை சொன்னார்கள் போலீசார்.. சிகிச்சை முடிந்துவிட்டதால், அவரை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்படியும் குடும்பத்தினருக்கு அறிவுறுத்தினர். ஆனால், அவரது குடும்பத்தினர் ஒருத்தர்கூட, அங்குலட்சுமி வீட்டுக்கு அழைத்து செல்ல முன்வரவில்லை.. அதனால், தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உள்ள ஊழியர்களின் பாதுகாப்பிலேயே அவர் இப்போது தங்க வைக்கப்பட்டுள்ளார்..

இதற்கு பிறகு, சொந்தக்காரர் என்று சொல்லி ஒருவர் அங்கு வந்துள்ளார்.. அவரிடம் அங்குலட்சுமியை பற்றி விசாரிக்கும்போது, "அங்குலட்சுமி எப்பவுமே இப்படித்தான்.. ஹான்ஸ், கஞ்சா, தண்ணி இப்படி நிறைய பழக்கங்கள் இருக்கிறது.. சரக்கு போட்டுவிட்டால், இப்படித்தான் ஒரே ரகளையா இருக்கும்" என்று அசால்டாக பதில் சொல்லியிருக்கிறார். இதற்கு பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை.. அங்குலட்சுமி வீட்டுக்கு கிளம்பி போனாரா? இல்லையா? இப்போது நார்மல் மோடுக்கு வந்துவிட்டாரா? எதுவுமே தெரியவில்லை..
கஞ்சா நடமாட்டம்: தமிழகத்தில் மதுவிலக்கு என்பது கனவாகவே போய்விடுமோ என்ற கவலை சூழ்ந்துள்ளது.. இந்த குடிபோதை, நாட்டில் இன்னும் எத்தனை குடும்பங்களை நாசம் செய்ய போகுதோ?? எத்தனை உயிர்களை காவு வாங்க போகுதோ???
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications