கிளாஸ்ரூமை படுக்கை அறையாக மாற்றிய அமெரிக்க ஆசிரியைகள்.. அலறிய பெற்றோர்கள்.. என்ன நடந்தது
நியூயார்க்: அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுடன் செக்ஸ் வைத்துக்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டில் இதுவரை 6 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து பள்ளிகளில் கண்காணிப்புகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
மனித வாழ்க்கையில் கல்வி என்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அதை சொல்லி தருபவர்களும் முக்கியமானவர்கள்தான். உலகம் முழுவதும் உள்ள அனைத்து இன கலாச்சாரங்களிலும் ஆசிரியர்களுக்கு என்று தனி மரியாதை இருக்கிறது. ஆனால் இந்த ஆசிரியர்களே சில நேரத்தில் வரம்பு மீறினால் என்ன செய்வது? அப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசியர் கைது, மாணவியை ஆபாச வீடியோ எடுத்த ஆசிரியர் கைது என செய்திகள் அவ்வப்போது வந்துக்கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் இதுபோன்று, ஆனால் கொஞ்சம் வித்தியாசமான சம்பவம் அரங்கேறியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது, பள்ளி மாணவர்களை ஆசிரியைகள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், "இந்த சம்பவம் அமெரிக்காவின் வெவ்வேறு பள்ளிகளில் நடந்துள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக நாங்கள் சில புகார்களை பெற்றிருந்தோம். புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 16 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள்தான். கென்டக்கியைச் சேர்ந்த 38 வயதான பள்ளி ஆசிரியர் எலன் ஷெல் டான்வில்லே, அவருடைய வகுப்பு சிறுவர்களுடன் நெருக்கமாக பழகியுள்ளார். பின் மொபைல் நம்பர் கொடுத்து அடிக்கடி போன் செய்ய சொல்லி இருக்கிறார். இப்படி இருக்கும்போது திடீரென ஒருநாள் பள்ளியின் யாருமற்ற வகுப்பறையில் 16 வயது மாணவர் ஒருவருடன் செக்ஸில் ஈடுபட்டுள்ளார். நாங்கள் ஆசிரியையை கைது செய்து விசாரித்தபோது மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது இந்த ஆசிரியர் ஒரேயொரு மாணவருடன் மட்டுமல்லாது நான்கைந்து மாணவர்களுடன் இவர் செக்ஸ் கொண்டிருக்கிறார்.
அதேபோல மற்றொரு பள்ளியில் ஹீதர் ஹேர் எனும் ஆசிரியரும் இதே போன்று பதின் பருவ மாணவனுடன் செக்ஸ் வைத்துக்கொண்டதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரைத் தொடர்ந்து ஓக்லஹோமாவில் எமிலி ஹான்காக் எனும் ஆசிரியையை நாங்கள் கைது செய்துள்ளோம். தொடக்கத்தில் இவர் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பள்ளியிலிருந்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டோம். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக அவர் சில தகவல்களை கூறினார். எனவே சம்பந்தப்பட்ட மாணவரிடம் நாங்கள் விசாரணை நடத்தினோம். விசாரணையில் சம்பவம் உண்மை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து 15 வயது மாணவனுடன் செக்ஸ் வைத்துக்கொண்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு சமபவத்தில் 35 வயதான கிறிஸ்டன் கண்ட் எனும் ஆசிரியரை நாங்கள் கைது செய்துள்ளோம். இதேபோல பள்ளியில் ஈட்டி எறிதல் பயிற்சியாளராக பணியாற்றிய ஹன்னா மார்த் எனும் இளம் ஆசிரியை மீதும் இதே குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. நீங்கள் இந்த ஆசிரியரை பார்த்தால் இந்த குற்றச்சாட்டுக்கும் இவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அடித்து கூறுவீர்கள். ஆனால் மாணவரிடம் விசாரித்ததில் தகவல் உண்மை என்பதால் நாங்கள் அவரை கைது செய்துள்ளோம்" என்று காவல்துறையினர் கூறியள்ளனர். இப்படியாக அமெரிக்கா முழுவதும் 6 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியைகளே மாணவர்களிடம் இப்படி நடந்துக்கொண்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications