ரஷ்யா, சீனாவை விடுங்க.. டிரம்ப் சத்தமே இல்லாமல் நடத்தும் மிகப்பெரிய போர்.. களமிறக்கப்பட்ட ஏவுகணைகள்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் சத்தமே இல்லாமல் போர் ஒன்றை நடத்திக்கொண்டு இருக்கிறார்.. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவின் போரை நிறுத்திய அவர் வேறு ஒரு பக்கம் சத்தமே இன்றி போரை நடத்திக்கொண்டு இருக்கிறார்.
இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் ஈரான் நேரடியாக தலையிட்டு உள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி போராளி குழுக்கள் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஈரான், ஏமனில் இயங்கி வரும் இந்த ஹவுதி காஸாவில் இயங்கும் ஹமாஸ் படைகளுக்கு ஆயுதங்களை அனுப்பி வருகிறது. ஈரான் - அமெரிக்கா இடையே ஏமனில் மோதல் ஏற்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களாக ஏமன் கடற்கரைக்கு அருகே உலவிக்கொண்டு இருந்த அமெரிக்க கப்பல்கள் மீது ஈரானிய ஆதரவு ஹவுதி போராளிகளால் தாக்குதல் நடத்த முயற்சி செய்யப்பட்டது. இவை அமெரிக்காவின் கப்பல்கள் இடைமறித்து ஏவுகணைகள் மூலம் அழிக்கப்பட்டன.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் முதல்முறையாக அமெரிக்காவின் கப்பல் ஒன்று தாக்கப்பட்டு உள்ளது. ஜிப்ரால்டர் ஈகிள் என்ற கப்பலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. கப்பலில் உள்ளவர்களுக்கு சிறிய அளவிலான காயங்கள் அல்லது குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டு உள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஈரான் ஆதரவு ஹவுதிகள் நவம்பர் முதல் கப்பல்களைத் தாக்கி வருகின்றனர்.
இதற்கு எதிராக அமெரிக்கா - யு .கே சேர்ந்து கூட்டு தாக்குதல்களை கடந்த வாரம் தொடங்கியது. இந்த நிலையில்தான் தற்போது ஹவுதி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
ஹமாஸ் மீது எச்சரிக்கை
இந்த நிலையில்தான் ஹமாஸ் படைகளுக்கு டிரம்ப் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பணயக்கைதிகள் அனைவரையும் இப்போது விடுவிக்கவும், பின்னர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.. இப்போதே விடுவியுங்கள்.. நான் சொல்வதை கேளுங்கள்.. இல்லையென்றால் நீங்கள் சாக போகிறீர்கள்.. நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் கதை முடிந்துவிட்டது என்று அர்த்தம் என்று, டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
முதல் கட்டமாக 42 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. 33 இஸ்ரேல் பிணை கைதிகள் இதன் மூலம் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளனர். மொத்தமாக 96 பேர் ஹமாஸ் மூலம் இஸ்ரேலில் பிடிக்கப்பட்டனர். இதில் 34 பேர் பலியாகிவிட்ட நிலையில் அடுத்த சில நாட்களில் 33 பேர் வரை முதல் கட்டமாக விடுவிக்கப்படுவார்கள்.
ஆனால் மீதம் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் நரகமே உங்கள் மீது
இறங்கும் என்று ஹமாஸுக்கு டிரம்ப் நேற்று எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதற்கு பதிலடி தந்த ஹமாஸ்.. உங்கள் மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் அடிபணிய முடியாது. நரகம் பூமிக்கு வந்தால் வரட்டும். உங்கள் மிரட்டலை நாங்கள் ஏற்க மாட்டோம். அதற்கு அடிபணிய மாட்டோம் என்று ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அக்டோபர் 7, 2023 தாக்குதலின் போது இஸ்ரேலில் இருந்து கைப்பற்றப்பட்ட 94 பணயக்கைதிகளை ஹமாஸ் மற்றும் அவர்களின் இணை அமைப்புகள் இன்னும் சிறையில் வைத்திருக்கிறார்கள் என்று இஸ்ரேலிய அரசாங்கம் நம்புகிறது, அவர்களில் குறைந்தது 34 பேர் இறந்துள்ளனர். இதில்தான் 33 பேர் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
டிரம்ப் நடத்தும் போர்
ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பின் மீது அமெரிக்கா ஏவுகணை மாறும் விமானப்படை தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 1 வாரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் 107 பேர் பலியாகி வரை உள்ளனர். இதற்கு கடுமையான பதிலடி தரப்படும் என்று ஹவுதி எச்சரித்து உள்ளது. அமெரிக்காவின் போர் கப்பல்கள், போர் விமானங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.
அமெரிக்காவையே அல்லோகலப்படுத்த போகிறோம். கவனமாக இருங்கள் என்று ஹவுதி எச்சரித்து உள்ளது. சமீபத்தில்தான் ஹவுதி அமைப்பை சர்வதேச தீவிரவாத குழுவாக அறிவித்தது அமெரிக்கா. ஹவுதி - அமெரிக்கா இடையே செங்கடலில் கடுமையான மோதல் நிலவி வருகிறது.
3 ஆண்டுக்குமுன் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து அந்த அமைப்பு நீக்கப்பட்டது. மீண்டும் தற்போது அமெரிக்க அதிபர் பிடன் முன்னெடுப்பில் ஹவுதி தீவிரவாத லிஸ்டில் சேர்க்கப்பட்டு உள்ளது. தற்போது அதிபர் டிரம்ப் அவர்கள் மீது ஏவுகணை, விமானப்படை தாக்குதலை நடத்தி வருகிறார். கடுமையான தாக்குதல்களை இரண்டு தரப்பும் சேர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இதனால் சர்வதேச அளவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.ஏமன் விடுதலை தொடங்கி இஸ்ரேல் போருக்கு எதிராக அந்த அமைப்பு போராடி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications