Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாமக்கல் மாநகராட்சியானது.. உயர்ந்தது தரம்.. முதல் மேயராகிறார் கலாநிதி..அரசாணை வெளியிடும் முதலமைச்சர்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அரசாணையை, முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். இதனால் நாமக்கல் மாவட்டமே மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.

காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.. இந்த 4 நகராட்சி பகுதிகளுடன் கூடுதலாக சில ஊராட்சி பகுதிகளையும் இணைத்து மாநகராட்சியாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

Namakkal Kalanidhi

அதன்படி, இன்றைய தினம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி என 4 மாநகராட்சிகளையும் முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.. காணொலி மூலம் இதனை அவர் துவக்கி வைக்கிறார்..

கலாநிதி:
அந்தவகையில், நாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அரசாணையை, முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். அவற்றை, நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி ஆகியோர் பெற்றுக்கொள்கின்றனர். இதனால் நாமக்கல் மாவட்டம் படுகுஷியில் உள்ளது.

காரணம், ஆரம்பத்தில் 30 வார்டுகள் இருந்த நிலையில், 9 கிராமங்களை இணைத்து நாமக்கல் நகராட்சிகளின் வார்டுகளின் எண்ணிக்கை 39 ஆக உயர்த்தப்பட்டது. இது, 55.24 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட சிறப்பு நிலை நகராட்சியாக உள்ள நிலையில், கிட்டத்தட்ட 2 லட்சத்து, 15,000 பேர் வசித்து வருகிறார்கள்.. நகராட்சி விதிகளின்படி, ஆண்டு வருமானம், 30 கோடி ரூபாயும், மக்கள் தொகை, 3 லட்சம் இருந்தால் மாநகராட்சியாக தரம் உயர்த்த முடியும்.

நகராட்சி: தற்போது நாமக்கல் நகராட்சியின் சராசரி ஆண்டு வருமானம், 43 கோடியே, 84 லட்சம் ரூபாயாக உள்ளது.. அதனால்தான், நாமக்கல் நகராட்சியை பரப்பளவு மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில், மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று நகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டது.

அதேபோல, வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசாணம், மரூர்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டாம்பாடி, லத்துவாடி, காதபள்ளி ஆகிய, 12 கிராம பஞ்சாயத்துகளையும் களை தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சியுடன் இணைக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.. அப்படி இணைத்தால், பரப்பளவானது 145.31 சதுர கி.மீட்டராகவும், மாநகராட்சியின் மக்கள் தொகை 3 லட்சத்து, 5,061 ஆக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாமக்கல்: மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலித்து, தமிழக சட்டசபையில் நாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று நாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அரசாணையை வெளியிடுகிறார். இதனை நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி ஆகியோர் பெற்றுக்கொள்ள உள்ளனர்..

இதையொட்டி முன்னதாக, நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி ஆகியோர், எம்.பி., ராஜேஷ்குமாரிடம் வாழ்த்து பெற்றிருந்தார். சமீபத்தில்தான், நாமக்கல் மாநகராட்சி ஆணையாளராக தஞ்சாவூர் மாநகராடசி ஆணையாளர் ஆர்.மகேஸ்வரி நிமியக்கப்பட்டார்..

மாநகராட்சி:
இதையடுத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளின் தலைவர், துணைத்தலைவர்கள், ஆணையர்கள் சென்னைக்கு வருமாறு முதல்வர் அலுவலகம் நேற்றைய தினம் அழைப்பு விடுத்திருந்தது. இதனடிப்படையில்தான், நாமக்கல் நகர்மன்ற தலைவர் து.கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, ஆணையாளர் மகேஸ்வரி ஆகியோர் சென்னையில் தற்போது முகாமிட்டுள்ளனர்.

இன்று காலை மாநகராட்சி அந்தஸ்துக்கான சான்றிதழ், மேயர், துணை மேயர் பதவிக்கான சான்றிதழ்களை முதல்வர் அவர்களிடம் வழங்க உள்ளார்.. இதையடுத்து, நகர்மன்ற தலைவர் து.கலாநிதியை மேயராக அறிவித்து முதல்வர் ஸ்டாலின் இன்று சான்றிதழ் வழங்குகிறார். அந்தவகையில், நாமக்கல் மாநகராட்சியின் முதல் மேயராகிறார் து.கலாநிதி..

படுகுஷி: அதுமட்டுமல்ல, நாமக்கல் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர், துணை மேயரை கௌரவிக்கும் நிகழ்ச்சி, புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு போன்றவை வரும் புதன்கிழமை நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இனி வார்டுகளின் எண்ணிக்கையும் தற்போது 54 ஆக உயரக்கூடும் என்பதால், ஒட்டுமொத்த நாமக்கல் மக்கள் படுகுஷியில் காணப்படுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+