நாமக்கல் "கோழிக்கறி"யின் ஸ்வீட் நியூஸ்.. பல்லடம், ஈரோட்டில் குஷியில் கறிக்கடைக்காரர்கள்: என்ன விஷயம்
நாமக்கல்: காணும் பொங்கலை முன்னிட்டு, தமிழகத்தில் ஒரே நாளில், 80 சதவீதம் அதிகரித்து, 70 லட்சம் கிலோ கோழிகறி...அதன் மூலம், 59.50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. ...
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, பொங்கலை கொண்டாடிய மறுநாளே, மட்டன், சிக்கன், மீன் என அசைவ உணவுகளை மக்கள் சமைத்து, தங்கள் ஊற்றார், உறவினருடன் சேர்ந்து உண்பது வழக்கமான ஒன்றாகும். அதனால், தமிழகத்தின் பிரதான சந்தைகளில் ஆடுகள் விற்பனையும் களைகட்ட துவங்கிவிடும்.

சாரல் மழை: அந்தவகையில், இந்த முறை பொங்கல் பண்டிகைக்கும் தமிழகத்தின் சந்தைகளில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது.. இத்தனைக்கும் பல்வேறு மாவட்டங்களில் சாரல் மழை பெய்தபடியே இருந்தது.. போதாக்குறைக்கு அந்த நேரத்தில் பஸ் ஸ்டிரைக்கும் அறிவிக்கப்பட்டிருந்தால், சந்தையில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை என்றார்கள்.
மேலும், இந்த வருடம் கரிநாள் செவ்வாய்கிழமையன்று வந்தது.. தை பூசமும் வரப்போவதால், சிலர் அசைவம் உண்ணுவதை தவிர்க்க கூடும் என்பதால், கறி விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும் என்று சந்தேகம்தான் என்றார்கள் சந்தேகம் கறிக்கடைக்காரர்கள். ஆனால், இறைச்சி வியாபாரம் அமோகமாகவே நடந்திருப்பதாக தகவல் வெளியானது.
ஆடுகள்: ஆடு மட்டுமல்லாமல் கோழிக்கறியும் சிறப்பாகவே விற்பனையாகியிருக்கிறது.. கோழிக்கறியை பொறுத்தவரை, பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம், தினமும் 40 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது.. இந்த கறிக்கோழிதான், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆனால், தற்போது நடந்து முடிந்துள்ள காணும் பொங்கலையொட்டி, ஒரே நாளில் கறிக்கோழி விற்பனை, 80 சதவீதம் உயர்ந்துள்ளது, பண்ணையாளர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் தரப்பில் சொன்னதாவது:
ஜரூர் விற்பனை: பொங்கல் பண்டிகையின்போது, தமிழகத்தில் கறிக்கோழி விற்பனை வெறும் 50 சதவீதம் மட்டுமே இருக்கும். ஆனால், இந்த முறை வழக்கத்தைவிட கறிக்கோழி அதிகம் விற்பனையானது. ஆண்டை மாநிலங்களுக்கு வாரந்தோறும் 2.80 கோடி கிலோ கறிக்கோழி விற்பனைக்கு அனுப்பப்படும். ஆனால் காணும் பொங்கல் நாளில் மட்டும் தமிழகத்தில், 80 சதவீதம் அதிகரித்து, 70 லட்சம் கிலோ கறிக்கோழி விற்பனையானது. இதன்மூலம் 59.50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது" என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications