"வெறித்தனம்".. 8 புருஷனாமே.. ஏன் தெரியுமா.. இந்த மேடம், ஒரு "விளக்கம்" சொல்றாங்க.. என்னன்னு பாருங்க
8 கணவர்களுக்கு 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் ஒரு இளம்பெண்
நியூயார்க்: இளம்பெண் ஒருவர் குழந்தைகளை பெற்றுள்ளது, மிகப்பெரிய விவாதமாக வெடித்துவிட்டது.. அதுவும் அமெரிக்காவில்..!!
உலகம் முழுவதுமே மக்கள்தொகை பெருக்கம் ஒரு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.. ஆண்டுக்கு 83 மில்லியன் மக்கள் அதிகரித்து வருகிறார்களாம்.
உலக மக்கள் தொகை 2030ல் 8.6 பில்லியனாகவும், 2050ல் 9.8 பில்லியனாகவும், 2100ல் 11.2 பில்லியனாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

ஷாக் & ஷாக்
மக்கள் தொகை அதிகரிப்பு தொடர்பாக பல நாடுகளும் விழிப்புணர்வு நடத்திவருகின்றனர்.. குழந்தை பெற்றுக் கொள்வதை குறைத்து கொள்ளும்படியும் அந்தந்த நாட்டு அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.. ஆனால், மொத்த உலக நாடுகளுக்கும் ஒரு ஷாக் தந்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர்.. இந்த பெண் டென்னஸி என்ற பகுதியை சேர்ந்தவர்.. இவர் பெயர் பிஹாய்... இவருக்கு மொத்தம் 11 குழந்தைகள் இருக்கிறார்களாம்.. அந்த காலத்தில் 12 குழந்தைகள் என்பது நம்ம ஊரிலேயே சாதாரண விஷயமாக இருந்தது.

ஹைலைட்ஸ்
டஜன் கணக்கில் நம் தாத்தா, பாட்டிகள் குழந்தைகளை பெற்றதுடன், அந்த குழந்தைகளை ஆரோக்கியமாகவும் வளர்த்து வந்ததை மறுக்க முடியாது.. ஆனால், இந்த காலத்தில் 12 குழந்தைகள் என்பது வியப்பாக உள்ளது.. அதிலும், நாகரீகம் வாய்ந்த படித்த பெண், இத்தனை குழந்தைகளை பெற்று கொண்டது, அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. இதில் இன்னொரு ஹைலைட்டும் உள்ளது.. இந்த குழந்தைகளுக்கு மொத்தம் 8 அப்பாக்களாம்.. அதாவது, இந்த பெண்ணுக்கு 8 கணவன்கள் இருக்கிறார்கள்.

வினோத பெண்
இந்த 8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகள் பெற்றுள்ளார்.. இதைவிட ஆச்சரியம், இதற்காக இந்த பெண் தரும் விளக்கம்தான் அனைவரையும் அசரடித்துவிட்டது.. பிஹாய் சொல்கிறார், "8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகள் எனக்கு பிறந்ததற்காக நான் கொஞ்சம்கூட வெட்கப்படவில்லை.. முதல்ல நான் ஏன் வெட்கப்படணும்? இது எனக்கு நல்லதுதான்.. எப்படின்னு கேளுங்க.. உங்களிடம் ஒன்னே ஒன்னு இருப்பதாக வைத்து கொள்ளுங்கள், அந்த அந்த ஒன்றையும் யாராவது எடுத்துக்கொண்டால், உங்களிடம் ஜீரோ மட்டுமே இருக்கும்...

ஓ காட்
ஆனால் இதுவே உங்களிடம் 8 இருந்தால், அதிலிருந்து மூன்றை எடுத்தால்கூட, மிச்சம் 5 உங்களிடமே இருக்கும்.. இன்னும் புரியலையா உங்களுக்கு? அதாவது என் குழந்தைகளுக்கு ஒரு அப்பா மட்டும் இருந்தால், அவர் என்னை விட்டு பிரிந்தாலோ அல்லது இறந்துவிட்டாலோ என் குழந்தைகள் அப்பா இல்லாமல் ஆகிவிடுவார்கள்.. ஆனால் இப்போது 8 பேரில் 3 பேர் செத்து போயிட்டாலும், மிச்சம் 5 பேர் இருப்பாங்களே.. இது நல்லதுதானே என்று உலகமகா விளக்கம் ஒன்றை கொடுத்து, அனைவரின் வாயையும் பிளக்க செய்துள்ளார் இந்த விநோத பெண்..

ஹய்யோ
ஆனால், இந்த விளக்கத்தை கேட்டு, பலரும் அசிங்க அசிங்கமாக விமர்சித்து வருகிறார்கள்.. ஆனால், பிஹாய் எதை பற்றியும் கவலைப்படவேயில்லையே.. யார் என்ன சொன்னாலும், அதை காதிலேயே வாங்கி கொள்ளவில்லை.. "இன்னும் நிறைய குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்று, எனக்கு ஆசை ஆசையாய் வருகிறது" என்று சிரித்து கொண்டே சொல்கிறாராம்.. என்னத்த சொல்றது?!!
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications