ம்ஹூம், சின்னப்பையா வந்துடுடா.. ஜீப்பை கட்டிபிடித்து கதறிய தாய்.. காதல் மணம் செய்த மகளால் பரிதவிப்பு
நாமக்கல் பெற்றோரின் கண்ணீர் வீடியோ வைரலாகிறது
நாமக்கல்: வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு, காதலனுடன் செல்ல தயாரான 18 வயது மகளை பிரிய மனமில்லாமல் பெற்றோர் நடத்திய கண்ணீர் போராட்டம் காண்போரை நிலைகுலைய செய்தது.
ராசிபுரம் அருகே உள்ள தாண்டாகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பவதாரணி.. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவரும் காதலித்து வந்தனர்... 3 வருட காதல் இது..!
இருவரும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள்.. இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்துள்ளது.. பெற்றோர் பவதாரணியை கண்டித்துள்ளனர்..

எதிர்ப்பு
காதலுக்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்.. ஆனாலும் பவதாரணி தனக்கு 18 வயது பூர்த்தியானதுமே வீட்டை விட்டு வெளியேறி மணியை திருமணம் செய்துள்ளதாக தெரிகிறது.. மணிக்கு 25 வயது பூர்த்தியாகிவிட்டது. திருமணம் செய்து கொண்ட தம்பதி இருவரும் பாதுகாப்பு கோரி நாமக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்..

நீதிபதி
இதையடுத்து, போலீசாரும் இருவரையும் நாமக்கல் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.. நீதிபதி விஜயன் இருவரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது பவதாரணி , கணவர் மணியுடன் தான் செல்வேன் என தெரிவித்தார். இருவரும் திருமண வயதை அடைந்து விட்டதால், சட்டப்படி அவர்கள் விருப்பப்படி செல்லலாம் என நீதிபதி கூறினார்.

காதல் ஜோடி
இதையடுத்து போலீசார் இருவரையும் போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்ல முற்பட்டனர். அப்போது அங்கு வந்த பவதாரணியின் அப்பா பச்சியப்பனும், தாய் சிந்தாமணியும் தங்களது மகளை கீழே இறக்கி விட்டு செல்லுமாறு வாகனம் முன்பு படுத்து அழுது புரண்டனர்... இதனால் ஜீப்பை போலீசாரால் இயக்க முடியவில்லை.. இதையடுத்து, காதல் ஜோடியை போலீசார் வேறு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்..

பரபரப்பு
பிறகு, தரையில் படுத்து அழுது புரண்ட பவதாரணியின் பெற்றோரை போலீசார் சமாதானம் செய்தனர்.. "சின்னப்பையா வந்துடுடா.." என்று மகளை பார்த்து தாய் கெஞ்சி அழுதது காண்போரை கலங்க வைத்தது.. மகள் உட்கார்ந்திருந்த அந்த போலீஸ் ஜீப்பின் பம்பரை கட்டிப்பிடித்து கொண்டு, பெண்ணின் அப்பா அழுது புரண்டு போராட்டம் செய்தது, மனதை கலங்கடிக்க செய்தது. இதன் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications