எஸ்.ஐ-யை தாக்கிய கொள்ளையன்.. நாமக்கல் என்கவுண்டர் சம்பவம்.. சுட்டுக் கொன்றது ஏன்? போலீஸ் விளக்கம்!
நாமக்கல்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம்.களில் அடுத்தடுத்து கொள்ளையடித்துவிட்டு அந்தப் பணத்துடன் கண்டெய்னரில் தப்பிய ஏ.டி.எம். கொள்ளையர்கள் நாமக்கல் அருகே நேற்று பிடிபட்டனர். அப்போது ஒரு கொள்ளையன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அது தொடர்பாக போலீஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன் கண்டெய்னர் லாரியில் தப்ப முயன்ற வட மாநிலக் கொள்ளையர்களை நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்தனர். சம்பவத்தின்போது போலீசார் சுட்டதில் கொள்ளையன் ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஒருவர் காலில் குண்டடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏடிஎம் கொள்ளை: கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள 3 ஏடிஎம்களில் வட மாநில கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அந்தப் பணம் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் ஒன்றையும் ராஜஸ்தான் மாநில பதிவு எண் கொண்ட கண்டெய்னர் லாரியில் ஏற்றிக் கொண்டு வட மாநிலத்துக்கு தப்ப முயன்றனர். குமாரபாளையம் அருகே ராஜஸ்தான் பதிவு எண் கொண்ட கண்டெய்னர் லாரி செக்போஸ்ட்டில் நிற்காமல் இன்று காலையில் 2 பைக், ஒரு கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதனால் பொதுமக்கள் சந்தேகமடைந்து பைக்குகளில் விரட்டி சென்றனர். இதையடுத்து நாமக்கல் போலீசார் சேசிங் செய்து அதிவேகத்தில் சென்ற கண்டெய்னரை மடக்கி கொள்ளையர்களைப் பிடித்தனர். 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களில் 3 பேரை போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். ஒரு கொள்ளையனை கண்டெய்னர் லாரியில் ஒரு போலீஸ்காரரோடு வரச் செய்து முன்னும் பின்னும் போலீசார் சென்றனர்.
கண்டெய்னரை திறந்து பார்த்தால்: காவல் நிலையம் செல்லும் வழியில், கண்டெய்னருக்கு உள்ளிருந்து சத்தம் வந்ததால் கண்டெய்னர் லாரியை நிறுத்தி கண்டெய்னரை திறந்து பார்த்தனர். அப்போது, போலீசாரை ஜூமாதின் தாக்கிவிட்டு காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓட முயன்றபோது போலீசார் அவரை சுட்டதில் ஜுமாதின் இறந்தார்.
என்கவுண்டர் நடந்தது எப்படி?: அவர் நீல நிற பையுடன் ஓடினார். ஒரு ஆயுதத்தால் எஸ்.ஐ-யை தாக்க முற்பட்டபோது இன்ஸ்பெக்டர் சுட்டதில் இந்தார். ஜூமாதீன் வைத்து இருந்த பையில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் சிதறின. அஸ்ரு அலி என்பவருக்கு காலில் குண்டு காயம் ஏற்பட்டது. போலீசார் பிடியில் சிக்கிய 3 கொள்ளையர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை: அவர்கள் கேரள மாநிலம் திருச்சூர் புறநகர் பகுதிகளில் ஏடிஎம்களில் கொள்ளை அடித்து விட்டு வெள்ளை நிற கரெக்டா காரில் தப்பியது தெரியவந்தது. அதற்குப் பிறகு அந்த காரை கன்டெய்னருக்குள் ஏற்றிக்கொண்டு தமிழகத்திற்கு தப்பி வந்ததும் தெரிய வந்தது. கண்டெய்னர், அதிலிருந்து 69 லட்சம் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கொள்ளையர்கள் ஹரியானாவைச் சேர்ந்த பல்வால் - மேவாட் கொள்ளையர்கள் என்பது தெரியவந்துள்ளது.
நாமக்கல் அருகே சிக்கிய மேவாட் கொள்ளை கும்பல் 15 ஏடிஎம்களில் கொள்ளையடித்துள்ளனர். ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேர் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்துள்ளனர். குமாரபாளையம் அருகே பிடிபட்ட 7 ஏடிஎம் கொள்ளையர்களில் 2 பேர் விமானம் மூலம் சென்னை வந்ததுள்ளனர். சென்னையில் இருந்து கண்டெய்னர் லாரி மூலம் திருச்சூர் சென்று காரில் தப்பிச் செல்ல முயன்றது அம்பலமானது.
