Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெல்ஜியம் பட்டத்து ராணியையும் விட்டு வைக்காத டிரம்ப்.. ஐயோ போச்சே போச்சே

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பால், பெல்ஜியம் நாட்டின் பட்டத்து ராணியின் கனவுகளிலும் கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. "ஐயோ போச்சே போச்சே" என்று அங்கலாய்க்கும் நிலை!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாடு மாணவர்களை சேர்க்க தடை விதித்து டிரம்ப் நிர்வாகம் போட்ட உத்தரவால் பல நூறுக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களும் கணிசமான அளவு படித்து வருவதால், அவர்களும் அதிர்ந்து போனார்கள்.

belgian-princess-faces-uncertainty-at-harvard-after-trump-s-foreign-student-ban-policy

பெல்ஜியம் இளவரசிக்கு பாதிப்பு

டிரம்பின் இந்த உத்தரவால் பெல்ஜியம் நாட்டு இளவரசி எலிசபெத்தும் பாதிப்பை சந்தித்து உள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிப்புக்கு செல்ல இருக்கும் இளவரசி, தற்போது விதிக்கப்பட்டு இருக்கும் தடையால் என்ன செய்யலாம் என யோசித்து கொண்டு இருக்கிறாராம்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படிப்பை முடித்து விட்டு சம்மர் விடுமுறைக்காக தற்போது தனது அரண்மனைக்கு சென்று உள்ளார் இளவரசி எலிசபெத். 23 வயதான இவருக்கு அடுத்த ஆண்டு கல்வி பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இது குறித்து பெல்ஜியம் அரண்மனை கூறியிருப்பதாவது:- இந்த (டிரம்ப் நிர்வாகத்தின் முடிவு) என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பது குறித்து நிலமையை கண்காணித்து வருகிறோம்.

அடுத்த ஆண்டு என்ன நடக்கும்?

தற்போதைக்கு எதுவும் கூற முடியாது. அடுத்த ஆண்டு என்ன நடக்கும் என்பதை நாம் பார்க்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் மன்னர் பிலிப்பி மற்றும் ராணி மதிலேட் தம்பதிக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் முதலாவது மகள்தான் எலிசபெத். இவர் தற்போது பொது நிர்வாகத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பயின்று வருகிறார். ஏற்கனவே, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியலில் பட்டம் பெற்றுள்ளார்.

டிரம்பின் அதிரடி நடவடிக்கைகள்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து தினம் தினம் பரபரப்பை கிளப்பி வருகிறார். இவரது சமீபத்திய நடவடிக்கையாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க விதிக்க தடையாக இருந்தது. டிரம்ப் நிர்வாகம் இந்த உத்தரவு போடுவதற்கு முன்பாக அந்த பல்கலைக்கழகம் மீது ஏற்கனவே பல்வேறு தொடர்ச்சியாக பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டு வந்தார்.

அதாவது பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க கூடாது என்று டிரம்ப் நிர்வாகம் உத்தரவு போட்டது. இதற்கு ஹார்வர்டு பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்தது. இதனால், அதிரடியாக அந்த பல்கலைக்கழகத்திற்கு வழங்கி வந்த 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்தது.

800 இந்திய மாணவர்கள் நிலை

இந்திய மதிப்பில் சொல்வது என்றால் கிட்டத்தட்ட ரூ.18 ஆயிரம் கோடி நிறுத்தி வைக்கப்பட்டது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை விடாத டிரம்ப் நிர்வாகம், பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது. இதனால் அங்கு பயின்று வரும் 800-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான போராட்டம், இனப் பாகுபாடு எதிர்ப்பு போன்ற போராட்டங்கள் உள்ளிட்டவவை நடைபெற்று வருவதாகவும், பல்கலைக்கழகத்தில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் தகவல்களை வழங்குமாறு டிரம்ப் அரசு கேட்டுக்கொண்டதை ஏற்க பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துவிட்டதாகவும் கூறி இத்தகைய தடை விதிக்கப்பட்டது.

இடைக்கால தடை விதிப்பு

இந்த தடையை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு இடைக்கால நிவாரணம் கிடைத்துள்ளது. நீதிமன்றத்தில், டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை சட்ட மீறல் நடவடிக்கை என வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 29 ஆம் தேதி நடைபெறுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+