எமர்ஜென்சிக்கு ரெடி.. அமெரிக்காவில் முதல் நாளே.. டிரம்ப் போடும் 100 கையெழுத்துகள்.. ரொம்ப முக்கியம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்.. நாளை ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் நாளிலேயே 100 முக்கியமான உத்தரவுகளை டிரம்ப் பிறப்பிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சட்டவிரோத அகதிகள்:

நாடு முழுவதும் தங்கி உள்ள சட்டவிரோத அகதிகளை வெளியேற்ற டிரம்ப் உத்தரவிட வாய்ப்பு உள்ளது. இதற்கான அறிவிப்பு முதல் நாளே வரும். முதல் நாளே இதற்கான கையெழுத்தை டிரம்ப் போட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நாட்டில் எமர்ஜென்சி கொண்டு வர கூட தயார் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

donald trump inauguration donald trump


கல்வித்துறை மாற்றம்:

அமெரிக்காவின் மத்திய கல்வித் துறையை மூட அவர் முடிவு செய்துள்ளாராம். முதல் நாளே இதற்கான கையெழுத்து வரும் வாய்ப்பு உள்ளது. அனைத்து கல்விப் பொறுப்பையும் மாநிலங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளாராம். எதிர்காலத்தில் ஜனநாயக கட்சி வென்றால் கூட.. குடியரசு கட்சி மாநிலங்களில் எந்த விதமான கல்வி ரீதியிலான மாற்றங்களையும் செய்ய கூடாது என்பதால் டிரம்ப் இந்த முடிவை எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதை தேர்தலின் போதே வாக்குறுதியாக டிரம்ப் அறிவித்து இருந்தார். டிரம்பின் அஜெண்டா 47 பிரச்சாரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேபோல் பள்ளிகளில் இடதுசாரி கொள்கைக்கு அனுமதி இருக்காது. அது தொடர்பாக கல்வி முறைகளை கொண்டு வர தடை விதிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவிக்க உள்ளாராம்.

டிரம்ப்பின் குடியரசு கட்சி தற்போது அமெரிக்காவில் வலுவாக உள்ளது. முக்கியமாக ஒரு கவுண்டியில் கூட இந்த முறை கமலா ஹாரிஸ் டிரம்ப்பை விட அதிக வாக்குகளை வெல்லவில்லை. இதை பயன்படுத்திக்கொண்டு வலதுசாரி கொள்கையை நாடு முழுக்க தீவிரமாக கொண்டு செல்ல டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்கு மாநில அளவில் பள்ளிகளில் மாநில நிர்வாகத்தின் பவர் இருக்க வேண்டும். இதற்காகவே கல்வியை மாநில பிரிவிற்கு கொண்டு செல்ல டிரம்ப் முடிவு செய்துள்ளாராம். தமிழ்நாட்டில் பல வருடங்களாக கோரிக்கையாக வைக்கப்படும் இந்த விஷயத்தை அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் கொண்டு வந்திருப்பது.. பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.


பாலின சட்டங்கள்:

அதிபராக பதவி ஏற்ற முதல் நாளே LGBTQ பிரிவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்துள்ளார். அதன்படி "திருநங்கைகளின் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துவேன்" என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்து உள்ளார். அமெரிக்காவில் தற்போது பல பாலின கொள்கைகள் அதிகரித்து வருகின்றன. ஆண், பெண், மூன்றாம் பாலினம் தாண்டி பல பாலின பிரிவுகள் அது தொடர்பான கொள்கைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய சட்டங்களை கொண்டு வர உள்ளாராம்

ஆண், பெண், மூன்றாம் பாலினம் தாண்டி உலகம் முழுக்க பல பாலின கொள்கைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. அமெரிக்காவில் இந்த பல பாலின கொள்கைகள் உச்சம் பெற்றுள்ளன. முக்கியமாக ஆணாக உணரும் பெண்கள், பெண்ணாக உணரும் ஆண்கள், இருபாலினமாக உணரும் ஆண்கள் என்று பல கொள்கைகள் உருவாகி உள்ளன. தங்கள் "பலர்" என்று குறிப்பிட விரும்பும் பலரும் உள்ளனர்.

