நாமக்கல்லில் திமுக தொண்டர்களால் திக்குமுக்காடிய உதயநிதி ஸ்டாலின்.. 10 கி.மீ கடக்க 2 மணி நேரம்
நாமகல்லில் தொண்டர்கள் குவிந்ததால் 10 கிமீ தூரத்தை கடக்க உதயநிதிக்கு 2 மணி நேரம் ஆனது
நாமக்கல்: நாமக்கல்லில் மிக பிரம்மாண்டமான முறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார் ராஜேஷ்குமார் எம்.பி.
திமுகவை பொறுத்தவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில்பாலாஜி ஆகிய இருவர் தான் கட்சி நிகழ்வாக இருந்தாலும் சரி, அரசு விழாவாக இருந்தாலும் சரி அதில் ஒரு மாஸ் காட்டுவார்கள்.
இதனிடையே அந்த 2 அமைச்சர்களுக்கு இணையான ஒரு பிரம்மாண்டத்தை நாமக்கல்லில் நிகழ்த்திக்காட்டி உதயநிதியின் பாராட்டு மழையில் நனைந்திருக்கிறார் மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார்.

உதயநிதி ஸ்டாலின் வருகை
சேலம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு நாமக்கல் சென்றடைந்தார். சேலத்திலிருந்து நாமக்கல்லுக்கு அதிகபட்சம் 45 நிமிடங்களில் செல்ல முடியும் என்ற நிலையில் 2 மணி நேரம் பயணித்து நாமக்கல் சென்று சேர்ந்தார் உதயநிதி. இதற்கு காரணம் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார் வழியெங்கும் ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்ட வரவேற்பு தான்.

திக்குமுக்காடிய உதயநிதி
இரவு நேரத்தில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் தன்னை வரவேற்க நின்ற தொண்டர்களால் நெகிழ்ந்து போய்விட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். நேற்றிரவு அப்படியென்றால் இன்று காலை அதைவிட ஒரு மாஸ் அமைச்சர் உதயநிதிக்கு காத்திருந்தது. நாமகல்லில் உள்ள விடுதியிலிருந்து அரசு விழா நடைபெற்ற பொம்மைக்குட்டை மேடு என்ற இடத்திற்கு சென்றடைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 2 மணி நேரம் ஆனது. மொத்தமே 10 கிமீ தான் தூரம், வழிநெடுகிலும் தொண்டர்களை குவித்து உதயநிதியை திக்குமுக்காட வைத்துவிட்டார் ராஜேஷ்குமார்.

முதல் மதிப்பெண்
இதனிடையே திமுக எம்.பி. ராஜேஷ்குமார் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தாம் வைத்த அனைத்து பரீட்சைகளிலும் தேர்வானது மட்டுமல்ல முதல் மதிப்பெண்னையும் ராஜேஷ்குமார் எம்.பி. பெற்றுவிட்டார் எனக் குறிப்பிட்டார். திமுகவை பொறுத்தவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில்பாலாஜி ஆகிய இருவர் தான் கட்சி நிகழ்வாக இருந்தாலும் சரி, அரசு விழாவாக இருந்தாலும் சரி அதில் ஒரு மாஸ் காட்டுவார்கள்.

நாமக்கல்லில் மாஸ்
ஆனால் அந்த 2 அமைச்சர்களையும் மிஞ்சும் வகையில் நாமக்கல்லில் மாஸ் காட்டி கவனம் ஈர்த்திருக்கிறார் ராஜேஷ்குமார் எம்.பி. திமுக இளைஞரணியில் இருந்து மாவட்டச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் என புரோமோஷன்கள் பெற்றவர் ராஜேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications