இறந்தவரின் "தொடைக்குள்" நெளிந்து வெளியே வந்த பாம்பு.. போஸ்ட் மார்ட்டம் ரூமில் அலறி ஓடிய பெண்.. ஹய்யோ
இறந்தவர் சடலம் ஒன்றில் இருந்து உயிருடன் பாம்பு வெளியே வந்துள்ளது
நியூயார்க்: சடலங்களுக்குள் உயிரினங்கள் வாழுமா? அதிலும் உயிருடன் காணப்படுமா? என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது. காரணம், ஒரு சடலத்தின் தொடையில் இருந்து, பாம்பு ஒன்று உயிருடன் வெளிவந்துள்ளது.
நெஞ்சை தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சில நேரத்தில், வித்தியாசமான அல்லது அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும், இணையவாசிகளை கவர்ந்துவிடும்..

ராஜநாகம்
இதில் பாம்புகள் சம்பந்தப்பட்ட வீடியோக்களும் எந்நேரமும் வைரலாகி வருகிறது.. அதற்கு காரணம், பாம்பை கண்டு அனைவருக்கும் பீதி இருப்பதால், அந்த வீடியோ மேலும் கிலியை தந்துவிடுவதுதான்.. அப்படிப்பட்ட பாம்பு ஒருவரின் காதுக்குள் போய்விட்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஒரு பெண்ணின் காதுக்குள் பாம்பு நுழைந்துவிட்டது.. வழக்கமாக சிறு குழந்தைகள், கல்லையோ, அல்லது நாணயம் போன்ற வேறு ஏதாவது சிறிய பொருளையோ விழுங்கி விடுவார்கள்.. அல்லது காதில் தெரியாமல் போட்டுக்கொள்வார்கள்.

காதுக்குள்ளே பாம்பு
ஆனால், ஒரு பெண்ணின் காதுக்குள் எப்படி பாம்பு என்பதுதான் விந்தையாக இருந்தது.. அந்த வீடியோவை நம்பவும் முடியவில்லை.. நம்பாலும் இருக்கவும் முடியவில்லை.. காரணம், அந்த பெண் பாம்பு காதுக்குள் நுழைந்ததுமே, டாக்டரிடம் சென்றுள்ளார்.. டாக்டரும், ஒரு சிறிய கொரடு கொண்டு வந்து, அந்த பாம்பை மெல்ல வெளியே எடுக்கிறார்.. அந்த வீடியோவில் இது அப்பட்டமாக பதிவாகி இருந்த்து.. காதுக்குள் பாம்பு போகும் வரை அந்த பெண்ணுக்கு அது எப்படி தெரியாமல் போனது? என்ற கேள்வியை இணையவாசிகள் கேட்டாலும் அதற்கு சரியான பதில் இதுவரை கிடைக்கவில்லை.

மலைப்பாம்பு
உயிருடன் இருக்கும் நபரின் காதுக்குள்ளேயே பாம்பு நுழைந்தது அதிர்ச்சியை தந்துள்ளது என்றால், இறந்தவர் உடலுக்குள் பாம்பு நுழைந்தது எவ்வளவு அதிர்ச்சியை ஏற்படுத்தும்? அப்படித்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.. சம்பந்தப்பட்ட பெண்ணே, தன்னுடைய நேரடி அனுபவத்தை சொல்லி உள்ளார்.. அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில், எப்போதுமே மலைப்பாம்புகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.. இந்த பாம்புகளை முழுமையாக அகற்ற, கடந்த ஆகஸ்ட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.. ஆனாலும், அந்த பணி முழுமையடையவில்லை.

போஸ்ட்மார்ட்டம்
இங்குள்ள மேரிலாண்ட் என்ற பகுதியை சேர்ந்தவர் ஜெசிக்கா லோகன்.. 31 வயதாகிறது.. டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டார்.. ஆனால், குடும்பத்தில் வறுமை காரணமாக, டாக்டருக்கு படிக்க முடியவில்லை. அதனால், போஸ்ட் மார்ட்டம் வேலை செய்வது இவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், கடந்த 9 வருடங்களாகவே, பிரேத பரிசோதனை செய்யும் வேலையை செய்தும் வருகிறார்.. பொதுவாக, இந்த வேலையை பெண்கள் விரும்பி ஏற்பதில்லை.. எனினும், வித்தியாசமான வேலையாக இருப்பதால் இது தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் ஜெசிக்கா சொல்கிறார்.

அலறல்
ஒருநாள், போஸ்ட் மார்ட்டம் செய்து கொண்டிருந்தபோது, வித்தியாசமான நிகழ்வு நடந்ததாக சொல்கிறார். இறந்த நபரின் சடலத்தை ஜெசிக்கா போஸ்ட் மார்ட்டம் செய்து கொண்டிருந்தாராம்.. அப்போது, அந்த சடலத்தின் தொடைப்பகுதியில் உயிரோடு இருக்கும் பாம்பு ஒன்று நெளிந்துள்ளது. இதனை பார்த்ததுமே பதறி அடித்துக் கொண்டு போஸ்ட் மார்ட்டம் ரூமில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளார் ஜெசிக்கா.. அந்த பாம்பை பிடித்த பிறகு தான் வெளியே வருவேன் என்றும் அலறி உள்ளார்.. இறந்த நபரின் உடலுக்குள் ஒரு பாம்பு எப்படி உயிருடன் இருந்திருக்கும்? என்ற குழப்பமும், பீதியும் பலருக்கும் சேர்ந்துவிட்டது.

தொடைக்குள் பாம்பு
இறந்த அந்த நபரின் உடல், ஒரு ஓடையில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாம். இறந்த பிறகு அந்த உடலுக்குள் பாம்பு புகுந்து இருக்கலாம் என்கிறார்கள்.. உடல்கள் சூடாகவும் ஈரமாகவும் இருந்ததால் பூச்சிகள் ஊர்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கும் என்கிறார்கள்.. ஆனால், வறண்ட சடலத்தில் அப்படி எதுவும் இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. அப்படி ஓடையில் இறந்து கிடந்த நபரின் உடலை ஜெசிக்கா போஸ்ட் மார்ட்டம் செய்தபோதுதான், பாம்பு வெளியே வந்திருக்கிறது என்கிறார்கள்.. இறந்தவர் உடலில் இருந்து உயிருடன் பாம்பு வெளிப்பட்ட விஷயம், ஜெசிக்காவை மட்டும் இல்லாமல், இதனை கேள்விப்படும் பலரையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications