ஈரான், இத்தாலியில் வேகமாக பரவும் கொரோனா.. மீளும் சீனா.. உலகம் முழுக்க 114422 பேர் பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
நியூயார்க்: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.உலகம் முழுக்க 114,422 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக உலக நாடுகளில் தீவிரம் அடைந்து வருகிறது. சீனாவில்தான் அதிகபேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதலில் மத்திய சீனா, ஹாங்காங் பகுதியில் இந்த வைரஸ் பரவி வந்தது. இந்த வைரஸ் கொரோனா வைரஸ் எனப்படும் வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது ஆகும்.இந்த வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் உள்ள மீன் மார்க்கெட் ஒன்றில் உருவானது என்று கூறப்படுகிறது.

உலகம் முழுக்க
உலகம் முழுக்க 114,422 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்.உலகம் முழுக்க 4,027 கொரோனாவால் பலியாகி உள்ளனர்.சீனாவில் 80,754 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். சீனாவில் 3,136 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். சீனாவில் இந்த வைரஸ் பரவும் வேகம் கொஞ்சம் குறைந்துள்ளது. முன்பை விட சீனாவில் தற்போது வைரஸ் கொஞ்சம் மெதுவாக பரவி வருகிறது.

புதிய நபர்கள்
சீனாவில் புதிதாக நோய் தாக்கி அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தினமும் 400, 500 பேர் என்று பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக 50-70 பேர் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள். சீனா மிக அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அங்கு மொத்தமாக வுஹன், ஹூபேய் இரண்டும் மூடப்பட்டது. இதுதான் அங்கு வேகம் குறைய முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள்.

வேறு எங்கு
சீனாவிற்கு அடுத்து இத்தாலியில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இத்தாலிதான் இதில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இத்தாலியில் 9,172 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பலி எண்ணிக்கை 463 தாண்டி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அடுத்து இன்னொரு பக்கம் தென் கொரியாவில்தான் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென் கொரியாவில் மொத்தம் 7,513 பேருக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது.

பலி எண்ணிக்கை
அங்கு 54 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இந்த வைரஸ் தாக்குதலால் 7,161 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு மொத்தம் 237 பேர் இதனால் பலியாகி உள்ளனர். இதில் இரண்டு எம்பிக்கள் அடக்கம். ஈரான் இதனால் அங்கு வைரஸை கட்டுப்படுத்த புதிய முறைகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. ஆனால் அங்கு இந்த செயல்கள் எதுவும் பலன் அளிக்கவில்லை.

இந்தியா எப்படி
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. லடாக்கில் இருவருக்கும், தமிழகத்தில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் ஐந்து பேருக்கு வைரஸ் தாக்கியுள்ளது. டெல்லியில்தான் அதிக பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இத்தாலி பயணிகள் 16 பேருக்கு வைரஸ் தாக்கியுள்ளது. பெங்களூரில் ஒருவருக்கு வைரஸ் தாக்கியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications