மகன் மத்திய அமைச்சர்.. எந்த பந்தாவும் இல்லாமல் விவசாயம் செய்யும் தந்தை.. நாமக்கல்லில் நெகிழ்ச்சி!
நாமக்கல்: மகன் மத்திய அமைச்சராக இருந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் அவரது தந்தை தற்போதும் சைக்கிளில் மண்வெட்டியுடன் விவசாய வேலைக்கு சென்றுவிடுகிறார்.
அண்மையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கப்பட்டது. இதில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல் முருகன் மத்திய இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். இவருக்கு மீன்வளம், கால்நடை, பால் பண்ணை மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை ஒதுக்கப்பட்டது.
மகன் மத்திய அமைச்சரானாலும் எந்த பீடிகையும் இல்லாமல் அவரது பெற்றோர் இன்றும் விவசாய பணிகளை செய்து வருகிறார்கள்.

பெரிய பதவிகள்
தூரத்து உறவினர்கள் பெரிய பதவியில் இருந்தாலும் "நான் அமைச்சரின் ஒன்னுவிட்ட மச்சான், இரண்டு விட்ட சம்பந்தி " என பெருமை கொள்ளும் சமுதாயத்தில் தனது மகன் அமைச்சராகவே இருந்தாலும் மக்களுக்கு உணவு உற்பத்தி செய்யும் புனிதமான விவசாயத் தொழிலை அவர்கள் விடாமல் செய்து வருவது அனைவருக்கும் முன்னுதாரணமாகவே உள்ளது.

நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள கோனூர்தான் இவர்களது சொந்த கிராமம் ஆகும். இவரது தந்தை பெயர் லோகநாதன் (65), தாய் வரதம்மாள் (60). இவர்களுக்கு முருகன், ராமசாமி ஆகிய இரு மகன்கள். விவசாய வேலை செய்தே தனது மகன்களை லோகநாதன் படிக்க வைத்தார்.

2ஆவது மகன் ராமசாமி
இந்த நிலையில் லோகநாதனின் 2ஆவது மகன் ராமசாமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். படிப்பில் ஆர்வம் கொண்ட எல் முருகன் சட்டம் படித்து பிஎச்டியும் படித்துள்ளார். தற்போது இணையமைச்சர் பதவிக்கு உயர்ந்துள்ளார். எனினும் முருகனின் பெற்றோர் எந்த ஆடம்பரமும் இன்றி விவசாய பணிகளையே செய்து வருகிறார்கள்.

ஹாலோ பிளாக் கற்களால் கட்டப்பட்ட வீடு
இவர்களது வீடும் ஹாலோ பிளாக் கற்களை கொண்டு கட்டப்பட்ட ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் கொண்ட வீட்டில்தான் வசித்து வருகிறார்கள். இவர் நினைத்தால் டெல்லியில் மகனுடன் தங்கலாம். ஆனால் சொந்த கிராமத்தை விட்டும் விவசாய தொழிலை விட்டும் செல்ல லோகநாதனுக்கு மனம் இல்லை.

சைக்கிளில் மண்வெட்டியுடன்
இன்னொரு ஆச்சரியப்படும் விஷயம் என்னவெனில் எல் முருகன் போலீஸ் பாதுகாப்புடன் சைரன் வைத்த காரில் வலம் வந்தாலும் அவரது தந்தை லோகநாதன் இன்று வரை ஒரு பழைய சைக்கிளையே பயன்படுத்திக் கொண்டு வருகிறார். தினந்தோறும் காலையில் மண்வெட்டியுடன் மனைவியை அழைத்துக் கொண்டு நிலத்திற்கு செல்கிறார். இவரது செயலை பார்த்து அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications