கொரோனாவை தடுக்கும் நாசி வழி வேக்சின்.. எலிகளிடம் நடத்திய சோதனை வெற்றி.. புதிய நம்பிக்கை!
நியூயார்க்: கொரோனா வைரசுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று நாசி வழி செலுத்தும் வேக்சினை ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த வேக்சின் ஆராய்ச்சி தற்போது எலிகளிடம் வெற்றிபெற்றுள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிராக உலகம் முழுக்க பல்வேறு வேக்சின்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வேக்சின்கள் ஊசி முறையில் செலுத்தப்படும் வேக்சின்கள் ஆகும். நாசி வழி செலுத்தும் nasal vaccine வகைகள் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
இது தொடர்பான ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க பல நாடுகளில் நடந்து வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜியா பல்கலைக்கழகம் நாசி வழி வேக்சின் ஒன்றை சோதனை செய்து வருகிறது.

எலிகள்
எலிகள் மற்றும் சிறு சிறு விலங்குகளில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் அந்த நாசி வழி வேக்சின் சிறப்பாக செயல்பட்டுள்ளது. எலிகளை கொரோனா பரவலில் இருந்து நாசி வழி வேக்சின் தடுத்துள்ளது. அதோடு மற்ற எலிகளுக்கும் பரவாமல் தடுத்துள்ளது. உடலில் கொரோனா ஆண்டிபாடியை உருவாக்கி உள்ளது. இதற்கு முன் இன்ப்ளூயன்சா போன்ற நோய்களுக்கு எதிராக இதேபோல் நாசி வழி வேக்சின் முறை பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்ப்ரே
மூக்கில் சிறிய குழாய் மூலம் ஸ்ப்ரே செய்யும் வேக்சின் ஆகும் இது. இது தொடர்பாக ஜார்ஜியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பால் மேக்ரே அளித்த பேட்டியில், உலகம் முழுக்க பலர் வேக்சின் போடாமல் இருக்கிறார்கள். எல்லோருக்கும் வேக்சின் கிடைக்க வேண்டுமானால் புதிய வேக்சின்களை கண்டுபிடிக்க வேண்டும். நாசி வழி வேக்சின்கள் பயன்படுத்த எளிதானது.

கண்டுபிடிப்பு
நாங்கள் கண்டுபிடித்த வேக்சினை எளிதாக பல இடங்களுக்கு எடுத்து செல்ல முடியும். அதோடு எளிதாக உங்கள் வீட்டு குளிர்சாதன பெட்டியிலே 3 மாதங்கள் வரை கூட வேக்சினை வைக்க முடியும். எங்கள் நாசி வழி வேக்சினை ஒரே ஒரு டோஸ் போட்டால் கூட போதும். கொரோனா உங்களுக்கு ஏற்படாமல் தடுப்பதோடு, உங்களால் பிறருக்கு பரவுவதையும் இது தடுக்கு, என்று கூறியுள்ளார்.

அதிகம்
அதோடு மக்கள் அதிகமாக வேக்சின் எடுத்துக்கொள்ள எங்கள் நாசி வழி வேக்சின் உதவும். parainfluenza virus 5 (PIV5) என்று காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸை எடுத்து அதை மட்டுப்படுத்தி, அதில் கொரோனா வைரஸின் ஸ்பைக் புரோட்டின்களை செலுத்தி, வேக்சின் தயாரித்து இருக்கிறோம். இதை உடலில் செலுத்துவதன் மூலம் உடலின் எதிர்ப்பு சக்தி கொரோனாவின் ஸ்பைக் புரோட்டினை தாக்கி அழிக்கும் திறன் பெறும்.

பொதுவான வைரஸ்
PIV5 என்பது சாதாரண காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் ஆகும். இதை பயன்படுத்தி வேக்சின் உருவாக்கி உள்ளோம். இதற்கு முன் நாங்கள் மெர்ஸ் பாதிப்பிற்கு எதிராக இதேபோல் வேக்சின் உருவாக்கி அதில் வெற்றிபெற்றோம்.
Recommended Video

மூக்கு
மூக்கின் வழிதான் கொரோனா வைரஸ் மூச்சு குழலுக்குள் செல்லும் என்பதால் நாசி வழி வேக்சின் ஆரம்பித்திலேயே தடுப்பாற்றலை ஏற்படுத்தும். பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்கும். அதோடு கொரோனா ஆண்டிபாடி உள்ளவர் பிறருக்கு கொரோனாவை பரப்புவதையும் இது தடுக்கும், என்று ஜார்ஜியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பால் மேக்ரே குறிப்பிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications