பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்... நியூயார்க்கில் இந்தியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Recommended Video

நியூயார்க்: புல்வாமா தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று சில அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
United States: Indians in New York protest outside the Pakistan Consulate against #Pulwama terrorist attack pic.twitter.com/4eQO9PSY1X
— ANI (@ANI) February 23, 2019
இந்தநிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று புல்வாமா தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.
#WATCH Members of Indian community protested outside the Pakistan consulate in New York,US on 22 February, against #PulwamaTerrorAttack. pic.twitter.com/sXJCDA6jXF
— ANI (@ANI) February 23, 2019
தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்க கூடாது, தீவிரவாதத்தை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications