நடுங்கிப்போன ஜஸ்டின் ட்ரூடோ! கனடா-இந்தியா மோதலில் புகுந்த எலான் மஸ்க்! எதிர்பார்க்காத திருப்பம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இந்தியா கனடா இடையிலான மோதலுக்கு இடையில் கனடாவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க் வைத்துள்ளார்.

இந்தியா கனடா இடையிலான மோதல் உச்சம் அடைந்துள்ளது. இவர்களுக்கு இடையிலான மோதல் சர்வதேச அரசியல் மோதலாக, சர்வதேச அரசியல் அழுத்தமாக மாறி உள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தங்கள் நாட்டு நாடாளுமன்றத்தில் இந்தியாவிற்கு எதிராக பேசிய சில வார்த்தைகள்தான் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் காரணமாக அமைந்தது.

Canada vs India issue: Elon Musk gives an explosive statements against Justin Tredeau

ஒரு 3 நிமிட உரையில்.. இரண்டு நாட்டு உறவை.. சர்வதேச உறவை எப்படி நாசமாக்குவது என்று கிளாஸ் எடுத்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. வெறும் 3 நிமிட உரை மூலம் நாடாளுமன்றத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவை விமர்சனம் செய்து தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார். பொதுவாக சர்வதேச விவகாரங்களில், இது போன்ற விஷயங்களில் தலைவர்கள் ராஜாங்க ரீதியாகவே உரையாடுவார்கள்.

ஆனால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரடியாக நாடாளுமன்றத்தில் பொதுப்படையாக இந்தியாவிற்கு எதிராக பேசியது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. கனடாவில் இருக்கும் காலிஸ்தானி இயக்கங்கள் இந்தியாவை பிளவுபடுத்த நினைப்பதாக இந்தியா குற்றச்சாட்டு வைக்கிறது. பஞ்சாப் உள்ளிட்ட இந்தியாவின் சில பகுதிகளை பிரித்து சீக்கியர்களுக்கு என்று தனி நாடு உருவாக்குவதே காலிஸ்தானி அமைப்பின் நோக்கம் ஆகும்.

மோதல் காரணம்: இந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளுக்கு கனடா ஆதரவு கொடுப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த நிலையில்தான், சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதுதான் இரண்டு தரப்பிற்கும் மோதல் ஏற்பட முக்கியமான காரணம். இதை தொடர்ந்து இந்தியாவின் வெளியுறவு அதிகாரிகளை கனடா வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் கனடாவின் வெளியுறவு துறை அதிகாரிகளை வெளியேற்றியது. இதை தொடர்ந்து கனடாவிற்கு விசா கொடுப்பதிலும் இந்தியா தடை விதித்தது.

இப்படி போய் கொண்டு இருந்த பிரச்சனையில் அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை கனடா உள்ளே கொண்டு வந்தது. அவர்களின் உதவியை இந்தியாவிற்கு எதிராக கேட்டது. இதில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக அந்த நாடுகள் கூறின. ஆனாலும் இந்தியாவிற்கு எதிராக கூட்டு அறிக்கை தாக்கல் செய்யவும், கூட்டு கண்டனம் தெரிவிக்கவும் மேற்கு உலக நாடுகள் மறுத்துவிட்டன.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்னுடைய பேச்சு கருத்து சுதந்திரம் என்று.. காலிஸ்தான் போராட்டக்காரர்கள் வைப்பது கருத்து சுதந்திரம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் இந்தியா கனடா இடையிலான மோதலுக்கு இடையில் கனடாவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க் வைத்துள்ளார்.

அதன்படி கனடாவில் கடுமையாக கருத்து சுதந்திரத்திற்கு எதிரான சட்டங்கள் உள்ளன. உலகிலேயே கருத்து சுதந்திரத்தை முடக்கும் அடக்கும் அரசுகளில் ஒன்றாக ஜஸ்டின் ட்ரூடோ அரசு உள்ளது. சமீபத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுக்கு எதிராக கூட அவர்கள் சட்டம் கொண்டு வந்துள்ளனர், உலகிலேயே மிக மோசமான கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விதிகளை கொண்டு வந்துள்ளனர்.

முக்கியமாக ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் இருக்கும் மக்களின் கருத்து சுதந்திரத்தை நொறுக்கிக்கொண்டு இருக்கிறார் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்னுடைய பேச்சு கருத்து சுதந்திரம் என்று.. காலிஸ்தான் போராட்டக்காரர்கள் வைப்பது கருத்து சுதந்திரம் என்றும் தெரிவித்துள்ள நிலையில்தான் எலான் மஸ்க் இந்த விமர்சனத்தை வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+