கேட்டபடி மருந்தை அனுப்பிவிட்டார்கள்.. மோடி ரொம்ப நல்லவர்.. அவர் கிரேட்.. அதிபர் டிரம்ப் திடீர் பல்டி

பிரதமர் மோடி மிகவும் நல்லவர், அமெரிக்கா கேட்டபடி அவர் இந்தியாவில் இருந்து ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அமெரிக்காவிற்கு அனுப்பி உள்ளார் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பிரதமர் மோடி மிகவும் நல்லவர், அமெரிக்கா கேட்டபடி அவர் இந்தியாவில் இருந்து ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அமெரிக்காவிற்கு அனுப்பி உள்ளார் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ஒரே மருந்து தான்... இந்தியாவிடம் கோரிக்கை வைக்கும் உலக நாடுகள்

    உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கு எதிராக ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். மலேரியாவிற்கு எதிரான இந்த மருந்து கொரோனாவை ஓரளவு கட்டுப்படுத்த உதவுகிறது. இந்தியா மிக அதிக அளவில் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது.

    இதனால் இந்தியாவிடம் இருந்து பல்வேறு நாடுகள் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை ஏற்றுமதி செய்ய கோரிக்கை வைத்து வருகிறது. அமெரிக்கா அதிபர் டிரம்பும் இந்தியாவிடம் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை கேட்டு வந்தார்.

    டிரம்ப் எச்சரிக்கை

    டிரம்ப் எச்சரிக்கை

    ஆனால் இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் உள்ளிட்ட மருந்துகள் மீதான ஏற்றுமதிக்கு தடை விதித்து இருந்தது. இந்தியாவிற்கு தேவைப்படும் என்பதால் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது. ஆனால் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து கொரோனாவை கட்டுப்படுத்தும் என்று டிரம்ப் நம்புகிறார். இதனால் அவர் கடந்த வாரம் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அளிக்கும்படி கோரிக்கை வைத்தார்.

    என்ன சண்டை

    என்ன சண்டை

    ஆனால் இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மீதான தடையை நீக்காமல் இருந்தது. தொடர்ந்து இந்த தடை நீடித்தது. இதையடுத்து பேசிய டிரம்ப், நாங்கள் இந்தியாவுடன் நல்ல உறவை பேணி வருகிறோம். இந்தியா அமெரிக்காவை மதிக்கிறது. எங்களுடன் இந்தியா செய்துள்ள பொருளாதார ஒப்பந்தங்களை மதிக்க வேண்டும். ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்தால் ஓகே. இல்லையென்றாலும் ஓகேதான். ஆனால் கண்டிப்பாக இந்தியா ஏற்றுமதியை தடை செய்தால் அதற்கான பதிலடி கொடுக்கப்படும். கண்டிப்பாக கொடுக்கப்படும், என்று டிரம்ப் மிக கடுமையாக குறிப்பிட்டு உள்ளார்.

    இந்தியா பின் வாங்கியது

    இந்தியா பின் வாங்கியது

    இதையடுத்து நேற்று இந்தியா தனது ஏற்றுமதி கொள்கையை மாற்றியது. அதன்படி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை அண்டை நாடுகளுக்கும், கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வோம். அமெரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்வோம். மனித நேயத்தை அடிப்படையாக கொண்டு இந்த முடிவை எடுக்கிறோம் என்று இந்தியா கூறியது.

    ஏற்றுமதி செய்யப்பட்டது

    ஏற்றுமதி செய்யப்பட்டது

    இந்த நிலையில் நேற்று இரவே குஜராத்தில் இருந்து அமெரிக்காவிற்கு இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. 29 மில்லியன் அளவுள்ள மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. மூன்று நிறுவனங்கள் மூலம் இந்த மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. உலகில் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் ஒரே நாடாக இந்தியா மாறியுள்ளது.

    நன்றி சொன்னார்

    நன்றி சொன்னார்

    இந்த நிலையில் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அனுப்பிய இந்தியா குறித்து அதிபர் டிரம்ப் பேட்டி அளித்துள்ளார். அதில், இந்தியாவில் இருந்து மில்லியன் கணக்கில் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து வாங்கி உள்ளோம். 29 மில்லியனுக்கும் அதிகமாக மருந்து வாங்கி உள்ளோம். நான் பிரதமர் மோடியிடம் பேசினேன். இப்போது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நல்லவர், அவர் சிறப்பானவர், என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று கூறிய டிரம்ப் ஒரே நாளில் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி உள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+