பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்.. வாயிலும், மூக்கிலும் ஒரே ரத்தம்.. உறைந்த தமிழ் சினிமா..!
நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் காலமானார்
நாமக்கல்: பிரபல குணச்சித்திர நடிகர் லிட்டில் ஜான் காலமானார்.. அவருக்கு வயது 43.. இதையடுத்து திரையுலகம் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகராகவும், காமெடி நடிகராவும் வலம் வந்தவர் லிட்டில் ஜான்.. இவரது இயற்பெயர் தனசேகரன்.
சினிமாவுக்காக லிட்டில் ஜான் என்று பெயரை மாற்றி கொண்டார்.. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த இவர் நடிப்பின் ஆர்வத்தால் சென்னையில் வாய்ப்பு தேடி அலைந்தார்.

வெங்காயம்
மொத்தமே 3 அடி உயரமுள்ள லிட்டில் ஜானுக்கு, பட வாய்ப்புகளும் ஓரளவு வந்தன.. சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும், சில படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார்... குறிப்பாக, வெங்காயம், ஐம்புலன் உள்பட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்த காமெடிகள் மக்களிடம் இவரை அடையாளப்படுத்தியது.. படவாய்ப்புகள் இல்லாத நேரத்தில் கிராமங்கள் தோறும் கோவில் திருவிழாக்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார் லிட்டில் ஜான்.

பள்ளிப்பாளையம்
அப்படித்தான், பள்ளிப்பாளையம் அருகே உள்ள மோடமங்கலம் என்கிற கிராமத்தில் மாரியம்மன் கோவில் பண்டிகை நடக்கிறது.. இந்த பண்டிகையை முன்னிட்டு கோயிலில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.. வழக்கம்போல் இந்த கலைநிகழ்ச்சியிலும் லிட்டில் ஜான் கலந்துகொண்டார்.. பின்னர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து தூங்கியவர், மறுநாள் காலையில் எழுந்திருக்கவில்லை.

வாயில் ரத்தம்
இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள், அவர் அருகில் சென்று பார்த்தபோதுதான், வாயிலும், மூக்கிலும் ரத்தம் வந்த நிலையில் கிடந்ததை பார்த்து அலறி துடித்தனர்.. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்... அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.. இதனால் நண்பர்கள் அதிர்ச்சி தாங்காமல் கதறி அழுதனர்.

மாரடைப்பு
தூங்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்திருப்பதாக கூறப்படுகிறது.. லிட்டில்ஜான் மறைவு செய்தி கேட்டு, திரையுலகினர் பலரும் இவரது உயிரிழப்பிற்கு இரங்கல் தெரிவித்தனர்.. இவரது இறுதிசடங்கு அல்லிநாயக்கன்பாளையத்தில் நடந்து முடிந்தது.. இதில் பல்வேறு கலை குழுக்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications