உங்களால்தான் பிரச்சனையே! புடினுக்கு போனை போட்டு.. நெருக்கிய மோடி? நேட்டோ சொன்ன ஷாக் தகவல்
நியூயார்க்: அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக இந்திய பிரதமர் மோடி ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளார். ரஷ்யா - உக்ரைன் போரை முடிவிற்கு கொண்டு வரும்படி மோடி புடினுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார் என்று நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மோடி - புடின் இருவரும் போனில் பேசியதாக நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே கூறி உள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 27 முதல் இந்தியா மீது டிரம்ப் 25% பரஸ்பர வரிகளையும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக இந்தியா மீது கூடுதலாக 25% வரிகளையும் விதித்துள்ளார். இதனால் இந்தியா மீதான அமெரிக்காவின் மொத்த வரிகள் 50% ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா அமெரிக்கா மோதல்
டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.
இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தும் வரை இந்த வரி விதிப்பு தொடரும். இதை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று டிரம்ப் கூறி உள்ளார்.
நேட்டோ அமைப்பு தலையீடு
இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு எதிராக விதித்துள்ள வரிகள், ரஷ்யாவிற்கு எதிராக திரும்ப தொடங்கி உள்ளன. ரஷ்யாவிற்கு இந்தியா பிரஷர் போட தொடங்கிவிட்டது என்று நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே கூறி உள்ளார்.
நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே அளித்துள்ள பேட்டியில், அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக இந்திய பிரதமர் மோடி ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளார். ரஷ்யா - உக்ரைன் போரை முடிவிற்கு கொண்டு வரும்படி மோடி புடினுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
டொனால்ட் டிரம்ப் விதித்த இந்தத் தடைகள் இந்தியாவை பெரிதும் பாதிப்பதாகவும், இதன் காரணமாக பிரதமர் மோடி விளாடிமிர் புடினிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் மார்க் ரூட்டே குறிப்பிட்டு உள்ளார். இந்தியா ரஷ்யாவிற்கு ஆதரவளிப்பதால் டிரம்ப் வரிகளை விதித்துள்ளார். இதனால் இப்போது மோடி புடினை கேள்வி கேட்க தொடங்கி உள்ளார்.
உக்ரைன் போர்
உக்ரைன் போர் நின்றால்தான் அமெரிக்கா வரி விதிப்பை நிறுத்தும். இதனால் உக்ரைன் போரை நிறுத்துவதற்கு டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். இதன் காரணமாகவே மோடி புடினுக்கு போன் செய்துள்ளார்.
நான் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறேன், இந்தியா ரஷ்யாவுடன் உடன் நிற்கிறது. ஆனால் உங்கள் திட்டம்தான் என்ன? எங்களுக்கு வரி சுமை அதிகம் உள்ளது. நாங்கள் இப்போது அமெரிக்காவிலிருந்து 50% வரிகளை எதிர்கொள்கிறோம். போர் தொடர்பாக நீங்கள் என்ன முடிவு செய்துள்ளீர்கள்? போர் காரணமாகவே நாங்கள் வரியை எதிர்கொள்கிறோம் என்று புடினிடம் மோடி பேசி உள்ளார். இதனால் புடினுக்கு பிரஷர் ஏற்பட்டு உள்ளது, என்று நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.
ஆனால் மோடி - புடின் பேசியதாக நேட்டோ கூறும் இந்த தகவலை, இந்தியா ரஷ்யா இரண்டும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி












Click it and Unblock the Notifications