உலகம் முழுக்க முப்பாலினம் என்பது தாண்டி தற்போது LGBTQ என்ற பதம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக LGBT, LGBT+, LGBTQ+, மற்றும் LGBTQIA+ என பல வார்த்தைகளால் இந்த பதம் அழைக்கப்படுகிறது. அதன்படி லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபாலினம், திருநங்கைகள் மற்றும் மாற்று பாலின பிரிவுகளை கொண்டவர்களை அழைக்க இந்த பதம் பயன்படுத்தப்படும். அமெரிக்க போன்ற நாடுகளில் இந்த LGBTQ பிரிவினர் அதிகம் உள்ளனர். அங்கே கொள்கைகள் இன்னும் வெளிப்படையாக இருப்பதால் LGBTQ பிரிவினர் இன்னும் வெளிப்படையாக இயங்க முடிகிறது.

அதோடு இப்போது மக்கள் தங்களை வேறு பாலினமாக அடையாளம் செய்யும்.. வேறு உயிரினமாக அடையாளம் செய்யும் வழக்கம் ஏற்பட்டு உள்ளது. உதாரணமாக ஒரு ஆண் தன்னை பெண்ணாக அடையாளம் செய்யும் வழக்கம் போலவே.. ஒரு பெண்.. தன்னை ஒரு பறவையாக.. டிராகனாக அடையாளப்படுத்திக்கொள்ளும் நிலையும் உள்ளது. அமெரிக்காவில் இந்த வழக்கம் உச்சம் அடைந்து உள்ளது. பலர் இதை பின்பற்றும் நிலையில்.. ஒருசாரார் இதை கடுமையாக எதிர்க்கின்றனர். முக்கியமாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சியினர் இந்த கொள்கைகளை கடுமையாக எதிர்க்கின்றனர்.


4 நாடுகளை இணைக்க முடிவு:

அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்ப் 4 முக்கியமான நாடுகளை அல்லது வேறு நாட்டின் பகுதிகளை தனது நாட்டுடன் இணைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ராணுவ படைகளை களமிறக்கவும் தயார் என்று அவர் அறிவித்து உள்ளார்.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும். அதோடு கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பாக அவர் கடந்த சில நாட்களாகவே பேசி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் உடனே இந்த பகுதிகளை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும். பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்து இரண்டும் அமெரிக்காவுடன் இருக்க வேண்டிய பகுதிகள். இந்த பகுதிகளை அமெரிக்காவிற்கு கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் அதற்காக படைகளை கூட அனுப்புவேன்.

தேவைப்பட்டால் மொத்த ராணுவத்தை கூட அனுப்புவேன். கனடாவை பொறுத்தவரை அப்படி இல்லை. அவர்களுக்கு பொருளாதார அழுத்தம் தருவேன். மெக்சிகோ அமெரிக்காவின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். செஸ் விளையாடுவது போலத்தான். இவர்களுக்கும் பொருளாதார தடை உள்ளிட்ட அழுத்தங்களை கொடுப்பேன். அவர்கள் அமெரிக்காவின் புதிய மாகாணங்களாக மாற வேண்டும்.

பணிகள் தொடங்கும்: பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்து பகுதிகளை நான் அதிபர் ஆனதும் அமெரிக்காவுடன் இணைக்க பணிகளை செய்வேன் என்று கூறி உள்ளார். இந்த பகுதிகள் பாதுகாப்பு ரீதியாக அமெரிக்காவிற்கும் மிகவும் முக்கியம் என்பதை மறக்க வேண்டாம். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்த நேரம் பார்த்து கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியை மீண்டும் மேற்கொண்டு உள்ளாராம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இதற்காக அந்த நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கும் சட்டங்களை டிரம்ப் கொண்டு வரலாம்.

அதேபோல் வேறு சில போட்டி நாடுகள் மீதும் கூடுதல் வரி விதிக்கும் சட்டங்களை டிரம்ப் கொண்டு வரும் வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+