கவனமாக இருங்கள்.. இல்லையென்றால்.. அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு.. மத்திய அரசு அவசர மெசேஜ்
சென்னை: அமெரிக்காவில் இருக்கும் இந்திய மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக இந்திய அரசு முக்கியமான மெசேஜ் ஒன்று அனுப்ப உள்ளதாம். அமெரிக்காவில் படிக்கும் இந்திய ஆராய்ச்சி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்தும், மற்றொரு மாணவர் கனடாவுக்கு தானாக நாடுகடத்தப்பட்டதை அடுத்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் படிக்கும் குடிமக்கள் அமெரிக்க சட்டங்களுக்கு இணங்குமாறு இந்திய அரசாங்கம் அறிவுறுத்தும் விதமாக மெசேஜ் அனுப்ப உள்ளது. ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டதாரியான பதர் கான் சூரி, பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் பங்கேற்றதற்காக அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அதேபோல் கொலம்பியா பல்கலைக்கழக மாணவி ரஞ்சினி சீனிவாசன் ஹமாஸ் ஆதரவு பிரச்சாரத்தை மேற்கொண்டதற்காக விசா ரத்து செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு உள்ளார். ரஞ்சினி சீனிவாசன் கனடாவிற்கு நாடு கடத்தப்பட்டு உள்ளார் .
அவசர மெசேஜ்
இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்காவில் இருக்கும் இந்திய மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக இந்திய அரசு முக்கியமான மெசேஜ் ஒன்று அனுப்ப உள்ளதாம். அமெரிக்காவில் படிக்கும் குடிமக்கள் அமெரிக்க சட்டங்களுக்கு இணங்குமாறு இந்திய அரசாங்கம் அறிவுறுத்தும் விதமாக மெசேஜ் அனுப்ப உள்ளது.

இந்தியாவிற்கு வெளிநாட்டினர் வரும்போது, அவர்கள் நமது சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு கட்டுப்படுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அதேபோல், இந்திய மக்கள் வெளிநாட்டில் இருக்கும்போது, அவர்களும் அங்கே உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்று மெசேஜ் அனுப்பப்பட உள்ளதாம். அமெரிக்காவின் சட்டங்களை, அவர்களின் விதிகளை உறுதியாக கடைபிடிக்க வேண்டும். அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்கள் ஏதேனும் சிரமங்களை எதிர்கொண்டால் அவர்களுக்கு இந்திய தூதரகங்கள் உதவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய மாணவர்கள் எண்ணிக்கை
ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களின் லிஸ்டை கணக்கெடுக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அரசின் இந்த திட்டத்திற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
1. அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் பலர் படித்து முடித்து முறைகேடாக over stay செய்கிறார்கள்.
2. அதாவது படிப்பிற்கான விசா முடிந்து.. அதன் அவகாசம் முடிந்தும் பலர் முறைகேடாக over stay செய்கிறார்கள்.
3. சிலர் படிப்பு விசா வாங்கி பார்ட் டைம் வேலை பார்க்கிறார்கள்.
4. இதை இந்தியர்கள் பலர் பாக்கெட் மணி பெற வேண்டும் என்று செய்கிறார்கள்.
5. இவர்களை எல்லாம் டிரம்ப் வரும் காலத்தில் கணக்கெடுத்து ஆக்சன் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பணிகள் நடக்கும்
அமெரிக்காவில் அத்துமீறி தங்கி உள்ள இந்தியர்களை வெளியேற்ற அதிபர் டிரம்ப் முக்கியமான சில திட்டங்களை வகுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக என்றே சில எஸ்ஓபி பின்பற்றப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா பின்பற்ற உள்ள எஸ்ஓபி: அதாவது பின்பற்ற பட உள்ள செயல்பாட்டு வழிமுறை:
அமெரிக்கா முதலில் அங்கே தங்கி உள்ள விசா இல்லாத இந்தியர்களை கணக்கெடுக்கும். படிப்பிற்கு விசா வாங்கி வேலை பார்ப்பவர்களை கணக்கு எடுக்கும். சுற்றுலா விசா வாங்கி கூடுதல் நாட்கள் தங்கி வேலை செய்பவர்களை கணக்கு எடுக்கும்.
எச் 1 பி விசா காலாவதி ஆனவர்களை கணக்கு எடுக்கும். இனி இவர்கள் கைது செய்யப்படுவார்கள். அதன்பின் இந்திய அரசிடம் இரண்டு கோரிக்கைகளை வைக்கும். ஒன்று இந்திய விமானத்தில் அவர்களை நாட்டிற்கு அழைத்து செல்வது அல்லது அமெரிக்கா ராணுவ விமானத்தை உங்கள் நாட்டிற்குள் அனுமதியுங்கள் நாங்கள் வந்து விட்டுவிடுகிறோம் என்று கூறுவது.. உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications