கடலில் விழுந்த சீன உளவு பலூன் பாகங்கள்! கண்டுபிடித்த அமெரிக்காவிற்கு அதிர்ச்சி! அப்படி என்ன இருந்தது
சீன பலூனின் பாகங்களை மீட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நியூயார்க்: அமெரிக்க அரசால் அட்லாண்டிக் கடலில் சுட்டு வீழ்த்தப்பட்ட சீனாவிற்கு சொந்தமான பலூன் குறித்த அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவில் சீனாவின் உளவு பலூன்கள் பறந்த விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இதன் மூலம் சீனாவிற்கு என்ன மாதிரியான உளவு தகவல்கள், புகைப்படங்கள் அனுப்பப்பட்டன என்று விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. வடக்கு அமெரிக்கா மேலே சீனாவின் இந்த ராட்சச பலூன் பறந்து கொண்டு இருந்தது. இந்த பலூன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்டது.

சீன பலூன்
சீனாவின் உளவு பலூன் இது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. முதலில் வெள்ளை நிறத்தில் எதோ பறக்கிறது என்று மட்டுமே கூறப்பட்டது. காரணம் பயணிகள் விமானம் பறக்கும் உயரம், போர் விமானம் பறக்கும் உயரத்திற்கும் அதிகமாக 30 கிமீ உயரத்திற்கு அருகே இந்த பலூன்கள் பறந்து கொண்டு இருந்தன. பலூனில் கீழே சென்சார்கள் இருப்பதும், கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அதில் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாதனங்கள் அனைத்தும் சோலார் பேனல்கள் உதவியுடன் இயங்கி வந்துள்ளன. பெரிய ராட்சச சோலார் பேனல்கள் இதில் இருந்தன.

சுட்டு வீழ்த்தியது
அதோடு இவை ஹீலியம் உதவியுடன் வானில் பறந்து வந்துள்ளன. அமெரிக்காவின் ராணுவ தளவாடங்களுக்கு மேலே இவை பறந்து இருக்கின்றன. முதலில் இதை சீனா தங்களுடைய பலூன் இல்லை என்றது. இந்த பலூன் எங்களுடைய பலூன் கிடையாது. இதற்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது என்று சீனா கூறி வந்தது. அதன்பின் இது எங்களுடைய பலூன்தான். அட்லாண்டிக் கடலில் சர்வதேச எல்லையில்தான் இது பறந்து கொண்டு இருந்தது. இது வானிலைக்காக பறக்க விடப்படும் பலூன். வானிலையை கணிப்பது மட்டுமே இதன் வேலை. ஆனால் இதை பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.

உளவு கருவி
முக்கியமாக இது உளவு கருவி எதையும் கொண்டு இருக்கவில்லை. அமெரிக்காவின் வான் எல்லைக்குள் இது தவறுதலாக சென்றுவிட்டது. அதீத காற்று காரணமாக அமெரிக்காவின் வான் எல்லைக்குள் இது தவறுதலாக நுழைந்துவிட்டது என்று சீனா விளக்கம் அளித்தது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா அந்த பலூனை சுட்டு வீழ்த்தியது. அட்லாண்டிக் கடலுக்கு மேலே சென்ற பின் அமெரிக்க போர் விமானம் எப் 22 விமானங்கள் 3 இதை சுற்றி பறந்து சுட்டு வீழ்த்தின. கிழக்கு கடல் பகுதியில் இந்த பலூன் வீழ்த்தப்பட்டது. இன்று அதிகாலை 2 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது.தெற்கு கரோலினாவில் இருக்கும் மைர்ட்டல் கடல் பகுதியில் இதன் பாகங்கள் விழுந்துள்ளன. அமெரிக்க கடலோர பாதுகாப்பு படை இந்த பாகங்களை மீட்டு உள்ளது.

பாகங்கள் மீட்பு
இந்த பாகங்களை மீட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பாகங்கள் இதுவரை 4920 அடி நீளத்திற்கு இருந்துள்ளது. 1500 மீட்டர் அளவு கொண்டதாக இருந்துள்ளது. இது கிடைமட்ட அளவு. அதுவே பலூன் கோளமாக இருக்கும் நிலையில் இதன் அளவு 200 அடியாக இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. அதாவது 200 அடி உயரம் கொண்ட பலூன் விண்ணில் பறந்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை 133 அடியாகும். அப்படி என்றால் இந்த பலூனின் உயரம் எவ்வளவு இருந்திருக்கும் என்று யூகித்துக்கொள்ளுங்கள். அதோடு இதில் இருக்கும் பாகங்கள் எல்லாம் ஒரு பிரைவேட் ஜெட் அளவிற்கு அதிக எடை கொண்டதாகவும், பலூன் ஒரு குட்டி உளவு விமானத்தை தூக்கி சென்றது போல தூக்கி சென்றதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications