காதலியின் மகள் மீதும் ஆசை.. குறுக்கே வந்த பாட்டி.. ஆசிட் ஊற்றி கொன்ற வாலிபர்.. அடித்தே கொன்ற மக்கள்!

இளைஞனை கிராம மக்களே அடித்து கொன்றுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: கள்ளக்காதலி இல்லாமல், அவரது மகள் மீதும் இளைஞருக்கு ஆசை வந்துவிடவும் அவரை அடைய முயன்றார்.. ஆனால், பெண்ணின் பாட்டி இதற்கு தடையாக நிற்கவும், அவரை கொடூரமாக இளைஞர் தாக்கி கொன்றுவிட்டார்.. இதனால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் இளைஞரை கல்லால் அடித்தே கொன்றுவிட்டனர்.

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே உள்ள குருசாமிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் விஜயா.. 38 வயதாகிறது.. கணவனை இழந்தவர்.. 3 மகள்கள் உள்ளனர்.

குடும்பத்தை காப்பாற்ற பள்ளிபாளையம் பகுதியில் வேலைக்கு சென்றபோது, விஜயாவுக்கு 40 வயதுடைய சாமுவேல் என்பவர் பழக்கமானார்.. இது கள்ளக்காதலாக மாறியது.

விஜயா

விஜயா

இதனால், இருவருமே அந்த பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்தனர். இந்த சமயத்தில் விஜயாவின் மூத்த மகளுக்கு திருமணமாகி சென்றுவிட்டார்.. 2-வது மகள் திருப்பூரில் வேலை பார்க்கிறார்.. 3-வது மகள் வசந்தி காலேஜ் முதல் வருடம் படிக்கிறார்.. பார்ட் டைம்-ஆக ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்க்கிறார்.. இதனால், வசந்தி தன்னுடைய பாட்டி வீடு, அதாவது விஜயாவின் மாமியார் வீட்டில் தங்கி உள்ளார். மாமியார் பெயர் தனம்.

வழக்குகள்

வழக்குகள்

சாமுவேல் மீது ஏற்கனவே நிறைய கேஸ்கள் பதிவாகி உள்ள நிலையில், வசந்தி மீதும் சாமுவேலுக்கு ஆசை வந்துவிட்டது.. அதனால் தனம் வீட்டில் வசந்தி இருப்பது அவருக்கு பிடிக்கவில்லை.. நேற்றிரவு தனம் வீட்டிற்கு சென்ற சாமுவேல், வசந்தியை தன்னுடன் அனுப்புமாறு சொன்னார்.. அதற்கு தனம், "என் மருமகளே எனக்கு இல்லைன்னு ஆயிடுச்சு.. என் பேத்தியை எப்படி அனுப்புவேன்" என்று சொல்லி அதற்கு மறுத்துள்ளார்.

கழுத்தை அறுத்தார்

கழுத்தை அறுத்தார்

அப்போது, "உள்ளே புகுந்து கடத்தி செல்வேன்" என்று சாமுவேல் சொல்லவும், இது தகராறாக வெடித்தது.. ஆசிட்டை காட்டி மிரட்டியும், பேத்தியை அனுப்ப தனம் அசைந்து கொடுக்கவே இல்லை.. கிட்டத்தட்ட 4 மணி நேரம் பிணய கைதியாக தனத்தை மிரட்டி வைத்திருந்தார் சாமுவேல்.. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சாமுவேல் கத்தியால் தனத்தை சரமாரியாக குத்தி, கழுத்தையும் அறுத்துவிட்டார்.. இதில், தனம் அலறி துடித்தபடியே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார்.

ஆசிட் வீச்சு

ஆசிட் வீச்சு

அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.. அவர்களை பார்த்த சாமுவேல், தனம் வீட்டின் கூரை மேல் போய் பதுங்கி கொண்டார். "கிட்ட யாராவது வந்தால் ஆசிட் ஊற்றிவிடுவேன்" என்றும் மிரட்டினார்.. எனினும் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, கூரையை பிய்த்து எறிந்த ஊர்மக்கள், சாமுவேலை பிடித்தனர்.. ஆனால், அப்போதும் சாமுவேல் அங்கிருந்தோர் மீது வழியெங்கும் ஆசிட் ஊற்றி கொண்டே ஓடினார்.

சடலங்கள்

சடலங்கள்

ஆனாலும் மக்கள் அவரை விரட்டி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.. கண்ணில் கண்ட கல்லையெல்லாம் எடுத்து வந்து சாமுவேலை தாக்கினர்.. இதில் சம்பவ இடத்திலேயே விழுந்து இறந்தார் சாமுவேல்.. தகவலறிந்து புதுசத்திரம் போலீசார் விரைந்து வந்து சடலங்களை மீட்டனர்.. ஆசிட் பட்டதில் காயமடைந்த 10 பேரை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு

பரபரப்பு

கள்ளக்காதலியின் மகளை அடைய நினைத்த நபர், மூதாட்டியை சிறைபிடித்து வைத்திருந்து கழுத்தை அறுத்து கொன்றதும், இதனால் ஆத்திரம் அடைந்த ஊர்மக்கள் அந்தநபரை கல்லாலேயே அடித்து கொன்றதும் புதுசத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+