நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

8 நாடுகளில்.. ஒரே நேரத்தில் பஞ்சர் செய்யப்பட்ட 900 கார்கள்.. வேலையை காட்டிய "கும்பல்".. ஏன் தெரியுமா

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகம் முழுக்க 8 நாடுகளில் கடந்த 48 மணி நேரத்தில் ஒரு கும்பல் 900 வாகனங்களை பஞ்சர் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

உலகம் முழுக்க தற்போது மக்கள் புதுப்புது விஷயங்களுக்காக போராட்டங்களை நடத்த தொடங்கி உள்ளனர். உதாரணமாக வீகன் உணவு சாப்பிடும் நபர்கள்.. உலகம் முழுக்க பல நாடுகளில் பால் பண்ணைகளை முற்றுகையிட்டு போராட்டம் செய்து வருகின்றனர்.

பால் கடைகளில் இருக்கும் பால்களை கொட்டி போராட்டம் செய்து வருகின்றனர். விலங்குகளையும், விலங்குகளில் இருந்து வரும் எதையும் மக்கள் சாப்பிட கூடாது என்று கூறி போராட்டம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான் புதுவிதமான போராட்டம் ஒன்று காலநிலை மாற்ற போராளிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ஆன்லைன் சூதாட்ட தடுப்புச் சட்டம்- ஒப்புதல் தராத ஆளுநரைக் கண்டித்து டிச.1-ல் போராட்டம் - கி.வீரமணி ஆன்லைன் சூதாட்ட தடுப்புச் சட்டம்- ஒப்புதல் தராத ஆளுநரைக் கண்டித்து டிச.1-ல் போராட்டம் - கி.வீரமணி

காலநிலை

காலநிலை

காலநிலை மாற்ற போராளிகள் உலகம் முழுக்க அதிகம் ஆகி உள்ளனர். பூமியின் காலநிலை மாறிக்கொண்டு இருக்கிறது. எதிர்காலம் நிர்மூலம் ஆகிக்கொண்டு இருக்கிறது. அதனால் மக்கள் வாகனங்களை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். பொதுப்போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும். கார்களில் செல்வதை குறைக்க வேண்டும், என்று கூறி போராட்டம் செய்து வருகிறார்கள். சில இடங்களில் இந்த போராட்டங்கள் எல்லை மீறி சென்று கலவரங்களாக கூட மாறிக்கொண்டு இருக்கின்றன. நாளுக்கு நாள் காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராட்டங்கள் உச்சம் தொட்டு வருகின்றன.

8 கார்கள்

8 கார்கள்

இந்த நிலையில்தான் உலகம் முழுக்க 8 நாடுகளில் கார்களை பஞ்சர் ஆக்கும் போராட்டத்தில் காலநிலை மாற்ற போராளிகள் ஈடுபட்டு உள்ளனர். அதன்படி கடந்த 48 மணி நேரத்தில் இவர்கள் உலகம் முழுக்க சுமார் 900 கார்களை பஞ்சர் செய்துள்ளனர். நெதர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, சுவீடன், ஆஸ்திரேலிய, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இவர்கள் கார்களை பஞ்சர் செய்துள்ளனர். மக்கள் பயன்படுத்தும் கார்கள் பார்க்கிங்கில் இருந்தால் அதை யாருக்கும் தெரியாமல் சென்று பஞ்சர் செய்துள்ளனர்.

அதிக கார்பன்

அதிக கார்பன்

அதிக கார்பனை வெளியேற்றும் பழைய வாகனங்களை தேடி கண்டுபிடித்து இவர்கள் பஞ்சர் செய்துள்ளனர். இந்த கார்கள் காற்று மாசுபடுதலை ஏற்படுத்துகிறது. இதனால் காலநிலை மாற்றம் அடைகிறது. இந்த கார்கள் அதிக அளவு கார்பனை வெளியேற்றுகின்றன. அதனால் இந்த கார்களை பஞ்சர் தெரிவித்து உள்ளனர். உலக அளவில் 48 மணி நேரத்தில் அதிக அளவில் காலநிலை மாற்றத்திற்காக பஞ்சர் செய்யப்பட்ட கார்கள் இவைதான்.கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கணக்கிட்டால் உலகம் முழுக்க இவர்கள் 10 ஆயிரம் வாகனங்களை பஞ்சர் செய்துள்ளனர். தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையிலும், கார் பயன்பாட்டை குறைக்கும் வகையிலும் இவர்கள் கார்களை இப்படி பஞ்சர் செய்து வருகின்றனர்.

எஸ்யுவி

எஸ்யுவி

எஸ்யுவி கார்கள்தான் அதிக மாசை ஏற்படுத்துகிறது. அதனால்தான் அந்த கார்களை குறி வைத்து பஞ்சர் செய்கிறோம் என்று காலநிலை மாற்ற எதிர்ப்பு போராளிகள் தெரிவித்து உள்ளனர். மக்கள் பொதுப்போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் காற்று மாசு குறையும் என்று இவர்கள் லோரிகை விடுத்துள்ளனர். கார்களை மக்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இப்படி போராடுகிறோம். இனி பலரும் கார் வாங்கும் முன் ஏன்டா வாங்குகிறோம் என்று யோசிக்க வைப்பதற்காக இப்படி போராடுகிறோம். இனி தொடர்ந்து இப்படி பஞ்சர் செய்வோம் காலநிலை மாற்ற போராளிகள் தெரிவித்து உள்ளனர்.

English summary
Climate change protesters punctured 900 cars in 48 hours in 8 countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X