10 அணு ஆயுதத்தை காணோம்.. பதறியடித்து டிரம்ப் சொன்ன மேட்டர்.. ஈரான் சத்தமே இல்லாமல் செஞ்ச சம்பவம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது நடத்தப்பட்ட ராணுவ தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அந்த தாக்குதல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைகளில் ஒன்று என்று அவர் கூறியுள்ளார்.

Israel Iran

ஈரான் அணு ஆயுத தளங்கள் அழிப்பு

அமெரிக்க வான்வழித் தாக்குதலில் ஈரானின் யுரேனியம் இருப்பு அழிக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். ஆனால் ஈரானின் யுரேனியம் இருப்பு எங்கே உள்ளது என்பது தெரியவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது யுரேனியம் இருப்பை நாங்கள் அழித்துவிட்டோம் என்று உறுதியாக கூற முடியாது.. யுரேனியம் எங்கே இருக்கிறது என்று உறுதியாக சொல்ல முடியாது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் அணு ஆயுதத் திட்டம் "முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய ஒரு நாளுக்குப் பிறகு, ஈரானிடம் ஆயுதத் தரம் வாய்ந்த யுரேனியம் தற்போது எங்கே உள்ளது என்று தங்களுக்குத் தெரியாது என்று அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

முக்கிய இலக்கான ஈரானின் ஃபோர்டோ யுரேனியம் செறிவூட்டும் ஆலையின் செயற்கைக்கோள் படங்கள், அமெரிக்காவால் வீசப்பட்ட 30,000 பவுண்டுகள் எடை கொண்ட பதுங்கு குழி குண்டுகளால் ஆழமான துளைகள் ஏற்பட்டிருப்பதைக் காட்டுகின்றன. ஆனால் அங்கே முழுமையாக யுரேனியம் நீக்கப்பட்டதா என்பதை சொல்ல முடியாது, என்று கூறி உள்ளனர். அதோடு இஸ்ரேலிய ராணுவத்தின் ஆரம்ப அறிக்கைகள், அந்த தளம் கடுமையாக சேதமடைந்தாலும் முழுமையாக அழிக்கப்படவில்லைஎன்று கூறுகின்றன.

இதுகுறித்து இஸ்ரேல் அதிகாரிகள் கூறுகையில், "ஈரான் யுரேனியத்தை நகர்த்தியது என்பதைக் காட்ட போதுமான ஆதாரங்கள் உள்ளன. 400 கிலோ யுரேனியம் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம். இதன் மூலம் 10 அணுகுண்டுகளை தயாரிக்கலாம்.

துணை அதிபர் ஜேடி வான்ஸ்

முக்கியமாக அங்கிருந்து 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு மாயமாகிவிட்டது என்று அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்சி கூறினார்.இந்த செறிவூட்டப்பட்ட 400 கிலோ யூரேனியம் மூலம் 10 அணு ஆயுதங்களை உருவாக்க முடியும் என்றும் ஜேடி வான்சி ஏபிசி நியூஸிடம் தெரிவித்தார். குறிப்பாக 60 சதவீதமாக செறிவூட்டப்பட்ட யுரேனியம், ஈரானின் முக்கிய தளங்களில் இருந்து தாக்குதலுக்கு முன்பே பாதுகாப்பாக கடத்தப்பட்டதாக நம்புகிறோம் என்றும் கூறினார்.

இந்த நிலையில்தான் ஈரான் அணு ஆயுத தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், இந்த விஷயத்தில் சிஎன்என் மற்றும் நியூயார்க் டைம்ஸ் இரண்டும் தவறான தகவல்களை பரப்புவதாகவும் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "போலி செய்தி சிஎன்என் மற்றும் தோல்வியுற்ற நியூயார்க் டைம்ஸ் இரண்டும் இணைந்து, வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைகளில் ஒன்றைக் குறைமதிப்பீடு செய்ய முயற்சிக்கின்றன. ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன! டைம்ஸ் மற்றும் சிஎன்என் இரண்டும் பொதுமக்களால் விமர்சிக்கப்படுகின்றன!" என்று கூறியுள்ளார்.

ஈரான் மீதான ராணுவ தாக்குதல் வெற்றி என்றும், அணு ஆயுத தளங்கள் அழிக்கப்பட்டன என்றும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், சிஎன்என் மற்றும் நியூயார்க் டைம்ஸ் இரண்டும் தவறான செய்திகளை வெளியிடுவதாக அவர் சாடியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+