உக்ரைனுக்கு பல்லாயிரம் கோடி நிதி! ஆனா போருக்கு காரணம் சீனாவாம்! கம்பி கட்டும் கதை சொல்லும் அமெரிக்கா
நியூயார்க்: இந்த பக்கம் உக்ரைனுக்கும், அந்த பக்கம் இஸ்ரேலுக்கும் அமெரிக்கா தொடர்ந்து போருக்கான நிதியுதவி அளித்து வரும் நிலையில், போரை தூண்ட ரஷ்யாவுக்கு சீனா உதவுவதாக புலம்ப தொடங்கியுள்ளது. சீனா சென்ற அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இந்த குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
சோவியத் காலத்தில் அதற்கு போட்டியாக நேட்டோ உருவாக்கப்பட்டது. ஆனால் சோவியத் உடைந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட இன்னமும் நேட்டோ விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இதுதான் ரஷ்யா-உக்ரைன் போருக்கான தொடக்கப் புள்ளி. கொஞ்சம் கொஞ்சமாக கிழக்கு நோக்கி தனது ஆதிக்கத்தை விரிவாக்கிக் கொண்டே வந்த அமெரிக்காவின் நேட்டோ கடைசியாக உக்ரைனுக்கு வந்து நின்றது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஆதரவாளர்.

அப்புறம் என்ன, உள்ளேன் அய்யா என்று சொல்லி நேட்டோவுக்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றார். உக்ரைன் ரஷ்யாவுக்கு பக்கத்தில் உள்ள நாடு. ஏற்கெனவே ரஷ்யாவுக்கும் அமெரிக்காவும் ஏழரை சனி. இப்படி இருக்கும்போது உக்ரைன் நேட்டோவில் இணைந்துவிட்டால் அமெரிக்க படைகள் நேரடியாக ரஷ்ய எல்லையில் குவிக்கப்படும். இது பெரும் அச்சுறுத்தல். எனவே ரஷ்யா போரை அறிவித்தது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த போர் தொடங்கியது.
2 வாரங்கள்தான் போர் நீடிக்கும் என்று ரஷ்யா சொன்னது. ஆனால், அமெரிக்கா கொடுத்த ஆயுத உதவியால் 2 ஆண்டுகள் கடந்து இப்போதுவரை உக்ரைன்-ரஷ்யா போர் நீடித்து வருகிறது. இதுவரை ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு மனிதாபிமான உதவியாகவும், ரூ.24 ஆயிரம் கோடி வளர்ச்சி நிதி என்கிற பெயரிலும், ரூ.1.9 லட்சம் கோடி நேரடி உதவியாகவும் அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கியிருக்கிறது.
இந்த நிதி எவ்வளவு பெரியதெனில், தமிழ்நாட்டில் உள்ள 7 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கடந்த ஆண்டு போடப்பட்ட பட்ஜெட் தொகை ரூ.34,540 கோடிதான். அப்படியெனில் உக்ரைன் எவ்வளவு பெற்றிருக்கிறது என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
இதை அமெரிக்கா தனது https://www.usaid.gov/ukraine அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிட்டிருக்கிறது. இவ்வளவு நிதி கொடுத்ததன் விளைவாக, இப்போது வரை போர் நீடித்து வருகிறது.
இப்படி இருக்கும் பட்சத்தில் ரஷ்யா-உக்ரைன் போரை சீனா தூண்டி விடுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் குற்றம் சாட்டியுள்ளார். இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோரை ஆண்டனி பிளிங்கன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சீனாவால்தான் ரஷ்ணா உக்ரைன் போர் நீடித்து வருவதகா கூறியுள்ளார்.
“ரஷ்யாவுக்கு சீனா மூர்க்கத்தனமாக ஆதரவளித்து வருகிறது. சீனாவின் ஆதரவில்லாமல் ரஷ்யா நிச்சயம் இந்த போரை தனியாக சமாளித்திருக்க முடியாது. இது குறித்து நாங்கள் எங்கள் கவலையை தெரிவித்துக்கொள்கிறோம். ரஷ்யாவுக்கு இயந்திர துப்பாக்கிகள், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் நைட்ரோ செல்லுலோஸ் ஆகியவற்றை சீனா அதிக அளவில் சப்ளை செய்கிறது. நைட்ரோ செல்லுலோஸ் ஏவுகணைகளில், நவீன ரக துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படுகிறது” என்று பிளிங்கன் குற்றம்சாட்டியுள்ளார்.
சீன அதிகாரிகள் இது குறித்து மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். ரஷ்யா எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications