அதிவேகமாக பரவுகிறது.. உலகிலேயே மிக மோசமானது.. டெல்டா வகை கொரோனா குறித்து உலக சுகாதார மையம் வார்னிங்
நியூயார்க்: இதுவரை மக்களிடையே பரவிய கொரோனா வைரஸ் வகைளிலேயே டெல்டா வகை உருமாறிய கொரோனாதான் அதிக வேகமும், ஆபத்தும் கொண்டது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. '
Recommended Video
இந்தியாவில் இரண்டாம் அலை உச்சம் தொட முக்கிய காரணமாக இருந்தது டெல்டா வகை கொரோனா ஆகும். இந்தியாவில் முதலில் இந்த டெல்டா வகை கண்டறியப்பட்டால் தற்போது பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இந்த வகை பரவி வருகிறது.
வேகமாக பரவுதல், நீண்ட நாள் பாதிப்பை ஏற்படுத்துவது, அதிக மரணங்களை ஏற்படுத்துவது என்று டெல்டா வகை கொரோனா அதிக ஆபத்து கொண்டதாக உள்ளது.

டெல்டா
இந்த நிலையில் டெல்டா வகை கொரோனா குறித்து எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார மைய இயக்குனர் டெட்ராஸ் ஆதனாம் கடும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். அதில், உலகம் முழுக்க 85 நாடுகளில் டெல்டா வகை கொரோனா பரவி உள்ளது. இதுதான் பரவியதிலேயே மிக வேகமானது. மிக மோசமானது. உலகம் முழுக்க இதை பற்றிய கவலை நிலவுகிறது.

டெல்டா அச்சம்
உலக சுகாதார மையமும் டெல்டா வகை கொரோனா குறித்து கவலை எழுப்பி உள்ளது. மற்ற ஆல்பா, காமா, பீட்டா வகை கொரோனாவை விட டெல்டா அதிகம் பரவ கூடியது. உலகம் முழுக்க ஆல்பா 170 நாடுகளிலும்., பீட்டா 119 நாடுகளிலும், காமா 71 நாடுகளிலும், டெல்டா 85 நாடுகளிலும் பரவி உள்ளது. டெல்டா 85 நாடுகளில் வேகமாக பரவி உள்ளது.

கடந்த 2 வாரம்
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் புதிதாக 11 நாடுகளில் டெல்டா வகை தோன்றியுள்ளது. இதனால் ஆல்பாவை கண்டிப்பாக டெல்டா முந்தும். உலகில் அதிக நாடுகளில் பரவிய வகையாக டெல்டா உருவெடுக்கும். டெல்டா அவ்வளவு வேகமாக வளரும் திறன் கொண்டது.

பரவும்
வேக்சின் போடாத மக்கள் இடையே இந்த வைரஸ் வேகமாக பரவுகிறது. அதேபோல் லாக்டவுன் திறக்கப்பட்ட நாடுகளிலும், சமூக கட்டுப்பாடுகள் குறைவாக உள்ள நாடுகளிலும் இந்த வைரஸ் அதிகம் பரவுகிறது. இது அதிக கேஸ்களை ஏற்படுத்துவதால், அதிக பேர் மருத்துவமனைகளில் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. பலி எண்ணிக்கையை இது அதிகரிக்கிறது.

கொரோனா
கொரோனா பரவ பரவ அது புதிய வகையை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அது வைரஸின் இயல்பு. பரவலை தடுப்பது மட்டுமே புதிய வகையை உருவாக்குவதையும் தடுக்கும். வேக்சின் மட்டுமே தீர்வு. அணைத்து மக்களுக்கும் இரண்டு டோஸ் வேக்சின் போட தாமதம் செய்வதும் கூட, வைரஸின் வேகமான வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம், என்று உலக சுகாதார மைய இயக்குனர் டெட்ராஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications