ஏறுது திமுக கிரேப்.. கோழிப்பண்ணைக்குள் போன திமுக எம்பி.. அடியோடு "அறுவடை".. அசத்துமா நாமக்கல் அதிமுக

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: கையில் கோழி முட்டைகளுடன், திமுக எம்பி ராஜேஷ்குமார் நாமக்கல் மாவட்டத்தையே சுற்று சுற்றி வருவதைப்பார்த்து, அதிமுக மிரண்டு கிடக்கிறதாம். இதையடுத்து, பதிலுக்கு களத்தில் தீவிரமாகி வருகிறதாம்.. என்ன நடக்கிறது நாமக்கல் தொகுதியில்?

மக்களவை தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.. இதில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் இளைஞரணி மாநில செயலாளராக இருந்த சூரியமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

Why did Nakkakkal K R N Rajeshkumar enter into the poultry farms and what is AIADMKs Plan

சூரியமூர்த்தி: ஆனால், சாதிரீதியாக சூரியமூர்த்தி பேசிய பழைய வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவியதுடன், கூட்டணி கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை வெளிப்படுத்தினர். எனவே, சூரியமூர்த்திக்கு பதிலாக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின், நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்.

இப்போது விஷயம் என்னவென்றால், வேட்பாளரை மாற்றியதற்கு பிறகு நாமக்கல் திமுக கூட்டணி, பம்பரமாக சுழன்று சுழன்று வேலை பார்க்கிறதாம்.

சுவாரஸ்யம்: அதிலும், ராஜேஸ்குமார் எம்பி ஒருபடி மேலே போய், மொத்த திமுகவின் கவனத்தையும் தன்பக்கம் குவிய வைத்து வருகிறார்.. ராஜேஸ்வரனின் பிரச்சாரங்கள் என்றாலே தொகுதி மக்கள் குதூகலமாகிவிடுகிறார்களாம். அந்த அளவுக்கு சுவாரஸ்யமாகவும், சுறுசுறுப்பாகவும் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார். நேற்றுகூட, நாமக்கல்லில் உள்ள ஒரு கோழிப்பண்ணைக்குள்ளே நுழைந்துவிட்டார் ராஜேஸ்குமார்..

நாமக்கல்லை பொறுத்தவரை, கோழிக்கறியை உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.. நாமக்கல் உள்ளிட்டட பல்லடம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம், தினமும் 40 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி நடந்து வருகிறது. கறிக்கோழியை போலவே, நாமக்கல் முட்டைகளுக்கும் பெரும் கிராக்கி உள்ளது.. இதற்கு காரணம், நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே 1000-க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன..

கோழிப்பண்ணை: ஆக, இந்த கோழிப்பண்ணைகளை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும், அவர்களை சார்ந்த குடும்பத்தினரும் உள்ளனர்.. இவர்களின் லட்சக்கணக்கான ஓட்டுக்களைதான் திமுக கூட்டணி "கொக்கி" போட்டு தூக்க பார்க்கிறது..

எனவே, நேற்றைய தினம், எம்பி ராஜேஷ்குமார், தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தனுடன் சேர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.. வெண்ணந்தூர் ஒன்றியம், அனந்தகவுண்டம்பாளையம் கோழிப்பண்ணையில் முட்டைகள் சேகரித்து அங்கு பண்ணை உரிமையாளர் மற்றும் பணிபுரியும் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

முட்டைகள்: கோழிப்பண்ணைக்கு உள்ளே போன ராஜேஷ்குமார், திடீரென கையில் கோழி முட்டையுடன் வெளியே வந்தார்.. அந்த கோழி முட்டைகளுடனேயே அங்கிருந்த மக்களிடம் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார்.. இதைப்பார்த்து நாமக்கல் மக்கள் அசந்துப்போனார்கள்..

இதுகுறித்து ராஜேஷ்குமார் எம்பி சொல்லும்போது, "நாமக்கல் மாவட்ட கோழி பண்ணை மூலமாக நாள் ஒன்றுக்கு 7.50 கோடி அளவுக்கு முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதனால்தான், நாடாளுமன்ற தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு முட்டை ஏற்றுமதி மையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது நாமக்கல் மாவட்டத்திற்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

கோழிகள்: கோழிகளை விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் சேர்க்கப்படமாட்டாது என்ற உறுதி மொழியை, பாராளுமன்றத்தில் எடுத்துரைத்து மத்திய அரசிடம் பெற்றுதந்தேன்.. ஏனென்றால் கோழியானது பாதுகாப்பான முறையில் வளர்க்கப்பட்டு நாடு முழுவதும் மக்களுக்கு சத்தான உணவாக உள்ளது.. முட்டையானது கலப்படமற்ற உணவாகவும் உள்ளது" என்றார்.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, அதிமுகவின் கொங்கு கோட்டையில் ஒன்றாக கருதப்படுகிறது.. அதிலும் அதிமுகவின் மூத்த தலைவர் தங்கமணியின் களமாகும்.. அப்படியிருந்தும்கூட, இந்த முறை பிரச்சாரத்தில் அதிமுகவை, திமுக கூட்டணி ஓவர்டேக் செய்துள்ளதாக தெரிகிறது.

பிரச்சாரம்: அதுமட்டுமல்ல, திமுக வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்வதைபோலவே, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளருக்கும், பிரச்சாரம் செய்து, வெற்றி பெற வைக்கும் முனைப்பில் திமுக ஈடுபட்டு வருவது தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதை மையமாக வைத்தே, கையில் கோழி முட்டையுடன் நாமக்கல்லில் வலம் வந்து கொண்டிருக்கிறாராம் எம்பி ராஜேஷ்குமார்.. ஆனால், கோழிமுட்டைகள், திமுகவின் வாக்குகளாக மாறுமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+