கவனமாக இருங்கள்.. டிசம்பரிலேயே எச்சரித்த சிஐஏ.. 12 முறை சென்ற உளவு ரிப்போர்ட்.. டிரம்ப் செய்த தவறு!
கொரோனா வைரஸ் அமெரிக்காவிற்கு வரும் முன்பே அது தொடர்பாக 12 முறை அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு சிஐஏ எச்சரிக்கை விடுத்துள்ளது.
நியூயார்க்: கொரோனா வைரஸ் அமெரிக்காவிற்கு வரும் முன்பே அது தொடர்பாக 12 முறை அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு சிஐஏ எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தற்போது அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது .
Recommended Video
உலகிலேயே மிக மோசமான வைரஸ் தாக்குதலாக கொரோனா வைரஸ் தாக்குதல் மாறியுள்ளது. அமெரிக்காவில்தான் இந்த வைரஸ் நாளுக்கு நாள் வேகம் அடைந்து வருகிறது.உலகிலேயே கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. அங்கு நாளுக்கு நாள் கேஸ்களில் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. 1039591 பேர் அமெரிக்காவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனா மீது பழி
அமெரிக்காவில் இப்படி கொரோனா பரவ சீனாதான் காரணம் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்து வருகிறார். அதேபோல் உலக சுகாதார மையம் மீதும் டிரம்ப் கடுமையான புகார்களை வைத்து வருகிறார். ஆனால் டிரம்ப் தன்னுடைய தவறுகளை மறைக்கவே இப்படி செய்கிறார் என்று விமர்சனங்கள் எழ தொடங்கி உள்ளது. கொரோனாவிற்கு எதிரான அவரின் தோல்வியை சமாளிக்கவே டிரம்ப் இப்படி பழியை பிறர் மீது போடுகிறார் என்று விமர்சனங்கள் எழ தொடங்கி உள்ளது.

12 முறை எச்சரித்தனர்
இந்த நிலையில் இந்த விமர்சனங்களுக்கு வலுவூட்டும் விதமாக தற்போது முக்கியமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி கொரோனா வைரஸ் அமெரிக்காவிற்கு வரும் முன்பே அது தொடர்பாக 12 முறை அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு சிஐஏ எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கடந்த டிசம்பர் மாதம் இறுதியிலேயே கொரோனா தொடர்பான முதல் எச்சரிக்கையை சிஐஏ அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அனுப்பி உள்ளது. ஆனால் டிரம்ப் இதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

கடுமையான பிடிபி ரிப்போர்ட்
தினமும் அமெரிக்க அதிபரின் கண்பார்வைக்கு செல்லும் பிடிபி ரிப்போர்ட்கள் மூலம் சிஐஏ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.அதன்பின் ஜனவரி மாதம் 6 முறை இதேபோல் பிடிபி ரிப்போர்ட்கள் மூலம் அதிபருக்கு கொரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. பிப்ரவரி மாதம் 5 முறை இதேபோல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் இரண்டு ரிப்போர்ட்கள், அதிபர் டிரம்ப் உடனடியாக செயல்பட வேண்டும் என்று கோரிக்கையுடன் சென்றுள்ளது.

சீனா மறைகிறது
அதோடு கொரோனா குறித்து சீனா முக்கியமான விஷயங்களை மறைக்கிறது. கொரோனா பரவல் குறித்து சீனா உண்மைகளை மறைக்கிறது. இதில் பல விஷயங்கள் வெளியே வரவில்லை. அமெரிக்கா இதில் உடனடியாக செயல்பட வேண்டும். கொரோனா வைரசின் தாக்கம் மிக மோசமாக இருக்கும். ஆனால் சீனா இதை தொடர்ந்து மறைத்து வருகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு சிஐஏ எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதையும் கேட்கவில்லை
ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதை எதையும் கவனத்தில் கொள்ளவில்லை. சிஐஏ கொடுத்த எச்சரிக்கை எதையும் அதிபர் டிரம்ப் கருத்தில் கொள்ளவே இல்லை. பிப்ரவரி இறுதி வரை இந்த கொரோனா குறித்து டிரம்ப் எதுவும் பெரிதாக கவலையடையவில்லை. அதேபோல் மிக முக்கியமாக கொரோனா எளிதாக குணமாகிவிடும். மாயமாக கொரோனா மறைந்துவிடும் என்றெல்லாம் அதிபர் டிரம்ப் பேட்டி அளித்து வந்தார்.

என்னவெல்லாம் செய்தார்
அதேபோல் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி மீது தாக்குதல் நடத்தியது. இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டது என்று அதிபர் டிரம்ப் மிகவும் பிசியாக இருந்தார். அப்போதெல்லாம் கொரோனா குறித்து டிரம்ப் எதுவும் பேசவில்லை, கவலை அடையவில்லை. இதுதான் அமெரிக்கா கொரோனாவிற்கு எதிரான போரில் தோல்வி அடைய காரணம் என்று கூறுகிறார்கள். இதை மறைக்கத்தான் டிரம்ப் மற்றவர்கள் மீது பழியை போடுவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications