செவ்வாய் கிரகத்தில் நீர்! பனிக்கட்டியாக இல்ல.. நீராகவே இருக்கு! புதிய ஆய்வில் வெளியான முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதாக ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், இந்த நீர் துருவப்பகுதியில் மட்டும் இல்லாமல், எல்லா இடங்களிலும் நிலத்தடியில் பரவி கிடக்கிறது என்று தற்போது புதிய ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன.

சூரிய குடும்பத்தில் உள்ள 8 கோள்களில் பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் இருக்கின்றன. இருப்பினும் மற்ற கிரகங்களில் உயிர்கள் இருக்கிறதா? என்கிற ஆய்வை நாம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். அதிலும் குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வை தீவிரப்படுத்தி வருகிறோம். ஏனெனில் செவ்வாய் கிரகம் ஏறத்தாழ பூமியை போன்றே இருக்கிறது. ஆனால் அங்கு வளிமண்டலம் கிடையாது. எனவே உயிரினங்கள் வாழ தகுதியற்ற கோளாக இது இருக்கிறது.

Mars Space Water


இருப்பினும் இங்கு எந்த மாதிரியான உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும்? என்கிற கேள்வியுடன் நாம் ஆய்வை தொடர்ந்து வருகிறோம். எதிர் காலத்தில் இந்த ஆய்வுகள் இன்னும் தீவிரமாக இருக்கும். இந்த ஆய்வின் ஒரு பகுதியாக செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதையும் கண்டு பிடித்திருக்கிறோம்.

கலிபோர்னியா பல்கலைக்கழக சான் டியாகோவின் ஸ்கிரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் ஓசியனோகிராஃபியின் உதவிப் பேராசிரியரான வாஷன் ரைட் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுதான் இதனை கண்டுபிடித்திருக்கிறது. இது குறித்து நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் (பிஎன்ஏஎஸ்) இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது.

அதாவது, கடந்த 2008ம் ஆண்டு செவ்வாயை ஆய்வு செய்ய ஃபீனிக்ஸ் லேண்டர் அனுப்பப்பட்டிருக்கிறது. இதுதான் செவ்வாயின் துருவ பகுதிகளில் பனிகட்டி வடிவத்தில் நீர் இருப்பதை கண்டுபிடித்து சொன்னது. எனவே மேலதிக ஆய்வுக்காக 2018ல் இன்சைட் லேண்டர் செவ்வாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது 2022ல் தனது வேலையை நிறுத்திக்கொண்டது. அதாவது செயலிழந்துவிட்டது.

இப்படி இருக்கையில் இந்த இன்சைட் லேண்டர் சேகரித்த தகவல்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த லேண்டர் செவ்வாயில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை துல்லியமாக உணர்ந்து, அந்த தகவலை பூமிக்கு அனுப்பி வைத்தது. இதனைதான் வாஷன் ரைட் தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

Mars Space Water


இந்த ஆய்வில் செவ்வாய் கிரகத்தின் நிலத்திற்கு அடியில், நீர் அதிக அளவில் தேங்கியிருப்பதாக கூறியுள்ளனர். ஒரு காலத்தில் செவ்வாயில் அதிக அளவு நீர் இருந்ததற்கான 100% ஆதாரங்கள் நமக்கு ஏற்கெனவே கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த நீர் எங்கு சென்றது? என்பதற்கான விடை இதுவரை தெரியாமல் இருந்த நிலையில், அவை அனைத்தும் நிலத்திற்கு அடியில் சேமிப்பாகியுள்ளது என்று தெரிய வந்திருக்கிறது.

இந்த மொத்த நீரையும் எடுத்தால், செவ்வாயில் உள்ள பள்ளத்தாக்குகளில் 1-3 கி.மீ ஆழத்திற்கு நீரை நிரப்பி, அதை பெருங்கடலாக மாற்ற முடியும். ஆனால் இந்த நீர் குடிப்பதற்கும், மனித பயன்பாட்டுக்கும் ஏற்றதா? என்பதுதான் இன்னும் தெரியவில்லை. இதற்கான ஆய்வுகள் பாசிட்டிவாக அமைந்தால் இனி வரும் நாட்களில் செவ்வாய் கிரகத்திலேயே தங்கி அங்கிருந்து மனிதர்களால் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+