4.5 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. உலகம் முழுக்க 83 லட்சம் பேர் பாதிப்பு.. இந்தியாவிற்கு 4வது இடம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலக அளவில் கொரோன காரணமாக பலி எண்ணிக்கை 4.5 லட்சத்தை தாண்டி இருக்கிறது. உலகம் முழுக்க மொத்தம் 450,450 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

Recommended Video

    குணமானவர்களின் ரத்தத்தில் கொரோனாவை தடுக்கும் Antibody.. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

    உலகம் முழுக்க கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. இப்போதுதான் பல நாடுகளில் கொரோனா கேஸ்கள் உச்சம் எடுக்க தொடங்கி உள்ளது. இனி வரும் நாட்களில் கேஸ்கள் இன்னும் அதிகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Coronavirus: Total cases in world reaches 83 lakhs, World saw 4.5 lakhs deaths so far

    உலகம் முழுக்க மொத்தமாக 8,392,442 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 4,378,962 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று உலகம் முழுக்க 141,218 கேஸ்கள் புதிதாக பதிவாகி உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 2,233,854 கொரோனா கேஸ்கள் இதுவரை பதிவாகி உள்ளது .

    அங்கு புதிதாக 25265 கேஸ்கள் பதிவாகி உள்ளது. 119,940 பேர் கொரோனா காரணமாக அமெரிக்காவில் பலியாகி உள்ளனர். பிரேசிலில் இதுவரை 960,309 கேஸ்கள் பதிவாகி உள்ளது. நேற்று மட்டும் புதிதாக 31,475 கேஸ்கள் பதிவாகி உள்ளது.46665 பேர் அங்கு இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

    நாள்தோறும் பிரேசிலில்தான் உலக அளவில் அதிக கேஸ்கள் வருகிறது. ரஷ்யாவில் மொத்தம் 553,301 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7478 பேர் அங்கு பலியாகி உள்ளனர். 7843 கேஸ்கள் அங்கு புதிதாக ஏற்பட்டு இருக்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4ம் இடத்தில் உள்ளது.

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,103 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது.இதுவரை இல்லாத அளவிற்கு 24 மணி நேரத்தில் அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளது.இந்தியாவில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 367,264 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 341 பேர் பலியாகி இருக்கிறார்கள்.12,262 பேர் மொத்தமாக இந்தியாவில் பலியாகி உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+