3ம் உலகப்போர் மாதிரி.. பல நாடுகளை நசுக்க போகிறது.. 24 மணி நேரத்தில்.. டிரம்ப் எடுக்கும் கொடூர முடிவு
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்க உள்ள வர்த்தக போர் அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்க உள்ளது. நாளை நள்ளிரவில் இந்த வர்த்தக போர் அமலுக்கு வர உள்ளது. இந்த வர்த்தக போர் இந்தியா மீதும் தொடுக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்து உள்ளது. Reciprocal tariffs என்று அழைக்கப்படும் பரஸ்பர கட்டணங்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இதன் மூலம் இந்தியா நேரடியாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன நடந்தாலும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பதில் வரி விதிக்காமல் விட மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வரி தொல்லையில் இருந்து அமெரிக்காவை விடுவிக்காமல் விட மாட்டேன். கண்டிப்பாக வரி தொல்லையில் இருந்து அமெரிக்காவை விடுவிப்பேன். அமெரிக்கா மீது கூடுதல் வரி விதிக்கும் நாடுகள் மீது நாங்களும் வரி விதிப்போம். ஏப்ரல் 2 வரைதான் டைம். அதற்குள் வரியை குறைக்காத நாடுகள் மீது நாங்கள் கண்டிப்பாக கடுமையான வரிகளை விதிப்போம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், நாங்கள் விரைவில் பரஸ்பர கட்டணங்களை அறிவிப்போம். ஏனென்றால் அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம். அவ்வளவுதான்.. விஷயம் மிகவும் எளிமையானது. இந்தியா அல்லது சீனா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி.. நாடு எதுவாக இருந்தாலும், அவர்கள் என்ன கட்டணம் வசூலித்தாலும், நாங்கள் நியாயமாக இருக்க விரும்புகிறோம்.. நாங்களும் அதே கட்டணம் வசூலிப்போம்.. அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம் அவ்வளவுதான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வர்த்தக போர் என்றால் என்ன?
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பதிலடி வரிகளை விதிக்க போவதாக அறிவித்து உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிக அளவில் இந்திய எஃகு பயன்படுத்தப்படும் நிலையில், டிரம்ப்பின் இந்த முடிவு இந்தியாவின் எஃகு ஏற்றுமதியை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்க வர்த்தகர்கள் வேறு நாட்டு எஃகு பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச அரசியலில் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3-6 மாதங்களில்.. இந்திய பொருளாதாரமே பாழாகிவிடும்.. டிரம்ப் வர்த்தக போர்.. ப.சிதம்பரம் வார்னிங்
இந்த வர்த்தக போர் என்பது உலகப்போர் போல ஆயுதங்களை பயன்படுத்தும் போர் அல்ல.. இதனால் நேரடியாக உயிர் இழப்புகள் ஏற்படாது. ஆனால் அதே அளவிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஆயுத போர் மூலம் நிர்வாக பிரச்சனை வரும், உலக பொருளாதாரம் சரியும், மக்கள் வேலைகளை இழப்பார்கள், இருக்கிற துறைகள் சரிந்து புதிய துறைகள் உருவாகும், பல வளர்ந்த நாடுகள் சரியும், உலக நாடுகள் இடையே உறவுகள் கசக்கும், உற்பத்தி பாதிக்கும், ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கும். இதெல்லாம் ஆயுத போரில் மட்டுமன்றி... டிரம்ப் தொடங்க உள்ள வர்த்தக போரிலும் நடக்கும் அபாயம் உள்ளது. பக்கவிளைவுகள் ஒரே மாதிரிதான் இருக்கும்.
சமாளிக்கும் இந்தியா
இதை சமாளிக்க இந்தியா பின்வரும் அஸ்திரத்தை கையில் எடுக்க முடிவு செய்துள்ளதாம் .அமெரிக்காவின் பொருட்களுக்கான வரியை குறைக்க ஆலோசனை செய்து வருகிறதாம்.
ரசாயனங்கள் கொள்முதலை இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அதிகம் மேற்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து கூடுதல் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதாம். சோயாபீன், பால், வாகனங்கள், மருத்துவ கருவிகள் மற்றும் விமானங்கள் , எலக்ட்ரானிக்ஸ், ஹைடெக் இயந்திரங்கள், ஜவுளி உள்ளிட்ட துறைகளில் அமெரிக்காவிடமிருந்து அதிகமான பொருட்களை வாங்குவது குறித்து இந்தியா பரிசீலிக்கலாம் என்று கூறப்படுகிறது.
பரஸ்பர வரிகளை விதிக்கும் அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டத்தால் இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள்தான் அதிக ஆபத்துகளை சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் மார்கன் ஸ்டான்லி முதல் நோமுரா ஹோல்டிங்ஸ் இன்க் ஆகியோர் எச்சரித்து உள்ளனர்.
இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரண்டு நாடுகளும் அமெரிக்க மீது அதிக வரிகளை விதிக்கின்றன. 10-25 சதவிகிதம் வரை பல பொருட்கள் மீது இரண்டு நாடுகளும் அமெரிக்கா மீது விதிக்கின்றன. இப்போது பரஸ்பர விதிகள் காரணமாக இதே அளவிலான விதிகளை இந்தியா, தாய்லாந்து மீது அமெரிக்கா விதிக்கும். இப்போது 10%க்கும் கீழ்தான் இந்தியா, தாய்லாந்து பொருட்கள் மீது அமெரிக்கா விதிக்கிறது. அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா விதிக்கும் சராசரி விகிதம், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியை விட 10 சதவீத புள்ளிகளுக்கும் அதிகம் ஆகும்.
டிரம்ப்பின் விதி காரணமாக இந்தியா , தாய்லாந்து பொருட்கள் விற்பனை குறையும் . இதனால் இப்போதுதான் ஏற்றுமதியில் வேகம் எடுக்கும் இரண்டு நாடுகளும் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும். நாங்கள் மற்ற நாடுகளை சமமாக நடத்த விரும்புகிறோம், என்று டிரம்ப் எச்சரித்து உள்ளார். இறக்குமதி - ஏற்றுமதி வரியில் டிரம்ப் கண்டிப்பானவர். இந்தியா இறக்குமதி வரியை குறைக்கவில்லை என்றால்.. டிரம்ப் வரியை ஏற்றுவார். இதனால் இந்தியாவில் பொருட்கள் உயரலாம். .












Click it and Unblock the Notifications