இனி பாகிஸ்தான், சீனா உள்ளேயே.. ரகசியமாக நுழையலாம்.. இந்தியாவிற்கு அமெரிக்கா தரும் "மிருதன்" எஃப்-35!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடனான இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு இந்தியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் ஸ்டெல்த் தொழில்நுட்பம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணையும். இதன் மூலம் எஃப்-35 போர் விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு பல்வேறு சாதகங்கள் ஏற்படும்.
F-35 என்பது அமெரிக்கா உருவாக்கிய ஒரு நவீன மற்றும் Stealth போர் விமானம் (Stealth Fighter Jet) ஆகும். இது ரேடார் கண்ணில் மண்ணை தூவி பயணிக்க கூடிய Stealth Technology திறனைக் கொண்டுள்ளது, அதாவது எதிரியின் ரேடாரில் எளிதாக கண்டுபிடிக்க பிடிக்க முடியாது. புதிய வகை எஃப்-35 இப்போது லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-35 லைட்னிங் II என்று அழைக்கப்படும். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், இஸ்ரேல், நெதர்லாந்து, ஐரோப்பிய நாடுகள் போன்றவை F-35 ஐ தங்கள் ராணுவத்திற்கு பயன்படுத்துகின்றன.

ஒற்றை இருக்கை, ஒற்றை எஞ்சின், சூப்பர்சோனிக் ஸ்டெல்த் ஸ்ட்ரைக் ஃபைட்டர்களைக் கொண்ட அமெரிக்க போர் விமான வகை ஆகும். டாக் பைட், தாக்குதல் ஆகிய இரண்டிற்கும் வடிவமைக்கப்பட்ட ஒரு மல்டிரோல் போர் விமானம் ஆகும் இது.
எஃப்-35 போர் விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு பின்வரும் சாதகங்கள் ஏற்படும்:
1. இதன் மூலம் இந்திய போர் விமானப்படையில் ஸ்டெல்த் தொழில்நுட்பம் இணையும்.
2. பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளில் ஸ்டெல்த் போர் விமானங்கள் ரகசியமாக சென்று தாக்குதல் நடத்த முடியும்.
3. 3 விதமான பயிற்சி - நிலம், கடல், ஆகாயம் என மூன்று விதமான போர்களுக்கும் பயன்படுத்தலாம். இதனால் போர் நேரங்களில் எளிதாக தாக்குதல்களை நடத்த முடியும்.
4. மிகவும் வேகமானது - மணிக்கு 1900 கிமீ வரை பயணிக்கலாம். இதனால் அண்டை நாடுகளுக்கு சென்று வேகமாக தாக்கிவிட்டு திரும்பி வர முடியும்.
5. உயர்ந்த தொழில்நுட்பம் - தானாகவே டேட்டாவைப் பகிர்ந்து கொள்ளும் AI மற்றும் சென்சார்கள் கொண்டது. மிகப்பெரிய ஸ்கிரீன் கொண்ட காக்பீட் காரணமாக நொடிக்கு நொடி தகவல்களை பெற முடியும்.
6. உலகின் மிகவும் முன்னேறிய போர் விமானங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. எதிரிகளுக்கு தெரியாமல் தாக்குதல் நடத்தவும், வேகமாக செயல்படவும், துல்லியமாக தாக்கவும் வல்லது.
7. ரேடார் பாதுகாப்பு - எதிரியின் ரேடாரில் கண்டுபிடிக்க முடியாத Stealth Technology கொண்டது என்பதால் போர் நேரங்களில் வசதியாக இருக்கும்.
8. இதனால் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல்கள் நடத்துவது எளிதாகும்.
9. F-35 இந்த காலத்திற்கேற்ற அதிநவீன போர் விமானம் என்பதால், பல நாடுகள் இதை வாங்க ஆர்வமாக உள்ளன.
10. F-35A - சாதாரண ரன்வேயில் இயங்கும் (Air Force) F-35B - குறுகிய தூரத்தில் பறந்து செல்ல கூடியது (Navy) F-35C - ஏவுகணை கப்பல்களில் இருந்து பறக்கும் வகை (Aircraft Carrier). ஆகிய வகைகள் உள்ளன. இந்த 3 வகைகளிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விமானங்களை அமெரிக்கா இந்தியாவிடம் விற்பனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications