இப்போது முடியாது.. இன்னும் நீண்ட தூரம் உள்ளது.. கொரோனா குறித்து உலக சுகாதார மையம் கடும் எச்சரிக்கை!
கொரோனா வைரஸ் தாக்குதல் இன்னும் முடியவில்லை, இதன் முடிவு இன்னும் வெகு தொலையில் இருக்கிறது என்று உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்: கொரோனா வைரஸ் தாக்குதல் இன்னும் முடியவில்லை, இதன் முடிவு இன்னும் வெகு தொலைவில் இருக்கிறது என்று உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க கொரோனா காரணமாக 3,035,110 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 209,369 பேர் பலியாகி உள்ளனர். 915,037 பேர் இதில் இருந்து குணமடைந்து உள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா காரணமாக மொத்தமாக 988,928 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாளை இந்த எண்ணிக்கை 10 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் கொரோனா காரணமாக மொத்தம் 55,459 பேர் பலியாகி உள்ளனர்.

வேகம் எடுக்கும்
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் இன்னும் முடியவில்லை, இதன் முடிவு இன்னும் வெகு தொலைவில் இருக்கிறது. நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். இப்போதைக்கு இந்த பிரச்சனை முடியாது. இந்த வைரஸ் காரணமாக இன்னும் பலர் பாதிக்கப்படுவார்கள். இது இனிமேல் வேகம் எடுக்க வாய்ப்புள்ளது. நாம் கவனமாக இருக்க வேண்டும்.

அதிகம் பாதிப்பு
முக்கியமாக கொரோனா வைரஸ் தாக்காத சாதரண நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குழந்தைகள் அதிக அளவில் இதனால் பாதிக்கப்பட போகிறார்கள். இதுதான் எங்களை அதிக கவலையடைய வைக்கிறது. நாம் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது. ஆப்ரிக்கா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, மற்றும் ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.

பெரும் அதிர்ச்சி
இதுதான் இன்னும் அதிர்ச்சி அளித்துள்ளது. சில நாடுகளில் இப்போதான் வைரஸ் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. சில நாடுகளில் கொரோனா காரணமாக ஏற்படும் மரணங்கள் இரட்டிப்பு ஆக தொடங்கி உள்ளது. ஒரே வாரத்தில் பல நாடுகளில் மரணங்கள் இரட்டிப்பு ஆகியுள்ளது. உலகம் முழுக்கவே பல நாடுகளில் வைரஸின் வேகம் அதிகாரிய்க்க தொடங்கி உள்ளது.

மருந்துகள்
அதேபோல் பல நாடுகளின் இந்த வைரசுக்கான மருந்துகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 21 நாடுகளில் போதுமான எதிர்ப்பு சக்தி மருந்துகள் இல்லை. எங்களுக்கு இது தொடர்பாக புகார்கள் வந்துள்ளது. அதேபோல் இன்னொரு பக்கம் மலேரியாவும் ஆப்ரிக்க நாடுகளில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது இன்னும் அச்சத்தையும் அழுத்தத்தையும் அதிகரித்துள்ளது, என்று உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications