கொள்ளையடிக்க விமானத்தில் தான் வருவாங்களாம்! லோக்கல் ஏரியாவில் சொகுசு வாழ்க்கை! மேவாட் கேங் பின்னணி!
நாமக்கல் : கேரளாவில் பல ஏடிஎம்களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களின் ஒருவன் தமிழ்நாடு போலீசால் சுட்டு கொல்லப்பட்டுள்ள நிலையில், 6 பேர் பிடிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொள்ளையர்கள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக கொள்ளையர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்ததும், மேலும் பல கொள்ளை சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
திரைப்படங்களை விஞ்சும் வகையில் இருந்தது நேற்று நாமக்கல் போலீசார் நடத்திய சேசிங்கும், என்கவுண்டரும். தீரன், சிங்கம் படங்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு அதிவேகத்தில் சென்ற கண்டெய்னரை மடக்கிய போலீசார், கொள்ளையர்கள் மடக்கினர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி செக்போஸ்ட்டில் நிற்காமல் இன்று காலையில் 2 பைக், ஒரு கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் பொதுமக்கள் சந்தேகமடைந்து பைக்குகளில் விரட்டி சென்றனர்.
போலீசாரும் வாகனங்களில் கண்டெய்னர் லாரியை விரட்டி சென்றனர். லாரியில் இருந்தவர்கள் கற்களை வீசி தாக்கிய நிலையில் வெப்படை என்ற இடத்தில் போலீசார் கண்டெய்னர் லாரியை மடக்கி பிடித்தனர். டிரைவர் ஜூமான் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன் பிறகு அந்த லாரியை காவல் நிலையத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர். செல்லும் வழியில் கண்டைனருக்கு உள்ளிருந்து சத்தம் கேட்ட நிலையில், தோப்புக்காடு அருகே லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது கண்டெய்னருக்குள் வெள்ளை நிற க்ரெட்டா கார் இருந்ததோடு அதில் இருவர் இருந்திருக்கின்றனர். தொடர்ந்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது ஓட்டுநர் ஜூமான் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார். இதை அடுத்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது நடந்த என்கவுண்டரில் ஜுமான் இறந்தார்,
அஸ்ரு என்பவருக்கு காலில் குண்டு காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து காயம்பட்டவர் உள்ளிட்ட ஆறு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கேரள மாநிலம் திருச்சூர் புறநகர் பகுதிகளில் ஏடிஎம்களில் கொள்ளை அடித்து விட்டு வெள்ளை நிற கரெக்டா காரில் தப்பியது தெரியவந்தது. அதற்குப் பிறகு அந்த காரை கன்டெய்னருக்குள் ஏற்றிக்கொண்டு தமிழகத்திற்கு தப்பி வந்ததும் தெரிய வந்தது.
கேரளா போலீசார் அளித்த தகவலின் பெயரில் நாமக்கல் போலீசார் அவர்களை துரத்திப் பிடித்ததும் என்கவுண்டர் சம்பவத்தில் ஒருவன் கொல்லப்பட்டதும் பின்னர் நடந்தது தான். இதை அடுத்து கார், கண்டெய்னர், அதிலிருந்து 69 லட்சம் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. குண்டு காயம் அடைந்த அஸ்ரு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இவர்கள் ஹரியானாவைச் சேர்ந்த 'பல்வால் - மேவாட்' கொள்ளையர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. கேரளா மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இவர்கள் மீது கொலை சம்பவங்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
கொள்ளை சம்பவத்திற்காக கொள்ளையர்கள் இருவர் விமானத்தில் சென்னை வந்து அங்கிருந்து கேரளா சென்றிருக்கின்றனர். மற்றவர்கள் கண்டெய்னரில் லோடு இறக்குவதற்காக வந்திருக்கின்றனர். கண்டெய்னர் லாரியில் லோடு இறக்கியவுடன் கொள்ளை அடித்த பணத்துடன் காரை கண்டெய்னருக்குள் மறைத்து ஹரியானா செல்வது இவர்களது வழக்கமாம்.
அது மட்டுமல்லாமல் 2022-ல் மகாராஷ்டிராவில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்திலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஏற்கனவே நடந்த ஏடிஎம் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு கொள்ளை சம்பவங்களை இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்த விசாரணையில் இவர் குறித்த பகீர் பின்னணி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications