தங்கமணியின் வீட்டில் ரெய்டு.. நாமக்கல்லில் குவிந்த முன்னாள் அமைச்சர்களால் பரபரப்பு!
நாமக்கல்: நாமக்கலில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் அவரது வீட்டிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட முன்னாள் அமைச்சர்கள் வருகை தந்துள்ளனர்.
Recommended Video
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ 4.85 கோடி சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, செங்கல்பட்டு, ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட 69-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடைபெறுகிறது. அது போல் சென்னையில் மட்டும் 14 இடங்களில் இந்த ரெய்டு நடைபெறுகிறது.

அதிமுக
ரெய்டு நடைபெறுவதை அடுத்து அவரது வீட்டில் அதிமுகவினர் குவிந்தனர். கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ததாக தெரிகிறது. அவரது வீட்டிலிருந்து கணினி ஆதாரங்கள் கிடைத்தன. இதையடுத்து தங்கமணியிடம் நடத்தப்பட்ட 3 மணி நேர விசாரணையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

3ஆவது குற்றவாளி
அவரது மகன் தரணீதரன் 2ஆவது குற்றவாளியாகவும் மனைவி சாந்தி 3ஆவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். தங்கமணி வீட்டில் ரெய்டு என்றதும் அப்பகுதியில் அதிமுகவினர் குவிந்தனர். அது போல் நாமக்கல்லில் உள்ள ஆலாம்பாளையத்தில் உள்ள தங்கமணியின் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வருகை தந்துள்ளார்.

தங்கமணி
அது போல் முன்னாாள் அமைச்சர்கள் கே.சி. கருப்பண்ணன், தாமோதரன், கே வி ராமலிங்கம் உள்ளிட்டோர் தங்கமணியின் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல் நிர்வாக ரீதியில் பல மாற்றங்களை செய்துள்ளார். அதில் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக கந்தசாமியை நியமித்துள்ளார்.

கோப்புகள்
கந்தசாமி பொறுப்பேற்றவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்த கோப்புகள் வேகமாக நகர்ந்தன. அதன்படி முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி, சி விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளிலும் கடந்த சில மாதங்களாக ரெய்டு நடைபெற்றது. இதுவரை 4 முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடந்த நிலையில் 5ஆவதாக தங்கமணியின் வீட்டில் ரெய்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications