ஆஹா ஆச்சரியத்தை பாருங்க! பிறந்து 3 நாட்களில் தலையை தூக்கி தவழ்ந்த குழந்தை.. எப்புட்றா!
நியூயார்க்: பிறந்து மூன்றே நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையொன்று தலையுயர்த்தி பார்த்து, தவழ்ந்து நகர்ந்துள்ள சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.
பொதுவாக மனிதர்களுக்கு 206 எலும்புகள் இருக்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கை அனைவருக்கும் பொருந்தாது. காரணம், பிறக்கும் குழந்தைகளுக்கு சுமார் 300 எலும்புகள் இருக்கின்றன. இவை நாளடைவில் குழந்தைகள் வளர வளர ஒவ்வொரு எலும்பாக ஒன்று சேர்ந்து 206ஆக குறைந்துவிடும். எனவேதான் குழந்தைகள் பிறந்தவுடன் நடக்காமலும், கழுத்து நிற்காமலும் இருக்கிறது. இந்த கழுத்து வலுவடைய குறைந்தபட்சம் 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை ஆகும்.

குழந்தை பிறந்தவுடன் உடலில் உள்ள தோல் கொஞ்சம் உரிய தொடங்கும். அதேபோல, பூனை முடி கழுத்திலும், மார்பிலும் லைட்டாக தெரியும். பார்வை குறிப்பிட்ட இடத்தில் நிலைத்து நிற்காமல் அங்குமிங்குமாய், தொட்டியில் உள்ள மீனை போல அலைந்துக்கொண்டிருக்கும். அதேபோல அடிக்கடி அழவும் செய்யும். இந்த அழுகை எதற்காக என புரிந்துகொள்வது சற்று கடினம். பச்சிளம் குழந்தைகளுக்கு 18 மணி நேர உறக்கம் அவசியம்.
அப்போதுதான் குழந்தையின் வளர்ச்சி சீரானதாக இருக்கும். மட்டுமல்லாது தாய்ப்பால் மட்டும் கொடுத்தால் போதுமானதுதான். இப்படியாக குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக வளரச்சியடைகின்றன. ஆனால் ஒரு சில குழந்தைகளுக்கு இது விதி விலக்காக இருக்கிறது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஒயிட் ஓக் நகரைச் சேர்ந்த சமந்தா எனும் இளம் பெண்ணுக்கு பிறந்த இந்த குழந்தையும் இப்படி விதிவிலக்காக இருக்கிறது.
சமந்தாவுக்கு குழந்தை பிறந்து மூன்று நாட்கள்தான் ஆகிறது. ஆயினும் இந்த குழந்தை தனது தலையை உயர்த்தி பார்க்கிறது. மட்டுமல்லாமல் தவழவும் தொடங்கியுள்ளது. ஒரு குழந்தை வெறும் மூன்று நாட்களில் தவழ்கிறது, தலையை உயர்த்துகிறது எனில் அதற்கான சான்ஸே கிடையாது என மருத்துவர்கள் கூறுகின்றன. இருப்பினும் விதிவிலக்காக சில குழந்தைகள் இப்படி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
குழந்தையின் இந்த செயலை சமந்தா தனது மொபைலில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "எனது மகள் முதன் முறையாக தலையை உயர்த்தி பார்த்தபோது நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். எனக்கு குழந்தைகள் குறித்து தெரியும். எந்த குழந்தையும் பிறந்த மூன்று நாட்களிலேயே இப்படி தலையை உயர்த்தியதில்லை. இத்தனைக்கும் இந்த சம்பவம் வெறும் இரண்டரை நாட்களில்தான் நடைபெற்றிருக்கிறது.
இது மிகவும் அதிசயமான செயல். அந்த சமயத்தில் என்னுடன் அம்மா மட்டும்தான் இருந்தார். இதனை அவர் வீடியோவாக எடுக்கச் சொன்னார். அதுவும் சரிதான், ஏனெனில் எனது கணவரிடம் இதைப்பற்றி சொல்லும்போது அவர் நிச்சயம் நம்ப மாட்டார் என்று எனக்கு தெரியும். எனவே வீடியோ எடுத்துக்கொண்டேன்" என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோதான் சமூக சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவுக்கு பலரும் கமென்ட்டில் கேள்வியெழுப்பியுள்ளனர். "குழந்தை என்ன 9 மாசமா தொப்புள் கொடியை புடிச்சி பவர் லிஃப்ட் செஞ்சுட்டு இருந்துச்சா?" என்று விளையாட்டாக ஒருவர் கமென்ட் செய்திருக்கிறார்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications