Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“விஜய்யை கைது செய்..” நாமக்கல்லில் கொந்தளித்த மாணவர்கள்! தவெகவுக்கு நெருக்கடி

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: அப்பாவி உயிர்களை பலி வாங்கி, தப்பி ஓடிய விஜய்யை கைது செய் என்று நாமக்கல்லில் தமிழ்நாடு மாணவர் சங்கத்தினர் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

நேற்று முன்தினம் இரவு கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக சார்பில் பிரச்சார கூட்டத்தை விஜய் நடத்தியிருந்தார். அந்த கூட்டத்தில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்பு குறித்து பொறுப்பு டிஜபி வெங்கட்ராமன் கூறுகையில், "விஜய் காலை 11 மணிக்கு கரூர் வருவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பிரச்சாரத்தில் சுமார் 10,000 பேர் வரை பங்கேற்பார்கள் என்று சொல்லப்பட்டது. அதற்கேற்பவும், கூடுதலாகவும் காவல்துறையினரை நாங்கள் பாதுகாப்பு பணிக்காக நியமித்திருந்தோம்.

students Vijay Karur

நெரிசலில் உயிர்பலி

ஆனால் சம்பவ இடத்திற்கு விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்தார். இதனால் உணவு, தண்ணீர் இல்லாமல் நின்றிருந்த மக்கள் கூட்டமாக விஜய்யை பார்க்க முந்தியடித்தனர். இதில் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனுமதி கேட்ட இடம் உழவர் சந்தையும், ரவுண்டானாவும்தான். ஆனால் அது இதை விட குறுகலான பகுதி என்பதால், இங்கு அனுமதி கொடுத்தோம்" என்று கூறியிருந்தார்.

தமிழ்நாடு அரசின் செயல்பாடு

சம்பவம் நடந்த அன்று இரவு விஜய் சென்னை போக திருச்சி விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவர் வந்தபோது பத்திரிகையாளர்கள், உயிரிழப்பு தொடர்பாக கேட்கிறார்கள். ஆனால், அவர் பதில் ஏதும் தெரிவிக்காமல் சென்றுவிட்டார். சென்னை சென்று சேர்ந்த பின்னர், ட்விட்டரில் சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவித்திருந்தார். மறுபுறம் தமிழ்நாடு அரசு முழு வேகத்தில் செயல்பட தொடங்கியது. குறிப்பாக அன்பில் மகேஸ், மா.சுப்பிரமணியன் என 4-5 அமைச்சர்களும் முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜியும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அதேபோல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவு சென்னையிலிருந்து புறப்பட்டு, கரூர் வந்தடைந்தார். உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்த அவர், சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் இப்படியான நெரிசல் பலி ஏற்படுவது நாட்டில் இதுவே முதல்முறை. எனவே இனி இதுபோன்று நடக்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

விஜய் கைது செய்யப்படுவாரா?

பத்திரிகையாளர்கள், விஜய் கைது செய்யப்படுவரா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர், விசாரணை ஆணையம் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கூறியிருந்தார்.

முன்னதாக சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டிருந்தார். அருணா ஜெகதீசன் சம்பவம் நடந்த இடத்தில் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டிருக்கிறார். ஒரு தரப்பினரிடம் மட்டுமே கருத்துக்களை கேட்காமல், அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

கைது செய்ய வலியுறுத்திய மாணவர்கள்

இந்நிலையில், இன்று நாமக்கல்லில் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அதில், "தமிழக அரசே, அப்பாவி உயிர்களை பலி வாங்கி தப்பி ஓடிய விஜய்யை கொலைக்குற்றவாளி என கைது செய்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சம்பவம் நடந்த ஏறத்தாழ இரண்டு நாட்கள் ஆன நிலையில் இன்று வரை விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவில்லை. அதேபோல தவெக நிர்வாகிகள் யாரும் மருத்துவமனைக்கு இப்போது வரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+