போலீசார் விளக்கம்: இந்நிலையில், ஹரியானா கொள்ளை கும்பல் சிக்கியது பற்றி சேலம் சரக டி.ஐ.ஜி உமா செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், "திருச்சூரில் கொள்ளை நடந்த பிறகு மேற்கு மண்டலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். திருச்சூரில் இருந்து வந்த கண்டெய்னர் வெப்படை அருகே சன்னியாசிப்பட்டியில் மடக்கிப் பிடிக்கப்பட்டது.
உள்ளே இருந்து சத்தம்: கண்டெய்னர் லாரியை மடக்கி 4 பேரை கைது செய்து அழைத்துச் சென்றபோது, அந்த கண்டெய்னருக்குள் சத்தம் கேட்டது. உடனே நிறுத்தி அதனை திறந்து பார்த்தபோது அதில் இருந்து 2 பேர் தப்பி ஓடினர். அந்த இருவரையும் போலீசார் துரத்திச் சென்றபோது ஜூமாதின் என்பவன் போலீசாரை தாக்க முயன்றான். அப்போது என்கவுண்டர் நடத்தப்பட்டது. மற்றொருவனான அஸ்ரூ அலி என்பவனின் காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தோம்.
இதற்கு முன்பாக, இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏடிஎம்களில் கொள்ளையடித்த, இதே ஹரியானா மாநிலத்தின் மேவத் மாவட்டத்தைச் சேர்ந்த இருவரைக் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளோம். அவர்களுக்கும், இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. இவர்கள் ஏழு பேர் மீதும் வேறு எந்த வழக்குகளும் தமிழகத்தில் இருப்பதாகத் தகவல் இல்லை.
என்கவுன்டர் என்பதால், நீதி விசாரணை நடக்கிறது. அதனால் பணம் எவ்வளவு இருந்தது என்று இன்னும் எண்ணவில்லை. காயம் அடைந்த அஸ்ரூவுக்கு கோவையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களை விசாரித்து வருகிறோம். இறந்தவரின் குடும்பத்துக்கும் தகவல் தர முயற்சி செய்து வருகிறோம்.
மெயின் ரோட்டில் அவர்களை விசாரிக்காமல், காட்டுப்பகுதிக்குச் சென்று விசாரித்ததற்குக் காரணம் என்ன? இது திட்டமிட்ட என்கவுண்டரா என்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "கார் மற்றும் பைக்குகள் மீது மோதி, விபத்து ஏற்படுத்துவதற்கு முன்பே, போலீசாருக்கு அந்த லாரி பற்றித் தகவல் வந்துவிட்டது. அவர்கள் போலீசார் பிடித்து விடுவார்கள் என்று நினைத்தே, லாரியை வேகமாக ஓட்டி இருக்கிறார்கள். அதில்தான் விபத்து நடந்துள்ளது.
எஸ்.ஐ மீது தாக்குதல்: பெட்ரோல் பங்க் அருகே, யு-டர்ன் அடிக்கும்போது, காரை 250 மீட்டர் துாரத்துக்கு இழுத்துச் சென்றுள்ளனர். வண்டியை நிறுத்தி விசாரிக்கும் வரையிலும், அதற்குள் கார் மற்றும் இரண்டு ஆட்கள் இருப்பது போலீசாருக்கு தெரியாது. காற்று போவதற்காக கண்டெய்னரின் பின்புறத்தில் சில மாற்று ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றனர்.
எஸ்.ஐ-யை காப்பாற்றவே என்கவுண்டர்: போலீசார் கண்டெய்னரை மடக்கிய நிலையில், ஜுமான், அஸ்ரூ அலி ஆகிய இருவரும் தப்பி ஓட முயன்றுள்ளனர். டிரைவர் ஜூமான், தனது கையிலிருந்த லாரி பழுது பார்க்கும் கருவியை ஆயுதமாகப் பயன்படுத்தி, இன்ஸ்பெக்டர் தவமணியைத் தாக்கிவிட்டு ஓடினார். அவர்களைத் துரத்திக்கொண்டு, எஸ்.ஐ ரஞ்சித் ஓடினார், அவருக்குப் பின்னால் தவமணியும் ஓடினார்.
தப்பி ஓடிய அவர்கள் காட்டுப் பகுதிக்குள் நுழையும்போது, ஓர் ஓடை குறுக்கிட்டது. அதில் தவறி விழுந்த ஜூமாதினை பிடிக்க முயன்ற எஸ்.ஐ. ரஞ்சித்தை, ஜூமாதின் தனது கையில் இருந்த ஆயுதத்தால் தாக்கவே, எஸ்.ஐ.யை காப்பாற்ற, இன்ஸ்பெக்டர் தவமணி துப்பாக்கியால் சுட்டுள்ளார் என டி.ஐ.ஜி உமார் தெரிவித்துள்ளார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications