50,000 அடி உயரத்தில் இருந்து.. போடப்பட்ட "பங்கர் பஸ்டர்" குண்டுகள்! அமெரிக்கா அட்டாக்! ஷாக் தகவல்கள்
டெஹ்ரான்: குண்டுகளின் தாய் என்று செல்லமாக அழைக்கப்படும் பங்கர் பஸ்டர் குண்டுகளான GBU-57 குண்டுகள் ஈரான் மீது போடப்பட்டு உள்ளது. அமெரிக்கா ராணுவம் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் இந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
GBU-57 என்பது இதன் அதிகாரப்பூர்வப் பெயர். இது கைடட் பாம் யூனிட் (Guided Bomb Unit) என்பதைக் குறிக்கிறது. 57 என்பது வடிவமைப்பின் வகை ஆகும்.
GBU-57 குண்டுகள் என்றால் என்ன?
GBU-57 ஐ அமெரிக்காவால் மட்டுமே திறம்பட பயன்படுத்த முடியும். ஏனென்றால் இதற்கு ஸ்டெல்த் அமைப்பு தேவை. அதேபோல் இந்த எடையை சுமக்கும் அளவிற்கு பாமர் வகை விமானங்கள் தேவை. B-2 ஸ்பிரிட் மூலம் மட்டுமே இதை செய்ய முடியும். மிசோரியில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்தில் (Whiteman Air Force Base) இருந்து B-2 ஸ்பிரிட் (B-2 Spirit) ரக ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம் மூலம் இதற்காக நேற்று மாலை ஏவப்பட்டது.

வைட்மேனில் இருந்து 8க்கும் மேற்பட்ட குண்டுகள் கொண்ட ஸ்டெல்த் விமானங்கள் ஏவப்பட்டதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
GBU-57 செயல்படும் விதம்
GBU-57 என்பது இதன் அதிகாரப்பூர்வப் பெயர். இது கைடட் பாம் யூனிட் (Guided Bomb Unit) என்பதைக் குறிக்கிறது.
எளிமையாகச் சொன்னால், ஒரு இலக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை எப்படி தாக்குவது என்று உறுதி செய்த பின், அதை தாக்க வேண்டிய சரியான நேரத்தில் தாக்குவார்கள்.
துல்லியமான வழிகாட்டலுக்கு செயற்கைக்கோள் பயன்படுத்தப்படுகிறது. மிக அதிக உயரத்தில், அதாவது சுமார் 50,000 அடி உயரத்தில் இருந்து அதிகமான குண்டு வீசப்படுவதால் கடுமையான சேதங்கள் இருக்கும். அதிக உயரம் காரணமாக இந்த குண்டுகள் அதிக இயக்க ஆற்றலைப் பெறுகிறது. இந்த ஆற்றல் குண்டினை ஆழமாக ஊடுருவிச் செல்ல உதவுகிறது. இதன் மூலம் 200- 300 அடிக்கு கீழ் உள்ள இலக்குகளை கூட தாக்க முடியும்.
5,300 பவுண்டுகள் எடையுள்ள வெடிபொருட்கள் இதில் பயன்படும். இதன் காரணமாக பூமிக்கு அடியில் உள்ள ஆழத்தில் இருக்கும் அணு உலை அமைப்புகளை, இலக்குகளை தாக்க முடியும். இப்படித்தான் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது.
இஸ்ரேல் திட்டம்
ஈரானின் ஃபோர்டோவ் யுரேனியம் செறிவூட்டும் தளத்தை அழிக்க இஸ்ரேலிடம் திட்டமிட்டு வந்தது. ஆனால் இஸ்ரேலிடம் போதுமான பதுங்கு குழி தகர்ப்பு வெடிகுண்டுகளோ அல்லது பெரிய குண்டுவீச்சு விமானங்களோ இல்லை. ஃபோர்டோவ் தளம் மலையின் கீழ் ஆழமாக கட்டப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவிடம் ஈரானுக்கு பறந்து சென்று தாக்கக்கூடிய விமானங்கள் மற்றும் வெடிகுண்டுகள் உள்ளன.
இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்காவை அதிகாரபூர்வமாக போருக்கு அழைத்தது இஸ்ரேல். ஈரான் மீதான தாக்குதலில் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று இஸ்ரேல் அமெரிக்காவிற்கு அதிகாரபூர்வ கோரிக்கை விடுத்தது. இதில் அமெரிக்கா உதவி செய்யும் பட்சத்தில் அது உலகப்போராக வெடிக்கும் அபாயங்கள் இருந்த நிலையில்தான் இஸ்ரேல் கோரிக்கையை ஏற்று ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் நாட்டில் உள்ள 3 அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அதிபர் டிரம்ப் உறுதி செய்தார். இதனால் உலகப்போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், "ஈரானில் உள்ள மூன்று அணு sites மீது நாங்கள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடித்துவிட்டோம். ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன.
ஃபோர்டோவில் உள்ள முக்கியமான தளத்தில் முழு அளவிலான வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அனைத்து விமானங்களும் பத்திரமாக திரும்புகின்றன. இந்த சாதனையை நிகழ்த்திய அமெரிக்க வீரர்களுக்கு எனது வாழ்த்துகள். உலகில் இதை செய்யக்கூடிய ராணுவம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. அமைதிக்கு இதுவே சரியான நேரம்! இந்த விஷயத்தில் நீங்கள் காட்டிய கவனத்திற்கு நன்றி" என்று கூறியுள்ளார்.
-
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
ஈரான் போர் முடிவுக்கு வருகிறது! திங்கட்கிழமைக்குள் விடிவுகாலம்.. முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய'ரீசெட்'! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி












Click it and Unblock the Notifications